Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

துப்பாக்கி

துப்பாக்கி,Thuppakki
24 நவ, 2012 - 16:07 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » துப்பாக்கி

 

தினமலர் விமர்சனம்


"கேப்டன்" விஜயகாந்த், "ஆக்ஷ்ன் கிங்" அர்ஜூன் பாணியில் "இளையதளபதி" விஜய் ஓர் நேர்மையான இராணுவ வீரராக, இந்திய தேசத்தை காக்க களம் இறங்கி இருக்கும் படம்தான் "துப்பாக்கி!"

ஆனால் கேப்டன், ஆக்ஷ்ன் கிங் பாணியில் அரைத்த மாவையே... சாரி, அழித்த தீவிரவாதிகளையே மீண்டும் மீண்டும் அழிக்காமல், "எய்தவன் இருக்க அம்பை நோவதேன்..." எனும் எக்காலத்திற்கும் ஏற்ற பழமொழிக்கேற்ப, "ஸ்லீப்பர் செல்ஸ்" எனப்படும் தீவிரவாதத்தில் ஈடுபடும் கூலிகளை மட்டுமின்றி அவர்களது பாஸையே பந்தாடுவதும், இந்திய ராணுவத்தில் சக வீரர்களுக்கே தெரியாமல் உளவுப்பிரிவிலும், முக்கிய பொறுப்பில் இருப்பதும் அந்த பொறுப்பை பயன்படுத்தி லீவிற்கு ஊருக்கு வரும் விஜய், மும்‌பையின் பல்வேறு இடங்களை தாக்க வரும் தீவிரவாதிகளை மிலிட்டரி நண்பர்கள் உதவியுடன் ஒற்றை ஆளாக ஒழித்து கட்டுவதுடன் "ஒன்மேன் ஆர்மி"யாக செயல்பட்டு அவர்களது "தல"யாக செயல்படும் மூளையின் தலைமையிடத்தையும் ஒற்றை துப்பாக்கி, கொஞ்சம் வெடிமருந்துகளுடன் தகர்த்தெரிவதும் தான் "துப்பாக்கி" படத்தின் புதுமை!

ராணுவ வீரராக விஜய், புதிய கெட்-அப்பில் கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார். கேம்பில் சகவீரர்களோடும், சொந்த ஊர் திரும்பியதும் போலீஸ் நண்பன் சத்யனோடும், விஜய் பண்ணும் காமெடிகள் கலாட்டா. நாட்டை காட்டிக் கொடுக்கும் அதிகார துரோகி‌கள் முன் 2 துப்பாக்கிகளை வைத்து, "இது லோக்கல், இது என்னோடது. இந்த லோக்கல் துப்பாக்கியால நீயா சுட்டுகிட்டா, அது தற்கொலை, உன் பிள்ளைக்கு வேலை பொண்டாட்டிக்கு பென்ஷன் எல்லாம் கிடைக்கும். அதுவே நான் சுட்டு செத்தா உன் குடும்பமே நடுத் தெருவுக்கு வரும்..." என்று பன்ச் டயலாக் பேசியபடி அவர்களை தீர்த்துகட்டுவதில் அதிரடி விஜய் அலட்டல் இல்லாமல் தெரிகிறார் பலே பலே! அதே மாதிரி காஜல் அகர்வாலிடம் எனக்கு தம் அடிக்கிற பொண்ணுங்களைத்தான் பிடிக்கும் என கலாய்க்கும் இடங்களில் ரொமான்டிக் விஜய்யும் தூள் பரத்துகிறார்.

விஜய் மாதிரியே காஜல் அகர்வாலும், காதல் அதிரடியாக பெண் பார்க்க யூனிபார்முடன் வரும் விஜய்யை பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என தொடர்ந்து கலாய்ப்பதில் தொடங்கி கவர்ச்சி கடலில் மூழ்கி முத்தெடுப்பது வரை... ரசிகர்களை தன் வலைக்குள் வீழ்த்தி விடுகிறார்.

சத்யனுக்கு சரிசமமாக ‌காமெடியில் களைகட்டும் ஜெயராம், மும்பை போலீஸாக, விஜய்யின் நண்பனாக வரும் சத்யன், வில்லன் வித்யூத் ஜம்வால் எல்லோரும் கச்சிதம்!

துப்பாக்கி படத்தின் மற்றுமொரு ஹீரோ சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு என்றால் மற்றொரு வில்லன் ஹாரீஸ் ஜெயராஜின் இசை என்று சொல்லி ஆக வேண்டும்! என்னாச்சு ஹாரிஸ்க்கு எந்த ஒரு பாடலும் மனதில் நிற்கவில்லையே...?!

ஆக்ஷ்ன் படங்கள் என்றாலே லாஜிக் மீறல்கள் இல்லாமலா...? ‌ஏகப்பட்டது இருக்கிறது! அதிலும் இந்திய ராணுவத்தில் இருக்கும் ஓர் இளம் ராணுவ வீரர், சொந்த ஊரான மும்பைக்கு லீவிற்கு வருவதும், வந்த இடத்தில் அந்த ஊர் போலீஸ்க்கு சட்டபடி தெரிவிக்காமலே, மொத்த தீவிரவாத கூட்டத்தையும் ஒழித்து கட்டுவதும் நம்பமுடியாத கதை தான் என்றாலும், மும்பை தாக்குதல்களுக்கு முன் இப்படியும் நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே! என்று யோசிக்க வைக்கும் விதத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஜெயித்திருக்கிறார்!

ஆக மொத்தத்தில் மிலிட்டரி மேஜிக் படமான "துப்பாக்கி - நிச்சயம் வெற்றி துப்பாக்கி!!"



-------------------------------------------------------

கல்கி சினி விமர்சனம்


கோடம்பாக்கம் மசாலா குதிரையில் ஏறி மீண்டும் ஆக்ஷன் சவாரி அடித்திருக்கிறார் விஜய். “ஏழாம் அறிவு’ சறுக்கிவிட்டாலும் “துப்பாக்கி’ தூக்கி நிறுத்தி இருக்கிறது இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸை. வார்த்தையில் விளையாடாத, ஹீரோயிஸம் காட்டாத விஜய்யைப் பார்க்கப் பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல. மிலிட்டரி ஆஃபிஸர் கெட்டப்பில் கட்டுத்திட்டு; கரவு செரவு.

கலாட்டாவும் காமெடியாகவும் நகரும் கதையில் “ஸ்லீப்பர் செல்ஸ்’ என்கிற தீவிரவாத நெட்ஒர்க் புகுந்து கொள்ள திரைக்கதையில் தீ...தீ...தீ...! மும்பையில் பன்னிரண்டு இடத்தில் குண்டு வெடிக்க வைக்கும் ப்ளானை விஜய் கண்டுபிடிப்பதெல்லாம் புராண காலத்து டெக்னிக். எனினும் பன்னிரண்டு தீவிரவாதிகளையும், பன்னிரண்டு கமாண்டோக்கள் பின் தொடர்ந்து பொட்டுன்னு நெத்தியில் போட்டுத் தள்ளும்போது திரைக்கதையின் முதுகெலும்பில் ஜிலீரென்று விறுவிறு எகிறுகிறது! எந்த இடத்திலும் கதையிலிருந்து தன்னை துருத்திக் காட்டாத விஜய்யைப் பாராட்டியே ஆகவேண்டும். சடசடவெனச் சரிந்துகொண்டிருந்த அவரது ஆக்ஷன் படங்களுக்கு மத்தியில் துப்பாக்கி தித்திக்கும் ஆறுதல்.

ஆக்ஷன் ப்ளாக்குகளுக்கு மத்தியில் வந்துபோகும் கமர்ஷியல் ப்ரேக் காஜல் அகர்வால். அழகும் இளமையும் கூட்டணி போட்டிருக்கும் இவர், ரொமாண்டிக் சீன்களுக்கும் பாடல்களுக்கும் வந்துபோகும் கோடம்பாக்க ஹீரோயின்.

சத்யன், ஜெயராம் சில காட்சிகளில் ஜோர்... சில டயலாக்குகளில் ஸ்கோர்... பல காட்சிகளில் போர்!

வில்லன் வித்யூத் ஜம்வால் அண்டர் ப்ளேயிலும் ஆக்ஷன் ப்ளேயிலும் அசத்தல்! விஜய்யோடு மோதும்போது துப்பாக்கியின் தோட்டா சீறல்! ஹாரிஸின் இசையில் “அண்டார்டிகா’, “கங்கா’ பாடல்கள் இன்னும் சில நாட்கள் காதுகளில் ரீங்கரிக்கும். சந்தோஷ் சிவனின் கேமராவுக்கு வேலையே இல்லை.

“ஸ்லீப்பர் செல்ஸ்’ என்பது நாற்பது நாள் விடுமுறையில் வரும் ஒரு மிலிட்டரி காமாண்டோ முறியடித்துவிடும் விஷயமா முருகதாஸ் ஸார்?

இப்படி லாஜிக் லாஜிக்... என்று மனசில் ஒரு பட்சி கத்தினாலும்... ராணுவத்தினரின் தியாகத்தையும் “ஸ்லீப்பர் செல்ஸ்’ புகாத ஒரே மிலிட்டரி இந்திய ராணுவம்தான் என்று அவர்கள் கடமையுணர்வையும் காட்டி நெகிழ வைத்த விட்டார் முருகதாஸ்.

துப்பாக்கி - அதிரடி



வாசகர் கருத்து (322)

manivannapandiyan - vedaranyam,இந்தியா
03 மார், 2013 - 16:27 Report Abuse
manivannapandiyan விஜய் இது மாதிரி படங்களில் நடித்தால் கண்டிப்பாக மற்ற ஹீரோக்கள் வீட்டுக்கு போகவேண்டியது தான். இனி தளபதி ஆட்டம் ஆரம்பம்....
Rate this:
சதீஷ் - madukkur,இந்தியா
18 ஜன, 2013 - 10:23 Report Abuse
 சதீஷ் முருகதாஸ் அண்ட் விஜய் நல்ல உழைப்பு..
Rate this:
சுப்புராம் - rajapalayam,இந்தியா
12 ஜன, 2013 - 15:27 Report Abuse
 சுப்புராம் வொண்டெர் ஹீரோ
Rate this:
amalraj - chennai,இந்தியா
11 ஜன, 2013 - 12:15 Report Abuse
 amalraj முருகதாஸ், விஜி,இவர்களை சொல்லி என்னத்த பண்ண, இந்த மாதிரி படம் பார்க்கும் ரசிகன் irukkumvari பணம் பண்ணும் கில்லிகல்லுக்கு kurai ஒன்றும் இல்லை .வாழ்க வளமுடன்
Rate this:
vivek - madurai,இந்தியா
09 ஜன, 2013 - 10:31 Report Abuse
 vivek சுபெர்ப் படம்......
Rate this:
மேலும் 317 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

துப்பாக்கி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in