ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, சாகித் கபூர், ரன்வீர் சிங் நடிப்பில் உருவான பத்மாவத் படம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்தவாரம் ரிலீஸானது. படத்திற்கு கிளம்பிய எதிர்ப்புகளும், சர்சையுமே படத்திற்கான ஆர்வத்தை தூண்ட, படம் பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட்டில் இணைந்துள்ளது. படம் வெளியாகி ஒருவாரமாகி உள்ள நிலையில் இதுவரை ரூ.166.50 கோடி வசூலித்திருக்கிறது. இந்தவாரம் பாலிவுட்டில் பெரியளவில் படங்கள் ரிலீஸாகவில்லை. இதனால் பத்மாவத் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு இருந்து வருகிறது. விரைவில் இப்படம் ரூ.200 கோடி கிளப்பில் இணையும் என்கிறார்கள். பத்மாவத் படம் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது.