Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்ணாத்த 50வது நாள் - ‛பாட்ஷா' டயலாக்கை சுட்டிக்காட்டிய ரஜினி

23 டிச, 2021 - 18:37 IST
எழுத்தின் அளவு:
Annaatthe-50th-day-:-Rajini-quotes-Baasha-dialogue

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ஜெகபதி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் ‛அண்ணாத்த'. இமான் இசையமைத்து இருந்தார். இப்படம் அதிக விமர்சனங்களை சந்தித்தபோது உலகளவில் ரூ.200 கோடி வசூலை எட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணாத்த படம் 50 நாட்களை கடந்துள்ளது.

இதுதொடர்பாக ரஜினி வெளியிட்ட ஆடியோ சுருக்கம் : ‛‛கொரோனா உள்ளிட்ட பல தடைகளை கடந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிறைய சிரமங்களுக்கு இடையே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. படம் வெளியானதும் மழை வந்து குறுக்கிட்டது. எதிர் விமர்சனங்களும் அதிகம் வந்தன. எதிர் விமர்சனம் மற்றும் மழை ஆகியவற்றை கடந்து 'அண்ணாத்த' படம் வெற்றி அடைந்துள்ளது. மழை இல்லை என்றால் இந்த படம் இன்னும் பெரிய வெற்றி அடைந்திருக்கும். இதெல்லாம் பார்க்கும் போது பாட்ஷா படத்துக்கு நான் பேசிய டயலாக் தான் நினைவுக்கு வருது. ‛‛ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனால் கைவிட மாட்டான். ஆனால் கெட்டவங்கள...'' என்று கூறி சிரித்தபடி முடித்திருக்கிறார்.


தங்கச்சங்கிலி பரிசு
இதனிடையே ‛அண்ணாத்த' படத்தின் இயக்குனர் சிவா வீட்டுக்கு நேரில் சென்று பாராட்டு தெரிவித்திருந்த ரஜினி, தற்போது படக்குழுவினரில் இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்ட முக்கியமானவர்களை வீட்டுக்கு அழைத்து, தங்கச்சங்கிலி பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்க்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனாவிஜய்க்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா ... அதிரடி காட்டும் யானை டீசர் அதிரடி காட்டும் யானை டீசர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் யார் அந்த கெட்டவர்கள் ?
Rate this:
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
24 டிச, 2021 - 08:49 Report Abuse
சொல்லின் செல்வன் படம் அட்டர் பிளாப் ஆனாலும், இருநூறு கோடி முன்னூறு கோடின்னு அடிச்சு விடணும். அப்போதான் மார்க்கெட் சரியாம இருக்கும்.
Rate this:
mohan - chennai,இந்தியா
24 டிச, 2021 - 17:34Report Abuse
mohanசுறா புலி பைரவா பீகிள் படத்தை விட அன்னத்தை எவ்ளோவோ தேவல ? இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் நம்பர் 1அண்னத்தை 240cr) அடுத்த இடத்திலத்தில் தான் மாஸ்டர் 200cr)...
Rate this:
mupaco - Madurai,இந்தியா
23 டிச, 2021 - 20:00 Report Abuse
mupaco ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து ரெஸ்ட் எடுங்க சார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in