- நடிகர் : பாலாஜி, வெங்கி
- நடிகை : லட்சுமி ப்ரியா
- இயக்குனர் :சுபு
தினமலர் முன்னோட்டம் » சுட்டகதை
புதுமுக இயக்குனர் சுபு இயக்கும் படம் சுட்டகதை. பலாஜி, வெங்கி லட்சுமிப்ரியா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.எஸ்.சிவாஜி என்ற காமெடி டீமும் நடிக்கிறது. "1980களில் காமிக்ஸ் கதைகளுக்கு பெரிய மவுசு உண்டு. இரும்புக் கை மாயாவி, மிஸ்டர்.ராய், டாக்டர்.டோனி என ஏகப்பட்ட கதைகள் மக்களால் விரும்பி படம் பார்த்து படிக்கப்பட்டன. அந்த கதைகளின் பாதிப்பில்தான் இந்தப் படம் உருவாகிறது. இந்திய சட்ட திட்டங்கள் இல்லாத ஒரு கற்பனை ஊரில் இந்தக் கதை நடக்கிறது. அந்த ஊரில் அடிக்கடி கொலை நடக்கும், அந்த கொலைகள் ரத்தம் சிந்த பயங்கரமாக இருக்காது. கொலையே காமெடியாகத்தான் இருக்கும். இந்த காமெடி கொலையை இரண்டு டம்மி பீஸ் கான்ஸ்ட்பிள்கள் கண்டுபிடிப்பதுதான் கதை. 100 சதவிகிதம் சிரிப்புக்கு உத்தரவாதம் கொடுத்து படத்தை எடுக்குறோம். இந்த லாஜிக் லாஜிக்குன்னு ஒண்ணு சொல்வாங்களே அது இந்தப் படத்துல சுத்தமா கிடையாது. உங்க சிரிப்புக்கு நாங்க கியாரண்டி அவ்ளோதான் என்கிறார் இயக்குனர் சுபு.