பைரவி பிலிம்ஸ் கலைஞானம் வழங்க ஜெ.கே. புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் ஜெ.கே. தயாரித்து, இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் அறியாதவன் புரியாதவன். கதாநாயகன் ஜெ.கே. உடன் உன்னி மாயா, சரிதா தாஸ் கதாநாயகிகளாக நடிக்க, சுபலேக சுதாகர், பாய்ஸ் ராஜன், அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர். மோகனராமன் ஒளிப்பதிவு செய்ய, சுப்பு, பன்னீர் படத்தொகுப்பு வேலையை கவனிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு பணிகளுடன் இசை மற்றும் இயக்க பொறுப்பையும் ஏற்று இருக்கிறார் ஜெ.கே.சென்னை, குமுளி, பரந்தம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.