Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

எம்ஜிஆர் பட கதை... ரஜினியின் டைட்டில் ; அசத்தும் நயன்தாரா பட இயக்குனர்

01 ஜூலை, 2022 - 15:26 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-movie-director-in-Rajini-movie-title

மலையாள திரையுலகில் பிரபல சீனியர் நடிகர் சீனிவாசனின் இளைய மகன் தயன் சீனிவாசன். இவர் இயக்குனர் வினித் சீனிவாசனின் தம்பியும் கூட. நடிகராக நடித்துக் கொண்டிருந்த இவர், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு நிவின்பாலி, நயன்தாரா நடித்த லவ் ஆக்சன் ட்ராமா என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த நிலையில் மீண்டும் நடிப்பை தொடர்ந்து வரும் தயன் சீனிவாசன், தற்போது ஜெயிலர் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் தமிழில் ஜெயிலர் என்கிற படம் உருவாக இருக்கிறது. என்றாலும் அதன் கதை என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. அதேசமயம் இந்த ஜெயிலர் படம் 1956 முதல் 1957 வரை ஒரு வருட காலகட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் ஜெயிலர் கதாபாத்திரத்தில் தயன் சீனிவாசன் நடித்துள்ளார். சிறையில் உள்ள 5 கைதிகளை தான் தங்கியிருக்கும் இடத்தில் வைத்து திருத்துவதற்கு முயற்சிக்கும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரமாக அது உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களுக்கு முன்பு தமிழில் பல்லாண்டு வாழ்க படத்தில் எம்ஜிஆர் நடித்த கதாபாத்திரம் போன்றது தான் இதுவும். அந்த வகையில் எம்ஜிஆர் படக்கதை, ரஜினி பட டைட்டில் என அசத்துகிறார் நடிகர் தயன் சீனிவாசன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசுபாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ... மம்முட்டியின் ரோர்சாச் படத்தின் படப்பிடிப்பு நிறைவு மம்முட்டியின் ரோர்சாச் படத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in