Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

டேவிட்

டேவிட்,David
  • டேவிட்
  • விக்ரம்
  • இஷா ஷர்வானி
  • இயக்குனர்: பிஜாய் நம்பியார்
17 பிப், 2013 - 18:07 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » டேவிட்

  

தினமலர் விமர்சனம்



விக்ரம், ஜீவா இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் "டேவிட்" திரைப்படமும் "நீர்ப்பறவை", "கடல்" படங்களைப்போன்று கிறிஸ்தவ பிரச்சார படமாகவே காட்சியளிக்கிறது. என்ன முன் இரண்டு படங்களும் கடற்கரையோர கிறிஸ்தவ கிராமத்து கதையை உள்ளடக்கி வெளிவந்தன. இது (டேவிட்) நகரத்து கிறிஸ்தவம் பேசும்படமாக வெளிவந்திருக்கிறது!

2010-ம் ஆண்டில் கோவா கடற்கரையில் சதா சர்வகாலமும் குடியும் கும்மாளமுமாக வாழும் டேவிட் எனும் மீனவர் விக்ரமின் காதல் கலாட்‌டாக்களும், 1999-ம் ஆண்டில் மும்பையில் கிறிஸ்தவ பாதிரியார் நாசரின் மகனாக கிடாரிஸ்ட்டாக டேவிட் ‌எனும் ஜீவா பண்ணும் சேட்டைகளும், படும்வேதனைகளும் தான் "டேவிட்" படம் மொத்தமும்! அந்த டேவிட்டுக்கும், இந்த டேவிட்டுக்கும் க்ளைமாக்ஸில் ஏற்படும் ரிலேஷன்ஷிப் தான் டேவிட் படத்தின் டுவிஸ்ட், ஹைலைட், இத்யாதி, இத்யாதி... ‌என எண்ணிக்கொண்டு மொத்தப்படத்தையும் இயக்கி இருக்கிறார் படத்தின் திரைக்கதை ஆசிரியரும், இயக்குனருமான பிஜேய் நம்பியார். இருவேறு டேவிட்டுகளின் வாழ்க்கையை இருவேறு கோணத்திலிருந்தும் ஒரு நாவல் மாதிரி சொல்ல வேண்டிய இயக்குனர், பல இடங்களில் அதை நழுவலாக சொல்லி ரசிகர்களை போரடித்திருப்பது தான் "டேவிட்" படத்தின் பலவீனம்!

படத்தின் ஒரு டேவிட் விக்ரம், என்னதான் கோவாவின் சீதோஷண நிலைக்கு மது சரிபட்டு வருமென்றாலும், விதவிதமான பாட்டில்களில் ரகம் ரகமான மது வகைகளை ராவா சாப்பிடுவது, அதுவும் உடம்பில் இண்டு இடுக்குகளில் எல்லாம் ஒளித்து வைத்து சாப்பிடுவது கொஞ்சம் அல்ல நிறையவே ஓவராகத் தெரிகிறது! "காசி, "தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களின் கதைகளை ஓப்புக் கொண்டு நடித்த விக்ரமா இந்த டேவிட் கதையையும், அதுவும் நண்பனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை டாவடிக்கும் கேரக்டரை கேட்டு நடித்தார்...?! என கேட்கத் தோன்றுகிறது. முந்தைய படங்களை காட்டிலும் இளமையாகத் தெரியும் விக்ரம் ‌ஒரே ஆறுத‌ல்!

மற்றொரு டேவிட்டாக மும்பை இளைஞராக கையில் கிட்டாரும், தலையில் வித்தியாசமான சடை பின்னலுமாக வரும் ஜீவா, பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார். பாதிரியார் அப்பா நாசருடன் மல்லுக்கு நிற்பதிலும் சரி, அவரை மதவாதி என மானபங்கபடுத்திய அரசியல் பிரமுகர்களுடன் மல்லுகட்டுவதிலும் சரி ஜீவா வித்தியாசமாக நடித்து படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். தன் லட்சியங்கள், கனவுகள் முரட்டுதனம் எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு க்ளைமாக்ஸில் ஜீவா தன் அப்பா நாசர் மாதிரியே பாதிரியார் ஆகிவிடுவது செம ட்விஸ்ட், அதேநேரம் என்னதான் மும்பை இளைஞர் என்றாலும் ‌ஏர்ஹோஸ்டஸ் சிஸ்டருடன் சேர்ந்து திருட்டு தம் அடிப்பது, அந்த சிஸ்டரும், ஜீவாவுக்கு அக்காவா..? சொக்காவா...? என்பது புரியாமல் தெரியாமல் ஒருவித போதை பர்ஸ்னாலிட்டியுடனேயே சுற்றி வருவது உள்ளிட்டவைகளை இயக்குனர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!

ஜீவாவின் அப்பாவாக பாதிரியராக வரும் நாசர், விக்ரமின் நண்பர் பீட்டர், விக்ரமின் வித்தியாசமான தோழி தபு, விக்ரமின் ஒருதலைக்காதலி ரொமாவாக வரும் இஷா சர்வானி, பெண் அரசியல் தலைவராக வரும் ரோகிணி உள்ளிட்டவர்களும் விக்ரம், ஜீவா மாதிரியே படத்திற்காக பெரிதும் உழைத்திருக்கின்றனர். ஒன்றாகவே நடித்திருக்கின்றனர்.

அனிருத், பிரசாந்த் பிள்ளை, மார்டன் மாபியா, மாட்டி பென்னி, ரெமோ என அரை டஜன் இசையமைப்பாளர்கள் தனித்தனி ட்யூனில் இசையமைத்திருப்பது டேவிட் படத்தை ஏதோ துண்டு துண்டு விளம்பர படங்களை சேர்த்து பார்த்த திருப்தியையே தருகிறது. ரத்னவேலு, பி.எஸ்.வினோத் இருவரது ஒளிப்பதிவும் படத்தின் பெரும்பலம்.!

விக்ரம், ஜீவா என இரண்டு பெரும் ஹீரோக்கள் கிடைத்தும், இயக்குநர் பிஜாய் நம்பியார் தரமான தமிழ்படம் எடுக்க முன்வராதது வருத்தம்!

ஆகமொத்தத்தில், "டேவிட்" திரைப்படத்தை அந்த இருபெரும் நடிகர்களின் ரசிகர்களும் டூவிட்டு விடாமல் பார்த்தால் சரி! "டேவிட் - டவுட்!!"



--------------------------------------------------------

குமுதம் சினி விமர்சனம்


தியேட்டரில் காது கொடுத்துக் கேட்டபோது:

இடைவேளைக்கு முன்: “மாப்ளே, இது ஹிந்தி டப்பிங் படம்டா. தெரியாம வந்து சிக்கிட்டோம்.’

இடைவெளியில்:
“ஏதோ தனித்தனியா ரெண்டு கதையைச் சொல்றாங்க போலிருக்கு. பாலசந்தரோட “ஒரு வீடு இரு வாசல்’ மாதிரி’.

இடைவேளைக்கு பிறகு: “என்னதான் ஃபிரெண்டா இருந்தாலும் இந்த தபு இப்படியா விக்ரம் முன்னாடி குளிக்கும்?’
“இப்ப வர எல்லாப் படமுமே ஏன் மதத்தை வச்சே வருது? இதுல இந்துக்களை வன்முறை செய்யறவங்களா காட்டியிருக்கானுங்க.’
“யார்டா அந்த ஆன்ட்டி? செமையா இருக்கே. ஜீவா அதை முடிச்சுருவாங்கறே?’
“பாட்டை விட லொக்கேஷனும் கேமராவும் நல்லா இருக்கு. இதுக்கு எதுக்கு 5 பேரு மியூஸிக் போட்டாங்க?’

படம் முடிந்த பிறகு: (யாரிடமோ ஃபோனில்) தனித்தனியா ரெண்டு கதை. ஒண்ணு குடிகார விக்ரமோட காதல் கருகிப் போற கதை. இன்னொண்ணு தன் அப்பாவை அவமானப்படுத்தினவங்களை ஜீவா அட்டாக் பண்ணக் கிளம்பற கதை. கடைசியில் ரெண்டு ஹீரோவும் ஒரு கல்யாணத்துல சந்திக்கிறாங்க. அவங்க ரெண்டு பேரோட பேரும் டேவிட். அவ்ளோதான். சிக்கிடாத.

“மாப்ளே, டாஸ்மாக் பார் எங்க இருக்கு பார். போய் ஒரு ரவுண்டு போட்டே ஆவணும்!’

குமுதம் ரேட்டிங் : ஓகே



வாசகர் கருத்து (32)

ramesh - dharmapuri,இந்தியா
16 பிப், 2013 - 12:33 Report Abuse
 ramesh யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம், {எனக்கு மட்டும் தலைவலி வந்தால் போதும்மா, உங்கள் எல்லோருக்கும் தலைவலி வரவேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்}
Rate this:
prakash - yeral,இந்தியா
14 பிப், 2013 - 02:07 Report Abuse
 prakash டேய் .. திருட்டு DVD ல படம் பார்கிறது தப்புன்னு கத்து கத்து நு கத்துறீங்களே ... இந்த படத்த அதுல கூட பார்க்க முடியாதுடா ... எனக்கு 50 ரூபா வேஸ்ட் ! அன்ன மொக்கயையனா சரியாய் சொன்னிங்கன்னா, முழுசா ஒரு ஆப் அடிச்சிட்டு கூட இந்த படாத பார்கவே முடியலன்னா,,,,,
Rate this:
Priyakutty - chennai,இந்தியா
11 பிப், 2013 - 20:59 Report Abuse
 Priyakutty யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம், {எனக்கு மட்டும் தலைவலி வந்தால் போதும்மா, உங்கள் எல்லோருக்கும் தலைவலி வரவேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்}
Rate this:
பிரபாகரன் - madurai,இந்தியா
11 பிப், 2013 - 20:28 Report Abuse
 பிரபாகரன் படம் நல்ல தான் இருக்கு ,, மொக்கைகளா
Rate this:
raju - covai,இந்தியா
11 பிப், 2013 - 17:56 Report Abuse
 raju விக்ரம் உங்களது டேவிட் படம் பப்படம் ஆனந்துற்கு வாழ்த்துக்கள்
Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

டேவிட் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in