மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில், பாலிவுட்டில், சோனாக் ஷி சின்ஹாவை மிஞ்ச ஆளில்லை. தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும், அந்த கேரக்டருக்கு ஏற்றபடி, உடல் அமைப்பை மாற்றிக்கொள்வதில், அவர் கில்லாடி.
'உடற்பயிற்சி செய்வதற்காக, ரொம்பவே மெனக்கெடுகிறீர்கள் போலிருக்கிறதே...' என,கேட்டால், சிரிக்கிறார், சோனாக் ஷி. 'ஜிம்முக்கு சென்று, நேரம் காலம் தெரியாமல், உடற்பயிற்சி செய்யும் பழக்கம் எல்லாம் எனக்கு இல்லை. வீட்டிலேயே எளிமையான முறையில், உடற்பயிற்சி செய்வேன். நீச்சல், யோகா, நடைப்பயிற்சி ஆகியவை, தினமும் உண்டு' என்கிறார்.
'நடிகையாக இருந்தாலும் சரி; குடும்பத் தலைவியாக இருந்தாலும் சரி; ஒவ்வொரு பெண்ணும், கட்டாயம் உடற்பயிற்சி செய்வது, அவர்களது ஆரோக்கியத்துக்கு நல்லது' என, மருத்துவ, 'டிப்ஸ்' கொடுக்கிறார், சோனாக் ஷி.