மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கடந்த சில நாட்களாக பாலிவுட் வட்டாரத்தில் கடும் புகைச்சலை கிளப்பிவிட்டுள்ளது நடிகர் நானா படேகரின் மீதான தனுஸ்ரீ தத்தாவின் பாலியல் குற்றச்சாட்டு. 2009-ல் நானா படேகர் நடித்த 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்கிற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவதற்காக தனுஸ்ரீ தத்தாவை ஒப்பந்தம் செய்திருந்தார்களாம்.
ஆனால் நடனக் காட்சியின்போது நானா படேகர், தனுஸ்ரீ தத்தாவிடம் தவறாக நடந்து கொண்டார் என சமீபத்தில் குற்றம் சாட்டினார் தனுஸ்ரீ தத்தா. தற்போது தனுஸ்ரீக்கு எதிராக நானா படேகரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதேசமயம் 2௦௦9ல் அந்த நிகழ்வு நடந்த சில நாட்கள் கழித்து தனுஸ்ரீ தத்தாவின் கார்மீது நானா படேகரை அவதூறாக பேசியதாக அவரது ரசிகர்கள் தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் போலீஸ் வந்து அவரை மீட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை, இப்போது யாரோ ஒருவர், நானா படேகரின் இமேஜை டேமேஜ் பண்ணும் விதமாக சோஷியல் மீடியாவில் பரவவிட, தற்போது செம வைரலாகி வருகிறது அந்த வீடியோ.