Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உயிரே... உறவே... தமிழே... : நன்றி சொன்ன கமல்

11 ஜூன், 2022 - 18:23 IST
எழுத்தின் அளவு:
Vikam-success-:-Kamal-thanks-to-Tamil-people

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த படம் கமல் படங்களிலேயே அதிக வசூலை பெற்ற படமாக அமைந்துள்ளது. மேலும் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளியான கமல் படம் அவருக்கு கம்பேக் கொடுத்துள்ள படமாகவும் அமைந்துள்ளது. இதற்காக தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகிறார் கமல்ஹாசன். ஏற்கனவே படம் வெளியான ஐந்து மொழிகளில் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார் கமல்ஹாசன். இப்போது உலகளவில் வெளியிடப்பட்ட நாடுகளிலும் விக்ரம் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்காகவும் தமிழ் சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோவை கமல் இப்போது வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது : தமிழர்கள் இல்லாத நாடு இல்லை. தேன் மதுர தமிழோசை ஒலிக்காத ஊரில்லை எனும் அளவுக்கு உலகம் முழுக்க பரந்து விரிந்துள்ள என் தமிழ் சொந்தங்களுக்கு என் வணக்கம். திரையிடப்பட்ட நாடுகளில் எல்லாம் விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த பிரம்மாண்ட வெற்றியை எனக்கு பரிசளித்த என் தொப்புள் கொடி உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். சிறந்த படங்கள் மூலம் உங்களை தொடர்ந்து என்டர்டெயின்ட் செய்வேன். இதுவே நான் உங்களுக்கு செய்யும் நன்றி என அறிவேன். அதை செய்வேன். உயிரே, உறவே, தமிழே நன்றி.

இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
புதையலை தேடி கிளம்பிய வேதிகாபுதையலை தேடி கிளம்பிய வேதிகா கமல்ஹசானுக்கு தன் வீட்டில் விருந்தளித்த சிரஞ்சீவி கமல்ஹசானுக்கு தன் வீட்டில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் அப்போ அரசியலுக்கு முழுக்கா ஆண்டவரே கட்சியை நீங்கள் கலைக்க வேண்டாம் அது ஏற்கனவே கலைஞ்சி போச்சு
Rate this:
s sambath kumar - chennai,இந்தியா
15 ஜூன், 2022 - 12:07Report Abuse
s sambath kumarஅது (ம நீ ம) தீமூகவின் பி டீம் தானே. அதான் தீமுகா பதவிக்கு வந்து விட்டதே. இனி கமலுக்கு வேலை இல்லை....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in