Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்ஆர்ஆர் - 9ம் தேதிக்காகக் காத்திருக்கும் 900 கோடி படம்

06 டிச, 2021 - 11:42 IST
எழுத்தின் அளவு:
RRR-movie-waiting-for-Dec-9

ராஜமவுலி இயக்கத்தில், மரகதமணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'.

சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக சொல்லப்படும் இப்படத்தின் டிரைலர் டிசம்பர் 9ம் தேதி வெளியாக உள்ளது. மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான முன்னோட்டமாக டிரைலர் அமைய உள்ளது.

இதனிடையே, இப்படத்தின் வியாபாரம் மட்டும் மொத்தமாக 900 கோடி ரூபாய் வரை நடந்துள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியது. தென்னிந்திய தியேட்டர் வெளியீட்டு உரிமை, வட இந்திய வெளியீட்டு உரிமையாக 500 கோடி, வெளிநாட்டு உரிமையாக 70 கோடி, அனைத்து மொழிகளுக்குமான டிஜிட்டல் உரிமை 170 கோடி, சாட்டிலைட் உரிமையாக 130 கோடி, இசை உரிமையாக 20 கோடி என மொத்தமாக 890 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'பாகுபலி 2' படத்தின் உரிமை, வசூல் ஆகியவற்றைக் கணக்கில் வைத்துதான் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கான வியாபாரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவில் இதுவரையிலும் வேறு எந்தப் படத்தின் வியாபாரமும் இந்த அளவிற்கு நடந்ததில்லை. மாநில மொழியாக இருக்கும் ஒரு படத்தின் வியாபாரம் ஹிந்திப் படங்களின் வியாபாரத்தை விட அதிகமாக இருப்பதைப் பார்த்து ஹிந்தித் திரையுலகம் ஆச்சரியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் சுமார் 1000 தியேட்டர்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அதுவும் புதிய சாதனைதான். எனவே, தென்னிந்திய மொழி ரசிகர்களை விட ஹிந்தி ரசிகர்களும், ஹிந்தித் திரையுலகினரும் 'ஆர்ஆர்ஆர்' டிரைலரைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
'வலிமை' அம்மா பாடல் :  சித் ஸ்ரீராம் நெகிழ்ச்சி'வலிமை' அம்மா பாடல் : சித் ஸ்ரீராம் ... தயாரிப்பு நிர்வாகிகளால் நடிகைகளுக்கு மன அழுத்தம் : சார்மிளா தயாரிப்பு நிர்வாகிகளால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

07 டிச, 2021 - 16:42 Report Abuse
susainathan over reeel
Rate this:
nizamudin - trichy,இந்தியா
07 டிச, 2021 - 05:37 Report Abuse
nizamudin ரகுபதி ராகவ ராஜாராம்
Rate this:
mohan - chennai,இந்தியா
06 டிச, 2021 - 17:17 Report Abuse
mohan பீ ஸ்ட படம் இந்த சாதனை முறியடிக்குமா ? விஜய் ரசிகர்கள் கனவ? விஜய் படம் இந்த ஜென்மத்தில் முறிக்க வாய்ப்பு இல்லை ?
Rate this:
vijai - ,
07 டிச, 2021 - 13:23Report Abuse
vijaiஇந்த போட்டியில் விஜய்தான் கிடைச்சரா ஏன்னா அஜித்தோட வலிமை என்ன ஆச்சு...
Rate this:
mohan - chennai,இந்தியா
27 டிச, 2021 - 14:39Report Abuse
mohanஅஜித் கூட வாய்ப்பு இருக்கு அணா விஜய்க்கு வாய்ப்பே இல்ல இந்த ஜென்மத்துல ? முதல்ல விஜய் படம் 300கோடி தாண்டுறதுக்கே முக்குறாரு இவரு எப்படி 900கோடி சாத்தியம் இவரு பான் இந்தியா நடிகரும் கிடையாது தமிழ் நாடு கேரளா தாண்டி இவருக்கு மவுசு கிடையாது ரஜினி கமல் பிரபாஸ் ராஜமௌலி அமிர்கான் சல்மான் ஷாருக் போன்ற பான் நாடிகள் மட்டுமே 1000 கோடி சாத்தியம் ? விஜய்க்கு இது கனவுதான் ?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in