Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதை எழுதும்போதே நயன்தாராவை தன் அம்மாவுக்கு மருமகளாக்க முடிவு செய்தாரா விக்னேஷ் சிவன் ?

07 டிச, 2021 - 12:19 IST
எழுத்தின் அளவு:
Vignesh-sivan-connection-with-rowdy-baby-story-and-real-life

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்திற்காக, யுவன்சங்கர் ராஜா இசையில் 'நான் பார்த்த முதல் முகம் நீ' என தொடங்கும் பாடலை .விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். தாயின் பெருமையை சொல்லும் விதமாக சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்தப்பாடல் நேற்றுமுன்தினம் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது. இந்த நிலையில் பாடலை எழுதிய விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்த நெகிழ்சியான பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் “ இந்த பாடலை ஓய்வுப்பெற்ற இன்ஸ்பெக்டர் மீனாகுமாரிக்கு ... என் அம்மாவுக்கு நான் சமர்ப்பிக்கிறேன்.. என்னுடைய அம்மாவுக்காக ஒரு பாடல் எழுத வேண்டும் என்ற விருப்பம் எப்போதுமே எனக்கு இருந்தது. இதன்மூலமாக நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்“ என கூறியுள்ளார்

இந்த பதிவு மூலமாக இரண்டு ஆச்சர்யமான விஷயங்கள் வெளியே தெரிய வந்துள்ளன. விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நாயகனின் அம்மாவும் போலீஸ் அதிகாரி தான். அதில் நடித்த ராதிகாவின் பெயரும் கூட மீனாகுமாரி தான். அந்தவகையில் தனது தாயின் பெயரையும் அவர் வகித்த பதவியையும் தான் அந்தப்படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார் விக்னேஷ் சிவன். அதேசமயம், கதைப்படி மீனாகுமாரி என்கிற தனது தாயின் பெயருள்ள அந்த கதாபாத்திரத்தின் மருமகளாக நயன்தாரா வரவேண்டும் என கதை எழுதும்போதே எப்படி தீர்மானித்து இருப்பார் என்பது தான் ஆச்சர்யம் தருகிறது. இவர்கள் காதல், திருமணத்தில் இணையும்போது, அவர் எழுதிய கதையும் நிஜமாகி விடும் அல்லவா?

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தூக்கப் பேச்சு - அஷ்வினுக்கு எழும் எதிர்ப்புகள்தூக்கப் பேச்சு - அஷ்வினுக்கு எழும் ... புனித் ராஜ்குமாரின் 'கந்தடா குடி' டைட்டில் டீசர் வெளியீடு புனித் ராஜ்குமாரின் 'கந்தடா குடி' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ஆக .. - Chennai ,இந்தியா
07 டிச, 2021 - 18:50 Report Abuse
ஆக .. வாங்கிக்கணக்கை பார்த்திருப்பார் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in