Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

மதில் மேல் பூனை

மதில் மேல் பூனை,Mathil Mel Poonai
  • மதில் மேல் பூனை
  • விஜய் வசந்த்
  • விபா
  • இயக்குனர்: பரணி ஜெயபால்
19 மார், 2013 - 17:49 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மதில் மேல் பூனை

தினமலர் விமர்சனம்



எந்தப்பக்கம் தாவுவது என்று தெரியாத பூனை போல் அல்லாடும் திரைக்கதையுடன் ஒரு அவியல் படம். இயற்கையின் வனப்பை அள்ளி வந்திருக்கும் ஒளிப்பதிவு, ஆங்கிலப் படங்களுக்கு நிகரான திகில் காட்சிகள், புன்னகை பூக்க வைக்கும் இசை! ஆனால், எல்லாமே சேற்றில் கொட்டிய சந்தனம்.

மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கார்த்திக் (விஜய் வசந்த்), திவ்யாவை (விபா நடராஜன்) காதலித்து திருமணம் செய்கிறார். குலதெய்வ வழிபாட்டுக்கு, சொக்கம்பட்டிக்கு வரும் திவ்யாவையும், கார்த்திக்கையும் துரத்துகிறது நால்வர் கூட்டம். சிறுவயதில் தவறு செய்து, திவ்யாவால் காட்டிக் கொடுக்கப்பட்டு, சிறுவர் சிறைக்கு போகும் நால்வர் கூட்டம், பழி தீர்க்க தேர்ந்தெடுக்கும் இடம்... அடர்ந்த காடுகள் சூழ்ந்த கோயில். நெருப்பு வளையத்துக்குள் தம்பதிகளை வைத்து, கும்மாளம் போடுகிறது நால்வர் அணி. அதிலிருந்து தப்பி... திவ்யாவும், கார்த்திக்கும் அவர்களுக்கு சமாதி கட்டும்... க்‌ளைமாக்ஸ்.

விஜய் வசந்த் இப்படி ஒரு விஷப் பரிட்சை எழுதியிருக்க வேண்டாம். நாயகனின் நண்பனாக, நன்றாக போய்க் கொண்டிருந்த அவரது கச்சேரியில் பிசிறு தட்டுகிறது. அதிக ஒப்பனைகளுடன் செயற்கையாகத் தெரிகிறார் விபா. இயக்குனர் பரணி ஜெயபால், செல்வராகவனிடம் தொழில் கற்றவர் என்பதற்கு சைக்கோ காட்சிகளைத் தவிர சாட்சிகளில்லை!

ஒரே படத்தில் எல்லா வண்ணங்களையும் காட்ட நினைத்து, தோற்றுப் போய், திருஷ்டி பூசணிக்காய்க்கு வர்ணம் அடித்தாற் போல் தெரிகிறது படம்.

மொத்தத்தில், "மதில்மேல் பூனை", "மயக்கத்தில் பூனை!"



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

மதில் மேல் பூனை தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in