Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமாவிலிருந்து ஓய்வு - விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் முடிவு!! | கமல் பிறந்தநாளில் உத்தமவில்லன்! திருப்பதி பிரதர்ஸ் முடிவு! | மும்பை நாடக கலைஞர்கள் அரங்கேற்றிய ஆங்கில நாடகம்! | சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கில் ஸ்ருதிஹாசன்...?! | அரசியலுக்கு வருவது பற்றி... பிறந்தநாளில் விஷால் பரபரப்பு பேட்டி!! | சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வருகிறார் ஸ்ரீ | பத்திரிகையாளர்களுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சிவகார்த்திகேயன்! | சென்சாருக்கு கேள்வி எழுப்பும் ராணி முகர்ஜி...! | விஷாலுக்காக மீண்டும் படம் இயக்கும் சுசீந்திரன்! | ரஜினிகாந்துடன் ஜோடியாகத்தான் நடிப்பேன்...சரண்யாவின் ஆசை...! |

சினிமா முதல் பக்கம் » வரவிருக்கும் படங்கள் » ஒன்

ஒன்

  • நடிகர் : சங்ககிரி ராஜ்குமார்
  • நடிகை : ..
  • இயக்குனர் :சங்ககிரி ராஜ்குமார்
Share  
Bookmark and Share

தினமலர் முன்னோட்டம் » ஒன்

வெங்காயம் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் சங்ககிரி ராசகுமார். இவர் இப்போது உலக சாதனைக்காக ஒரு படம் இயக்கி உள்ளார். படத்தின் பெயர் ஒன். ஆங்கிலத்தில் உருவாக்கி இருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பு, இயக்கம் முதல் லைட்பாய் வரை அத்தனை வேலைகளையும் இவரே செய்திருக்கிறார். நான்கு வேடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் எப்படி எடுத்தார் என்பதை தனியாக மேக்கிங் ஆப் ஒன் என்ற பெயரில் எடுத்து வைத்திருக்கிறார். மர்ம காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் நான்குபேர் சந்திக்கும் வித்தியாசமான அனுபவங்கள்தான் கதை. இந்தப் படத்தை உருவாக்க இவருக்கு 9 வருடங்கள் ஆகியிருக்கிறது. ஒன்றே முக்கால் மணி நேரம் ஓடும் இந்தப் படத்தின் அறிமுக விழா விரைவில் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது. உலகிலேயே தனி மனிதன் உருவாக்கியுள்ள முதல் படம் இது. இதுபற்றி ராசகுமார் கூறும்போது "இது அதிகபிரசிங்கத்தனமான வேலையோ, எனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக் கொள்வதற்காகவோ எடுக்கப்படவில்லை. தமிழனால் எதுவும் செய்ய முடியும் என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2014 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in