'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை கதையில் உருவாகியுள்ள, டிராபிக் ராமசாமி படத்தில், கதையின் நாயகனாக நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். ஆனால், இந்த கதையை ரஜினியை வைத்து படமாக்க முன்பே திட்டமிட்டிருந்தாராம் இயக்குனர் ஷங்கர்.
அதுகுறித்து அவர் கூறுகையில், 'டிராபிக் ராமசாமி, என்னை பாதித்த ஒரு மனிதர். அவருக்குள் ஒரு ரியல் ஹீரோயிசம் உண்டு. கத்தி எடுக்காத இந்தியனான அவரது கதையில், ரஜினி சாரை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டேன். ஆனால், இப்போது, எஸ்.ஏ.சி., நடித்ததில் மகிழ்ச்சி தான். என்றாலும், என்னால் அந்த கதையை இயக்க முடியவில்லையே என்கிறபோது ஏமாற்றமாகவே உள்ளது...' என்கிறார்.
— சினிமா பொன்னையா