Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்யா இல்லையேல் கேப்டன் இல்லை: சக்தி சவுந்தர்ராஜன்

07 செப், 2022 - 11:47 IST
எழுத்தின் அளவு:
Captain-movie-is-not-possible-without-Arya-says-Sakthi-soundarrajan

டிக் டிக் டிக், மிருதன், டெடி உள்ளிட்ட சயின்ஸ் பிக்ஷன் பேண்டசி படங்களை கொடுத்த சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி உள்ள கேப்டன் படம் நாளை வெளிவருகிறது. ஏலியன் சர்வைவல் திரில்லராக படம் உருவாகி உள்ளது. திங் ஸ்டூடியோவுடன் இணைந்து ஆர்யா தயாரித்துள்ளார். சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் ஆர்யா இல்லையேல் கேப்டன் படம் இல்லை என்று இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் கூறியிருக்கிறார். இதுகுறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது: ‛‛ஒவ்வொரு படத்திற்கும் ஒரு ஆரம்ப புள்ளி இருக்கும் அந்த கணத்திலிருந்தே அதன் மொத்த பயணமும் தொடங்கும். கேப்டன் படத்தை பொறுத்தவரை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடும்படியான ஒரு படைப்பை, இது வரை பார்த்திராத விஷுவல்களுடன் புதிய ஆக்சனுடன் பிரமாண்டமாக தர வேண்டுமென்பதாக இருந்தது.

முதலில் இது சாத்தியமில்லை என்றே நினைத்தேன். ஆனால் ஆர்யா தந்த ஆதரவு எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை தந்தது. என் மீது அவர் வைத்த முழுமையான நம்பிக்கையில் தான் நான் இந்த படைப்பை உருவாக்க முடிந்தது. ஒரு படத்தின் பட்ஜெட்டை விட இயக்குநருக்கும், நடிகருக்கும் உள்ள சுமூகமான உறவால் தான் ஒரு அருமையான படம் உருவாக முடியும். அந்த வகையில் ஆர்யாவுடன் டெடி படத்தில் பணியாற்றும்போதே ஒரு சகோதரர் போன்ற உறவு உண்டாகிவிட்டது. இந்தப்படத்தில் அவரது உழைப்பும், அர்ப்பணிப்பும் அபாரமானது. ஆர்யா இல்லையேல் கேப்டன் இல்லை என்றுதான் சொல்வேன். இந்தப் படம் முன்னெப்போதிலும் இல்லாத ஒரு முழுமையான திரையரங்கு அனுபவமாக இருக்கும்'' என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பொன்னியின் செல்வன் பற்றிய நெகட்டிவ் கமெண்டுகளை வரவேற்கிறேன் : ஜெயம் ரவிபொன்னியின் செல்வன் பற்றிய நெகட்டிவ் ... தஞ்சை பெரிய கோயிலில் சாய் பல்லவி சாமி தரிசனம் தஞ்சை பெரிய கோயிலில் சாய் பல்லவி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

yts -  ( Posted via: Dinamalar Android App )
07 செப், 2022 - 18:58 Report Abuse
yts இப்படித்தான் கோப்ரா படக்குழுவும் சொல்லி கொண்டு இருந்தது
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
07 செப், 2022 - 15:23 Report Abuse
KayD இப்படி எல்லாம் build up panni solla vendiyadhu இவ்வளவு solli irukaanae nu உள்ள போனா pulichi போன தயிர் la பழய sothai போட்டு கிளறி ஊசி போன நாற்றத்துடன் வயிறு kettu போய் தான் வெளிய varuvom.. ஆரியா இருந்தாலும் suruyaa இருந்ததாலும் படத்தில் stuff irundhaa மட்டும் தான் ஊரே வரும்.. மதுரை பக்கம் தான் எல்லா படமும் ஓடும். போய் கேட்டு பாருங்க இந்த படம் எங்க epo வரது nu oru பயலுக்கும் தெரியாது. நல்ல கதை இருந்தால் யார் நடித்தாலும் பார்பவர்கள் அதிகம். Stop build up give better movie
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in