Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

யானை தந்தம் வைத்திருந்தது : மோகன்லால் வழக்கை வாபஸ் பெற மறுப்பு

11 ஜூன், 2022 - 11:20 IST
எழுத்தின் அளவு:
Ivory-case-:-Mohanlal-to-face-the-case

கடந்த 2012ம் ஆண்டு நடிகர் மோகன்லாலின் சென்னை, கொச்சி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கொச்சியில் உள்ள அவரது வீட்டில் இருந்து 2 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. வருமான வரித்துறை அதிகாரிகள் அவற்றை பெரும்பாவூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

யானை தந்தங்களை வீட்டில் வைத்திருக்க அது எப்படி கிடைத்தது என்பது குறித்து விளக்கம் அளித்து வனத்துறையிடம் அனுமதி சான்று வேண்டும். ஆனால் மோகன்லாலிடம் அதற்கான சான்று இல்லை . இதனால் அவர் மீது வனத்துறை பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நடந்த வந்த நிலையில் மோகன்லால் யானை தந்தம் வைத்துக் கொள்ள கேரள அரசு அனுமதித்துள்ளது, எனவே அவரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அப்போதைய காங்கிரஸ் அரசு மனுதாக்கல் செய்தது. ஆனால் இந்த மனுவை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் சிலர் கேரள உயர்நீதி மன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக பெரும்பாவூர் நீதிமன்றமே முடிவெடுக்க கேரள உயர்நீதி மன்றம் அனுமதி அளித்தது.

நேற்று இந்த மனு பெரும்பாவூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் வழக்கு தொடர்ந்து நடக்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
படத்தை வெளியிடுங்கள் ; துல்கர் சல்மானிடம் பீஸ்ட் நடிகர் கோரிக்கைபடத்தை வெளியிடுங்கள் ; துல்கர் ... திருமணத்திற்கு முதல்நாளே நேரில் வந்து நயன்தாராவை வாழ்த்திய குருநாதர் திருமணத்திற்கு முதல்நாளே நேரில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

shyamnats - tirunelveli,இந்தியா
13 ஜூன், 2022 - 09:04 Report Abuse
shyamnats முன்னணி நடிகர்கள் நீதிக்கும் , சட்ட திட்டங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல.
Rate this:
Manian - Chennai,ஈரான்
12 ஜூன், 2022 - 08:33 Report Abuse
Manian மிக சிறந்த நடிகர். ஆனால் சிந்தனையிலும் நடிக்க முடியமா? யாணையைஐ கொல்லாபல் அல்லது புதைத்து பின் எடுத்த தந்தமா என்று போலீசு வேஷங்களில் நடித்தவர் கேட்டிருந்தால் இந்த நிலை வருமா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in