Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெய் பீம் - சர்ச்சைக்குரிய 'காலண்டர்' படம் நீக்கம்

06 நவ, 2021 - 13:43 IST
எழுத்தின் அளவு:
Jai-Bhim-controversy-calender-removed

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் மற்றும் பலர் நடித்து சில தினங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியான படம் 'ஜெய் பீம்'. இப்படம் 1995 கடலூர் மாவட்டத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவருக்கு போலீஸ் காவலில் நேர்ந்த கொடுமைகளைப் பற்றியும், தனது கணவரை மீட்க அவரது மனைவி பார்வதி நடத்திய சட்டப் பேராட்டத்தைப் பற்றியும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியது. படம் விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது.

அதே சமயம் படத்தில் கொடுமைக்கார போலீசாக நடித்த கதாபாத்திரத்தை வன்னியர் போன்று சித்தரித்ததற்கு அந்த சமுதாயத்தினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். படத்தின் வசனங்களுக்காக உதவி செய்த எழுத்தாளர் கண்மணி குணசேகரன் என்பவர் இந்த தவறான சித்தரிப்பிற்கு தனது கண்டனப் பதிவை முகப்புத்தகத்தில் வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

படத்தில் ஒரு காட்சியில் வீட்டில் அந்த கொடுமைக்கார போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தொலைபேசியில் பேசிய போது பின்னணியில் இருந்த நாளிதழ் காலண்டரில் தீச்சட்டி படம் இடம் பெற்றது. அந்தக் குறியீடுதான் வன்னியர்களின் எதிர்ப்புகளுக்குக் காரணம்.

பின்னர் தன்னைத் தொடர்பு கொண்ட இயக்குனர் விரைவில் அந்த காலண்டரில் இடம் பெற்ற தீச்சட்டி படத்தை சாமி படமாக மாற்றுவதாகவும் உறுதியளித்தாக எழுத்தாளர் கண்மணி எழுதியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்தக் காட்சியில் இடம் பெற்ற காலண்டர் படம் சாமி படமாக மாற்றப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
ஜெய் பீம் படம் - வன்மத்தை வளர்க்காதீர்: கவுதமன்ஜெய் பீம் படம் - வன்மத்தை ... யார் முதல் நாள் வசூலில் டாப் ? - சண்டைகளில் சமூக வலைத்தளங்கள்... யார் முதல் நாள் வசூலில் டாப் ? - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Anand - chennai,இந்தியா
12 நவ, 2021 - 14:52 Report Abuse
Anand நிஜத்தில் அந்த போலீஸ் அதிகாரி ஒரு அல்லுலோயா, அதை திரித்து எதுக்குடா ஹிந்து பெயர், சாமி படம்?
Rate this:
Rajkumar - Bengaluru,இந்தியா
07 நவ, 2021 - 20:24 Report Abuse
Rajkumar The sub-inspector's name who implicated the Tribal men and thrashed them was Anthony Samy. Also no mention of comrade Govindan who is the key person in driving the case from ning to . Also there are other important person in Madras High Court Judge without his support the case would not have succeeded. Film is good but lots of facts are hided and misrepresented. If it is based on true story then all facts should be given without any changes even though other cinema screen play can still apply
Rate this:
P Ravindran - Chennai,இந்தியா
07 நவ, 2021 - 18:52 Report Abuse
P Ravindran சூரிய என்னும் ஜன்து எப்போதும் மதம் மற்றும் ஜாதி பிரச்னையை கிளப்பும். பாவாடைகள் பணம் விளையாடுகிறது போல.
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
07 நவ, 2021 - 16:10 Report Abuse
Vaduvooraan படம் பேசப்பட்டு வருகிறது பாராட்டுகளை அள்ளிக் குவிக்கிறது. ஆனால் படம் வந்த உடனே கோவிலில் சாப்பிட அனுமதி மறுக்கப்பட்ட ஒரு இருளர் பெண்ணுக்கு நேர்ந்த அவமதிப்பு பத்திரிகை செய்தியாகி அறநிலையத்துறை அமைச்சர் முதலமைச்சர் தலையிட்டு அவருக்கு உரிய மரியாதையை வழங்க ஏற்பாடு செய்கிறார்கள் பாராட்டுவோம். அடுத்து ஹிந்துக்களை சாத்தானை கும்பிடுகிற கூட்டமாக சித்தரித்து, தீண்டாமை பற்றி பேசிப்பேசி மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்யும் குழுவினர் திடீரென்று என்றைக்குமில்லாது இருளர் குடியிருப்புகளில் பட்டாசு வெடித்து மக்களுடன் தீபாவளி கொண்டாடுகிறார்கள்...படத்தை பார்த்த முதலமைச்சரும் அவரது மனைவியாரும் கண்ணீர்விட்டு கதறியதாக செய்தி வருகிறது... படம் எடுத்தோம்.. பணம் பண்ணினோம் என்றில்லாமல் பல குழுக்கள் ஒன்றிணைந்து ஹிந்து மதத்திற்கு எதிராக ஒரு கருத்துருவாக்கத்தை தொடங்கி வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
07 நவ, 2021 - 15:53 Report Abuse
Vaduvooraan சற்று வித்தியாசமான படம் ஆனால் வில்லங்கமானதும் கூட அடகுக்கடை சேட்டை இந்தியில் பேசியதற்காக போலீஸ் அறையும் காட்சி படக்குழுவினரை தமிழின காவலர்களாக பார்க்க வைக்கும் முயற்சி.. அதில் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் படத்தின் ஹிந்திப் பதிப்பில் அந்த வசனத்தை அப்படியே மாற்றாது வைத்திருந்தால், படம் எடுத்தவர்கள் ஓரளவு இன உணர்வு உள்ளவர்கள் என்று சிலாகிக்கலாம். ஆனால் ஹிந்தியில் உண்மையை சொல்லாது மறைத்ததற்காக அதிகாரி அந்த வடஇந்திய அடகுக்கடை சேட்டை கன்னத்தில் அறைகிறார் என்று காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஹிந்தி மார்க்கெட்டில் காசு பார்க்க படத்தை இறக்கிவிட்டு ஹிந்தி பேசியதற்காக அதிகாரி கன்னத்தில் அடிக்கிறார் என்று காட்சி வைத்தால் அங்கிருப்பவர்கள் சும்மா இருப்பார்களா? அது தவிர ஆரம்பத்தில் தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவிக்கும் நபர்கள்/ நிறுவனங்கள் பட்டியலில் நிறைய கிறித்தவ நிறுவனங்கள், மத தலைவர்கள் இடம் பெறுகிறார்கள். சிவகுமார் குடும்பத்தில் எதோ நடந்து கொண்டிருக்கிறது. அது அவர்கள் விவகாரமாக மட்டும் இருந்து சமுதாயம் சார்ந்ததாக இல்லாத வரை பிரச்சினை இல்லை.
Rate this:
naadodi - Dallas,யூ.எஸ்.ஏ
07 நவ, 2021 - 22:16Report Abuse
naadodi//இந்தியில் பேசிய சேட்டை கன்னத்தில் அறைவது பாராட்டுக்குரியதா?// அப்போ படத்தை ஹிந்தியில் வெளியிடுவது ? என்ன ஒரு கீழ்த்தரமான குறிக்கோள்? அங்கங்கு பிளவு ஏற்படுத்தனும் அதில் குளிர்காயனும்..அதில் காசு பாக்கணும்..இதில் என்ன சமுதாய நலனோ...
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in