'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் முன்னாள் நடிகரும், அரசியல்வாதியுமான, சத்ருகன் சின்ஹாவின் மகள் தான், பிரபல நடிகை சோனக் ஷி சின்கா. பொதுவாக, திரைப்படங்களில் நடிக்க வரும் வாரிசுகள், தங்கள் தந்தை அல்லது தாயைத் தான், குரு என்பர். இந்த விஷயத்தில், சோனாக் ஷி, கொஞ்சம் வித்தியாசமானவராக உள்ளார்.'உங்கள் மானசீக குரு யார்?' என, கேட்டால், பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷனை கை காட்டுகிறார். 'அவரது ஆலோசனை மட்டும், சரியான நேரத்தில் எனக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், இப்படி கட்டுக்கோப்பான தோற்றத்துடன், என்னை பார்க்கும் வாய்ப்பு, ரசிகர்களுக்கு கிடைத்திருக்காது' என்கிறார், சோனக் ஷி.சமீபகாலமாக, கடுமையாக உடற்பயிற்சி செய்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார், அவர். ஹிருத்திக் ரோஷனும், உடற்பயிற்சி மீது, மிகுந்த ஆர்வம் உள்ளவர். அவர் கொடுத்த ஆலோசனையால் தான், சோனாக் ஷிக்கும், உடற்பயிற்சி மீது ஆசை வந்ததாம்.