Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஜராஜ சோழன் காலத்தில் ஹிந்து இல்லை: அடுத்து ஆரம்பித்தார் கமல்ஹாசன்

06 அக், 2022 - 11:30 IST
எழுத்தின் அளவு:
There-was-no-Hindus-during-Rajaraja-Chola's-period-says-Kamal-Haasan

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் போன்ற படங்களை இயக்கிய வெற்றிமாறன், சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு ஆவணப்பட கலைத்திருவிழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‛‛மக்களுக்காகதான் கலை. மக்களை பிரதிபலிப்பதுதான் கலை. இந்த கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும்.

ராஜராஜ சோழன்
தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை ஹிந்து அரசனாக்குவது... இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை காட்டுகிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்''. இவ்வாறு பேசினார்.

வெற்றிமாறனின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தஞ்சை பெரிய கோயில் உட்பட ஏராளமான சிவன் கோயில்களை கட்டிய ராஜராஜ சோழன் ஹிந்து இல்லையா? சைவம், வைணவம் ஆகியவையும் ஹிந்து மதத்தை சேர்ந்தவை தான் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சென்னையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று பார்த்துவிட்டு, நடிகர்கள் விக்ரம், கார்த்தி ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

ஹிந்து மதம் இல்லை
அப்போது கமல்ஹாசனிடம் வெற்றிமாறனின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு கமல் பதிலளித்ததாவது: ஹிந்து மதம் என்கிற பெயர் ராஜராஜசோழன் காலத்தில் இல்லை. சைவம், வைணவம், சமணம் தான் இருந்தது. ஹிந்து என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர், நம்மை என்ன சொல்வது என தெரியாமல் அவர்கள் வைத்த பெயர்.. தூத்துக்குடியை டூட்டிகொரின் என சொன்ன மாதிரி.


ஆதிசங்கரர்
எங்களுக்கு மதங்கள் வெவ்வேறு இருந்தது. அதையெல்லாம் எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் என்பவர் ஷன்மத ஸ்தாபனம் என கொண்டு வருகிறார். இதெல்லாம் சரித்திரம். இந்த சரித்திரத்தை இப்பொழுது கொண்டு வர வேண்டாம். ஏனென்றால் இது சரித்திர புனைவைப்பற்றி புகழ்ந்து கொண்டிருக்கும் நேரம். இங்கு சரித்திரத்தை திணிக்க வேண்டாம். மொழி பிரச்னையை இங்க கொண்டுவரவும் வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

வெற்றிமாறன் பேச்சை பற்றிய சர்ச்சை கொஞ்சம் ஓய்ந்துக்கொண்டிருந்த நிலையில் மீண்டும் கமல்ஹாசன் புதிதாக கொளுத்தி போட்டுள்ளார். இதுவும் சர்ச்சையாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
ஆஸ்கார் விருது - பல பிரிவுகளில் போட்டியிடும் 'ஆர்ஆர்ஆர்'ஆஸ்கார் விருது - பல பிரிவுகளில் ... ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய ரம்யா ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ
07 அக், 2022 - 15:53 Report Abuse
Ravi ராஜா ராஜ சோழன் அவர் ஆட்சி செய்த காலத்தில் பிரதான ஹிந்து கடவுளான சிவனுக்கும் மற்ற பல இந்து கடவுளர்களுக்கு தனது சோழ மண்டலம் முழுவதும் பல கோவில்களை கட்டி வழிபட்டார். அவர் "சிவபாத சேகரன்" என்ற சிறப்பு பட்ட பெயரோடும் அழைக்கப்பட்டார் சிவன் இந்து கடவுள் என்றால் அவனுக்கு கோவில் கட்டி வழி பட்டவன் ஹிந்து தானே? அன்றும் இன்றும் சிவன், திருமால் எல்லோரும் இந்து கடவுள்கள் தானே? எந்த முஸ்லிமாவது அல்லது கிருத்துவனாவது சிவன், திருமால், முருகன் எல்லோரும் இந்து கடவுளர்கள் இல்லை தமிழ் கடவுள் என்று ராஜ ராஜன் கட்டிய கோவிலுக்கு வந்து வழிபடுகிறானா அல்லது அவர்களை போற்றுகிறார்களா? ராஜா ராஜன் எப்படி வாழ்ந்தானோ அல்லது கல்கி எப்படி அவனை பொன்னியின் செல்வனில் காட்டினாரோ அதை தான் படமாக எடுத்துள்ளார்கள். ராஜராஜன் சிலுவையும் அணியவில்லை பிறையும் சூடவில்லை - பெரிய பட்டை தான் போட்டிருந்தான்- பெரியகோவில் லிங்கமும் பட்டையோடுதான் காட்சியளிக்கிறது. So just mind your business Vast majority of the people like and support the movie and was widely read venerated by millions of Tamils and other people all over the world. Shed your foreign & imported ideologies, slave mentality and just be Indian and Tamilian.
Rate this:
07 அக், 2022 - 09:19 Report Abuse
விக்ரம் சினிமா அரசியல்
Rate this:
அஜய் இந்தியன் to avoid rallys for electriciy bill increased, house tax increased, land registration cost increased, most of the Govt service charge increasing parallelly, Peoples should not raising questions about various DMK election time promises ..... this most intelligents DMK is playing very this critical situation to changing people concentration on other matters. useless DMK POLITICAL PARTY PEOPLES.
Rate this:
அருண்குமார் , சென்னை கூத்தாடி தனி மனித ஒழுக்கம் இல்லாதவனிடம் நல்ல கருத்துகளை எதிர் பார்ப்பது முட்டாள்தனம் மலையை பார்த்து.. ... விட்டு விட வேண்டும் கூத்தாடியை கொண்டாடினால் இப்படி தான் பேசுவார்கள்
Rate this:
07 அக், 2022 - 05:31 Report Abuse
Tapas Vyas முதல்ல வரி ஏயழப்பு பண்ணாத. பசங்களா-அதனால தான் கட்சி ஆச்சின்னு அகில உலக அயோக்கியன் கருணாநிதியின் போலி பகுத்தறிவை பின்பற்ற வேண்டி வருகிறது-பலர் குடியைக் கெடுத்தவனுக்கு மதமோ தெய்வ பயமோ இராது-ஆகையால் இறை பயமற்றவன் மதங்களைக் குறித்மு அறிவுரை வழங்க வேண்டாம்.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in