Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கபடம்

கபடம்,Kapadam
04 செப், 2014 - 17:32 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கபடம்

தினமலர் விமர்சனம்


‛‛அக்ராஸ் தி ஹால் எனும் ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான தழுவலாக ‛உன்னோடு நான், ‛நேர் எதிர் என ஏற்கனவே இரண்டு படங்கள் சமீபமாக தமிழில் வெளிவந்து, வந்த சுவடு தெரியாமல் பெட்டிக்குள் சுருண்டிருந்தாலும், அதே வரிசையில் ‛அக்ராஸ் தி ஹாலை சுவாகா செய்து முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, இந்தவாரம் சோழா பொன்னுரங்கம் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ‛‛கபடம் சற்றே வித்தியாசம்!

கதைப்படி நாயகர் விச்சு எனும் சச்சினுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் பெண்ணான பத்மினி எனும் அங்கனாராய், கணவராய் வரப்போகிற விச்சுவிடம், கல்யாணத்திற்கு அப்புறம் கிடைக்க வேண்டிய நெருக்கத்தையும், கிறக்கத்தையும் முன்கூட்டியே எதிர்பார்க்கிறார். விச்சுவோ, எல்லாம் திருமணத்திற்கு அப்புறம் தான் என்பதில் உறுதியாக இருக்கிறார். சற்றே வார்த்தையால் பத்மினியை சீண்டவும் செய்கிறார். இதனால் பத்மினியின் தாப பார்வை விச்சுவின் நண்பர் சிவா எனும் ஆதித்யா மீது பாய்கிறது.

விச்சுவிற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு சிவாவுடன் ஒரு ேஹாட்டலில் ரூம்போட்டு சல்லாபம் கொள்ளுகிறார் பத்மினி! விஷயம் தெரிந்த விச்சு, ேஹாட்டலில் அவர்கள் சல்லாபிக்கும் அறைக்கு எதிர் அறையில் தங்கி எப்படி பழி தீர்க்கிறார் என்பது தான் ‛கபடம் படத்தின் கரு, கதை, களம் எல்லாம்!

சச்சினாக விச்சு, பத்மினியாக அங்கனாராய், சிவாவாக ஆதித்யா, ேஹாட்டல் ரூம் பாயாக ‛காதல் சரவணன், கவிதாவாக அணிகா, அஸ்வின், ேஹமா என எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் விச்சுவாக வரும் சச்சின், அஜீத்தை அறிமுகம் செய்த சோழா எஸ்.பொன்னுரங்கத்தின் தயாரிப்பில் அறிமுமாகியிருப்பதாலோ என்னவோ, அடிக்கடி ‛அமராவதி அஜீத்தை ஞாபகப்படுத்த முயன்று அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறார். அல்டிமேட்டாக வாழ்த்துக்கள்!

கே.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு, சாஷியின் இசை, எம்.கே.மணியின் வசனம் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும், ஜோதி முருகனின் எழுத்தும், இயக்கமும் ‛அக்ராஸ் தி ஹால் ஆங்கிலப்படத்தை, தமிழில் மூன்றாவது முறையாக தழுவியிருப்பதால் கள்ளத்தனத்தை சொல்லும் கபடம், நல்ல படமென்றாலும் கள்ளப்படமாகவே தெரிகிறது!

மொத்தத்தில், ‛கள்ளத்தனம் - கபடம் - கலப்படம்!










------------------------------------------------------------



குமுதம் சினி விமர்சனம்





சச்சினின் வருங்கால மனைவி, கள்ளக் காதலனுடன் லாட்ஜில் ரூம் போடுகிறாள். அதைத் தெரிந்து கொண்டு கொலை வெறியுடன் அவள் தங்கியிருக்கும் அறைக்கு எதிரிலேயே ரூம் போட்டு கண்காணிக்கிறான். வருங்கால மனைவி துரோகம் செய்வதால் அவளைக் கொல்லப்போவதாக தன் நண்பனிடமும் தொலைபேசியில் தகவல் தருகிறான். நண்பன், பதறுகிறான். ஏன் தெரியுமா? அந்தக் கள்ளக் காதலன் அவன்தான்!


கதையை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதோ? "அக்ராஸ் தி ஹால் படத்தைத் தமிழுக்கு ஏற்றமாதிரி தட்டியிருக்கிறார் இயக்குநர் ஜோதிமுருகன். (ஏற்கெனவே தமிழ்ல இதைச் சுட்டுட்டாங்க இல்ல) புதுமுகம் சச்சின் கம்பீரம். வருங்கால மனைவி தடம் மாறுவது கண்டு கொதிப்பதும், நொந்து கொள்வதும் பொருத்தம்.


குடும்பக் குத்துவிளக்கு போல் பட்டுப்புடவை பளபளக்க கோயில் வாசலில் முதலில் அங்கனாராய் தோன்றும்போது கும்பிடத் தோன்றுகிறது. அப்புறம் "குத்து விளக்காக மாறும்போது கூப்பிடத் தோன்றுகிறது!


அந்த துரோகி நண்பன் ஆதித்யாவும் ஓகே. லாட்ஜ் மேனேஜராக வரும் காதல் சரவணன் ஏக்கப் பெருமூச்சு விட்டே இளைத்துப் போகிறார்.


இடைவேளை வரை சாதாரணமாகச் செல்லும் படம் அதற்குப் பிறகு வேகம் எடுக்கிறது. வசனமும் அதற்குச் சிறகு கொடுக்கிறது. அந்த க்ளைமாக்ஸ் நிமிடங்கள் திக் திக்...


கபடம் - கள்ளம்!


குமுதம் ரேட்டிங்: ஓகே



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in