Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய கதாபாத்திரத்தில் கார்த்தி

10 ஜூலை, 2022 - 16:22 IST
எழுத்தின் அளவு:
Karthi-is-the-role-that-MGR-wanted-to-play-in-Ponniyin-Selvan

ரசிகர்களால் பெரிதும் விரும்பி படிக்கப்பட்ட வரலாற்று நாவல் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதிய இந்த நாவலை படமாக்கும் முயற்சி கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக அவ்வப்போது நடைபெற்றது. ஆனாலும் இத்தனை வருடங்களுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் மூலமாக அந்த நாவலுக்கு திரை வடிவம் கிடைத்துள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மணிரத்தினம் பேசும்போது, நானே கடந்த 30 வருடங்களில் மூன்று முறை இந்த படத்தை படமாக்க முயற்சி செய்து இப்போதுதான் அதை சாதித்துள்ளேன். இதற்கு முன்னதாக நடிகர் எம்.ஜி.ஆர் இந்த படத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அப்போதே அவர் உருவாக்கி இருந்திருக்க வேண்டும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அதை நாங்கள் உருவாக்க வேண்டும் என்பதற்காக விட்டு வைத்து விட்டார் என்று சொல்ல வேண்டும் என்று கூறினார்.

அது மட்டுமல்ல எம்ஜிஆர் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்க வேண்டும் என்று தான் இதுவரை செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அவர் இந்த படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பினார் என்கிற தகவல் பற்றி பெரிய அளவில் யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் மணிரத்னம் கூறும்போது, எம்ஜிஆர் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பியதாக ஒரு தகவலை கூறியுள்ளார். தற்போது மணிரத்னம் உருவாக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். அந்தவகையில் எம்ஜிஆர் நடிக்க விரும்பிய, அவரால் நடிக்க இயலாமல் போன ஒரு கதாபாத்திரம் தற்போது கார்த்திக்கு கிடைத்துள்ளது மிகப்பெரிய பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மழை பிடிக்காத மனிதனுக்கு டப்பிங் பேசிய நகுல்மழை பிடிக்காத மனிதனுக்கு டப்பிங் ... பொன்னியின் செல்வன் - இரண்டு பூரண சந்திரர்கள், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா பொன்னியின் செல்வன் - இரண்டு பூரண ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Ramesh -  ( Posted via: Dinamalar Android App )
10 ஜூலை, 2022 - 21:38 Report Abuse
Ramesh நல்ல வேளை.. இதெல்லாம் பாக்க அவர் உயிரோட இல்ல.. கார்த்தி uncle உங்களை யாரு இந்த படத்துலா சேர்த்தது?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in