Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவுக்கு ஜனாதிபதி விருது, 'வெந்து தணிந்தது காடு' தயாரிப்பாளரின் ஆசை

19 செப், 2022 - 13:08 IST
எழுத்தின் அளவு:
Award-to-Simbu-:-VTK-Producer-desire

சிம்பு, சித்தி இத்னானி மற்றும் பலர் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படம் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்தாலும், சிம்புவின் நடிப்பிற்கு விமர்சகர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர். வழக்கமான சிம்புவாக இல்லாமல் வேறு சிம்புவாக மாறி 'முத்து' கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற படத்திற்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், “ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். இந்தப் படம் ஹிட் இல்லை, பம்பர் ஹிட். ஒரு தயாரிப்பாளரா நான் சொல்றேன். தமிழகத்துல மட்டுமல்ல, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பைல, எல்லா ஸ்டேட்லயும் நல்லா போயிட்டிருக்கு. நாலு நாள்தான் ஆச்சி. கலெக்ஷனை சொல்ல வேணான்னு நினைக்கிறேன். நல்ல பெரிய கலெக்ஷன்ஸ் வந்திருக்கு. இந்த கலெக்ஷனை நான் எதிர்பார்க்கல. அதுக்காக நான் மகிழ்ச்சியாகல, எங்க கம்பெனில நல்ல படம் வந்திருக்குன்னு மகிழ்ச்சி.

இந்தப் படத்துல நடிச்சி சிம்பு, முத்து கதாபாத்திரமாவே வாழ்ந்திருக்காரு. அவருடைய ஒவ்வொரு சீனையும் நான் ரசிச்சிப் பார்த்தேன். நிச்சயமா இந்தப் படத்துக்கு அவருடைய நடிப்புக்கு அடுத்த வருஷம் ஜனாதிபதி விருது அவர் வாங்கியே ஆகணும். அதான் எங்களுடைய ஆசை. அதற்கான எல்லா வேலைகளையும் செய்வதற்கு எங்க நிறுவனம் காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு பத்திரிகையாளர்களும் உதவி பண்ணனும்கறது என் வேண்டுகோள். அதற்கு அவர் தகுதியானவர், நிச்சயம் கிடைத்தே ஆக வேண்டும். குழந்தையில இருந்தே நடிச்சிட்டு வராரு. இந்தப் படத்துக்காக நிறைய செஞ்சிருக்காரு,” எனப் பேசினார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் பரத் - வசந்தபாலன்16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ... ‛வாத்தி' ரிலீஸ் தேதி வந்தாச்சு ‛வாத்தி' ரிலீஸ் தேதி வந்தாச்சு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

velu - chennai,இந்தியா
20 செப், 2022 - 13:57 Report Abuse
velu எனனயா புதுசா படத்துல கிழிச்சிட்டீங்க இப்படி புஇல்டப்பு கொடுத்தே மக்கள் கிட்ட காச புடிங்கிடறிங்க
Rate this:
20 செப், 2022 - 09:55 Report Abuse
மன்மதன் யாருய்யா நீங்க எல்லாம்... எங்க இருந்து வரீங்க???முடியலடா சாமி....
Rate this:
BalaG -  ( Posted via: Dinamalar Android App )
20 செப், 2022 - 00:41 Report Abuse
BalaG திக்குமுக்காட வைக்கிறீங்க. முடியல. அழுவரதா இல்லை சிரிக்கரதான்னு தெரியல. எவ்வளவு பெரிய ஹிட்டை கொடுத்திட்டு பெரிய ஹீரோ எல்லாம் மூடிக்கிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்காங்க. 1 படம் லாபம் வந்துட்டா வாய்க்கு வந்ததெல்லாம் பேசுறதா? சிம்பு பழைய படி ஷூட்டிங் வராம சொதப்பினா இதே தயாரிப்பாளர் வேறமாதிரி பேசுவாரு.. போங்கய்யா நீங்களும் உங்க பேச்சும்
Rate this:
19 செப், 2022 - 18:16 Report Abuse
அஜய் ஜனாதிபதி விருது என்ன, ஜனாதிபதியாகவே அமர வைக்கலாமே!!!! அதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினர் ஆதரவு அளிக்க வேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in