பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கேடி மற்றும் நண்பன் படங்களில் நடித்த இலியானா, பின், இந்திக்கு சென்று பிரபலமானார். இப்போது அங்கு படங்கள் குறைந்து விட்டதால், மீண்டும் தமிழுக்கு வர ஆசைப்படுகிறார். அதனால், சில முன்னணி இயக்குனர்களை சந்தித்து படவேட்டை நடத்தி வரும் அவர், 'இந்தி படங்களில் நடிப்பதைப் போன்று, 'பிகினி' நடிகையாக பிரவேசிக்கிறேன். அதனால், இந்தி படங்களுக்கு இணையாக தமிழிலும் சம்பளம் தந்து விட வேண்டும்...' என்றொரு நிபந்தனை வைத்து வருகிறார். ஆனால், 'இந்தியில் அவருக்கு பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டது என்பதால் அதே சம்பளத்தை எப்படி தமிழ்ப் படத்தில் கொடுக்க முடியும்...' என்று இலியானாவை பரிசீலனையிலேயே வைத்துள்ளனர் தயாரிப்பாளர்கள். ஆசைக்கு இல்லை அளவென்ற எல்லை!
— எலீசா