Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » வரவிருக்கும் படங்கள் » இசை

இசை

  • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
  • நடிகை : சாவித்திரி
  • இயக்குனர் :எஸ்.ஜே.சூர்யா
Share  
Bookmark and Share

தினமலர் முன்னோட்டம் » இசை

வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி, நடிப்பதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகும் படம் இசை.

புதிய இசையமைப்பாளர் ஒருவர் வருகையால், அதற்கு முன் கொடிகட்டிப்பறந்தவர் தன் இடத்தை இழக்கிறார். அந்த இழப்பு வலியாகி, பொறாமையாக மாறி புதிய இசையமைப்பாளருக்கு பிரச்னை தரும் அளவுக்கு பழிவாங்கும் குணமாக மாறுகிறது. அந்த பிரச்னைகளிலிருந்து தன் காதலி உதவியுடன் எப்படி மீண்டும் தனது நிலையை தக்க வைத்து கொள்கிறார் என்பதே இப்படத்தின் கதை.

இப்படத்தில் இசையமைப்பாளராக எஸ்.ஜே.சூர்யாவும், அவரது காதலியாக மும்பையை சேர்ந்த சாவித்திரி என்பவரும் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியாரும், மேலும் இரண்டு பிரபல கதாநாயகிகள் முக்கிய பாடலுக்கும் ஆட இருக்கின்றனர். இப்படம் முழுக்க முழுக்க சென்னையில் படமாக இருக்கிறது. ஒரு சில காட்சிகள் மட்டும் கேரளா மற்றும் கர்நாடக மலைப்பகுதிகளில் படமாக்கப்பட இருக்கிறது.

கே.வி.ஆனந்திடம் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சவுந்தர்ராஜன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, பாடல்கள் அனைத்தையும் வாலி எழுத, எஸ்.ஜே.சூர்யா இசையமைத்து, இயக்கவும் செய்கிறார். ஏ.எஸ்.ஏ.மல்டி மீடியா சார்பில் விக்டர் ராஜபாண்டியன் தயாரிக்கிறார். ஜூன் மாதம் முதல் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழியிலும் இப்படம் உருவாக இருக்கிறது.
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in