ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சாமி-2 படத்தில், கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாவதற்கு முன், த்ரிஷா தான் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், கீர்த்தி சுரேஷ் உள்ளே வந்ததும், அவரது மார்க்கெட்டை கருத்தில் கொண்டு அவருக்கு கதையில் முன்னுரிமை கொடுத்து, த்ரிஷாவின் கேரக்டரை, 'டம்மி' பண்ணி விட்டனர். இதன் காரணமாக, அந்த படத்தில் இருந்து வெளியேறினார் த்ரிஷா.
இந்நிலையில், சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான, நடிகையர் திலகம் படத்தில் நடித்த பின், இப்போது இன்னும் பெரிய நடிகையாகி விட்டார் கீர்த்தி சுரேஷ். அதன் காரணமாக, த்ரிஷா கதையின் நாயகியாக நடிக்க பேசிக் கொண்டிருந்த ஒரு படம், தற்போது, கீர்த்தி சுரேஷ் பக்கம் திரும்பி நிற்கிறது. இதனால், இந்த நடிகை தன் மார்க்கெட்டை கவிழ்த்து விடுவார் என்று பயந்து போயிருக்கிறார் த்ரிஷா. புது வெள்ளம் வந்து, பழைய வெள்ளத்தை அடித்துக் கொண்டு போயிற்று!
— எலீசா