Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

நீதானே என் பொன்வசந்தம்

 • நீதானே என் பொன்வசந்தம்
 • ஜீவா
 • சமந்தா
 • இயக்குனர்: கவுதம் மேனன்
23 டிச,2012 - 16:59 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நீதானே என் பொன்வசந்தம்

  

தினமலர் விமர்சனம்


"மின்னலே", "காக்க காக்க" போன்ற எவர்கிரீன் படங்களை தந்த கெளதம் வாசுதேவ் மேனனின் படம் தானா இது? எனக்கேட்கும் அளவிலேயே இருக்கிறது "நீதானே என் பொன்வசந்தம்" என்பது நிஜம்!

அவரே இயக்கிய "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தின் பார்ட்-2 அல்லது பார்ட்-1 என்கிற மாதிரியான ஒரு கதை! அதில் மணிரத்னத்தின் "அலைபாயுதே" தொடங்கி கெளதமின் "விண்ணைத்தாண்டிய வருவாயா" உள்ளிட்ட எண்ணற்ற படங்களின் அல்டா உல்டா காதல் காட்சிகள்.... என்னாச்சு கெளதம் உங்களுக்கு..?!

கதை அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை..., சின்ன வயது முதலே ஜீவாவுக்கு தெரிந்த சமந்தாவிற்கும், சமந்தாவிற்கு தெரிந்த ஜீவாவுக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதலும், காதல் ஊடல், கூடலும் தான் கதை! அதை இன்னும் தெளிவாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும் ஜீவா, சமந்தாவின் எல்.கே.ஜி., யு.கே.ஜி., முதல் 10ம் வகுப்பு வரையிலான இன்பாக்ட்சுவேஷன் ஈர்ப்பு, ப்ளஸ் 2, கல்லூரி காதல் உள்ளிட்டவைகள் நீண்டு கொண்டே போகாமல் இருந்திருந்தால் இன்றைய இளம் கதாலர்களை இப்படம் பெரிதும் கவரும் என்பது நிதர்சனம்.

படத்திற்கு ஒ‌ரே ஆறுதல் சந்தானத்தின் காமெடி மட்டுமே. அதிலும் சந்தானமும், ஜெஸியாக வரும் அந்த குண்டு பெண்ணும் ரொமான்ஸ் ‌பண்ணும் விண்ணைத்தாண்டி வருவாயா காமெடி செம ரகளை.

ஆ, ஊ... என்றால் அது சோகம் என்றாலும் சரி, சந்தோஷம் என்றாலும் சரி இசையமைப்பாளர் இளையராஜா பாடுவதை தவிர்த்திருந்தாலே படம் பாதி பழைய படங்களின் சாயலில் இருந்து தப்பித்திருக்கும்! பரவாயில்லை ஓம் பிரகாஷ் மற்றும் எம்.எஸ்.ஸ்ரீபிரபுவின் ஒளிப்பதிவு அழகிய ஆறுதல்!

எடிட்டர் ஆண்டனியின் கைகளை இயக்குனர் கெளதம் கட்டிப்போட்டு விட்டாரா தெரியவில்லை...? நீள நீளமான காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. ஸ்டைலான ஜீவா, சமந்தா, சந்தானம் எல்லோரும் நன்றாகவே நடித்திருக்கின்றனர் ஆனாலும் என்ன பயன்..?!

"நீதானே என் பொன்வசந்தம்" - கெளதம், "பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!"-------------------------------------------------------குமுதம் விமர்சனம்


நான்காம் வகுப்பு படிக்கும்போது ஜீவாவும், சமந்தாவும் காதலிக்கிறார்கள். இருவருக்கும் சண்டை வருகிறது. பிரிகிறார்கள். பத்தாம்வகுப்பு படிக்கும்போது ஜீவாவும், சமந்தாவும் காதலிக்கிறார்கள். இருவருக்கும் சண்டை வருகிறது. பிரிகிறார்கள். கல்லூரி படிக்கும் போது ஜீவாவும், சமந்தாவும் காதலிக்கிறார்கள். இருவருக்கும் சண்டை வருகிறது பிரிகிறார்கள்.  வேலைக்கும்போதும் போது ஜீவாவும் சமந்தாவும் காதலிக்கிறார்கள். இருவருக்கும் சண்டை வருகிறது. பிரிகிறார்கள்.

என்னங்க? எதாவது ஃப்ரூப் மிஸ்டேக்கா என்று சந்தேகம் வருகிறதா? அதெல்லாம் இல்லை. விண்னை தாண்டி வருவாயா படத்தின் வெற்றியை பார்த்து கௌதம் சூடு போட்டு கொண்ட கதை இது தான்.

படத்தின் நிஜ ஹீரோ இளையராஜாதான் சாய்ந்து சாய்ந்து பாட்டின்போது நமக்கும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவைப்படுகிறது. என்னோடு வா வா பாடலின் போது நமக்கும் காதல் பெருக்கெடுத்து ஓடுகிறது. தான் என்றைக்கும் இளையராஜா தான் என்பதை நிரூபித்திருக்கிறார் இசைஞானி.

ஜீவா ஓகே முடியை கொஞ்சம் கட பண்ணி முறைப்பாக இருந்தால் சின்ன பையன் மாதிரி இருப்பாய் என்று யார் சொன்னார்களோ தெரியவில்லை. வெளிநாடு செல்லும் காதலியிடம் அந்த ஊருல எனக்கு ஒரு பிரண்ட் இருக்கா. அவளை சீக்கிரம் வரச் சொல்லு. நான் காத்திக்கிட்டிருக்கேன்னு சொல்லு. என்று வசனம் பேசும்போது ரசிக்க வைக்கிறார். டைம் கிடைக்கும் போது எல்லாம் கிஸ் அடித்து விட்டு திடீரென நல்ல பிள்ளையாக படிக்க போவது எல்லாம் பூவுல காது.

வசனம் பல இடங்களில் கவிதை. பளிச்சென்று ஐஸ்கிரீம் மாதிரி இருக்கிறார் சமந்தா. பள்ளிக்கூடப் பெண். கல்லூரி மாணவி,. பள்ளிக்கூடத்தை நடத்தும் பெண்மணி, என்று ஒவ்வொன்றுக்கும் பாடி லாங்குவேஜை மாற்றி நடித்திருப்பது அசத்தல்.

சுடிதாருங்க கழட்டி விட்ட பின்னாடி தானேடா உனக்கெல்லாம் பேண்ட் ஷர்ட் போட்டவனையே தெரியும்? சந்தானத்தின் வழக்கமான (ப)பிஞ்ச் டயலாக்குகள்.

சொந்தக்கார பெண்ணை தாலி கட்டுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால் தவிக்க விட்டு ஓடிப்போய் ஹீரோ காதலியை தேடிப்போவது செமை செயற்கை.

கொஞ்சம் ஜிவ்வு. மீதி ஜவ்வு.

நன்றி: குமுதம்

வாசகர் கருத்து

s.dhanasekar - pavoorchathram,இந்தியா
02 மார்,2013 - 16:57
s.dhanasekar சூப்பர்
s.dhanasekar - pavoorchathram,இந்தியா
02 மார்,2013 - 16:56
s.dhanasekar இந்த படம் காதல்ல என்ன என்ன நடக்கும் என்ன பிரச்சனை இருக்கும்னு நல்லா புரிய வைக்கும் ஒரு படம் தான் "நீ தானே என் பொன்வசந்தம் "மிக மிக மிக மிக அருமையான படம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுது
விமல் ராஜ் mech - ramnad,இந்தியா
09 பிப்,2013 - 16:01
 விமல் ராஜ் mech மொக்கை படம்
rishi - chennai,இந்தியா
05 பிப்,2013 - 23:41
 rishi காதளித்தவர்களுக்குதான்; தெரியிமா ? படம் நல்ல படம்னு போங்கப்பா நீங்களா பெரிய காதல் குறுப்ப? உட்கரமுடில செமபோர் ,வசனம் சொதப்பல்,ஒளிப்பதிவு சொதப்பல்,திரைகதி சொதப்பல்.
கார்த்திக் - Bangalore,இந்தியா
18 ஜன,2013 - 23:45
 கார்த்திக் மிக அருமையான படம். Friends don't miss this movie, especially who has great values for Love.
சதீஷ் - madukkur,இந்தியா
18 ஜன,2013 - 10:19
 சதீஷ் படம் சுமார் தான். இளையராஜா பாடல்கள் பலவீனம்.. திரைகதை பலவீனம்..
முருகன்.u - bukoba,தான்சானியா
17 ஜன,2013 - 21:16
 முருகன்.u படம் சூப்பர், லவ் பண்ணியிருந்தால் இந்த படம் எல்லாருக்கும் பிடிக்கும், நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தை பார்க்கும் முன்பு, இதனுடைய விமர்சனம் கேட்ட போது இந்த படம் பார்க்காமல் இருப்பதே மேல் என்று தோன்றியது, பார்த்த பின்பு, நல்ல படத்தை மிஸ் பண்ணிருப்பேன் என்று தோன்றியது.
Eshwar - chennai,இந்தியா
16 ஜன,2013 - 17:08
 Eshwar Luv you Gowtham, Really a Excellent movie.
டோனி - conakry,கினியா
16 ஜன,2013 - 00:07
 டோனி விமர்சனம் சரியில்லை. ஆனால் படம் சூப்பர் . நான்கு முறை பார்த்தும் திருப்தி இல்லை .
s.sivakumar - Bangalore,இந்தியா
15 ஜன,2013 - 13:44
 s.sivakumar If you have experienced the pain and pleasure of love, You will just love this movie. And of course, who else can make you feel the pain or pleasure better than Ilaiyaraja ! Thanks Goutham Menon for an excellent movie.
கலை செல்வன் - doha,கத்தார்
15 ஜன,2013 - 00:57
 கலை செல்வன் தலையுமில்லாமல், வாலுமில்லாமல் குத்துப்பாட்டு, அடிதடி சண்டையுடன் வரும் படங்களுக்கு மத்தியில் மிக அருமயான காதல் கதையை உணர்வுபூர்வமாக ஆங்கில படங்களுக்கு இணையாக படமாக்கப்பட்டுள்ளது. இது போன்ற இயல்பான உயிரோட்டமுள்ள, ஆபாசமில்லாத படங்களை காண்பது அரிதாகிவிட்டது. 55 வயதிலும் நான் இந்த படத்தை மிகவும் ரசித்தேன். எல்லோருடைய நடிப்பும் அருமை சிறப்பாக ஜீவா, சமந்தா சூப்பர்! உண்மையான காதலர்களாகவே மாறி திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நல்லதொரு இயக்கத்தில் சிறந்த படம்.
ravisankar - kanchipuram,இந்தியா
14 ஜன,2013 - 07:27
 ravisankar jeeva and samantha acted well.i expect similar film from goudam vasudev menan.
vijay - usa,இந்தியா
10 ஜன,2013 - 22:10
 vijay இரெம்ப நல்ல படம்......
thillaimani - karur,இந்தியா
08 ஜன,2013 - 11:22
 thillaimani படம் நல்ல இருக்கு.காதல் காட்சிகள் அருமை.ஜீவா மற்றும் சமந்தாவின் நடிப்பு பிரமாதம்.
BHARANI - sivagangai,இந்தியா
08 ஜன,2013 - 00:05
 BHARANI படத்தை இன்னும் பார்க்கல.பார்க்கனும்னு தோனல. 'LIFE OF PI' மாதிரி எல்லாம் தமிழ்ல எப்ப எடுக்க போறாங்களோ?. I'M WAITING.சஸ்பென் சோடவே சாக வச்சிடதீங்கட!!
deeban - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
06 ஜன,2013 - 16:07
 deeban really nice movie. ilaiyaraja ur great. samantha acting super. she's very beautiful and cute. ennodu va va, muthal murai song fantastic. unmaiya love panravangalukku than intha padam pudikum.
haisam - puttalam ,இலங்கை
06 ஜன,2013 - 07:42
 haisam super movie love le iwwalavu waliya 5 time parthiden tx govtham
suresh - mumbai,இந்தியா
05 ஜன,2013 - 16:35
 suresh டைம் வீண் ஆகி விட்டது! நான் 2 விஷயம் கற்று கொண்டேன்! 1. கௌதம் படம் திரை அரங்கில் பார்க்க கூடாது. 2. கௌதம் படம் திருட்டு சி டி யில் கூட பார்க்க கூடாது.
dharan - chennai,இந்தியா
05 ஜன,2013 - 02:28
 dharan மிகவும் அருமையான படம் . லவ் மொவயே பாக்காத நானே டூ டைம் பார்த்தேன் . சமந்தா நடிப்பு அருமை
Ramesh H - Chennai,இந்தியா
05 ஜன,2013 - 00:05
 Ramesh H டைம் வீண் ஆகி விட்டது! நான் 2 விஷயம் கற்று கொண்டேன்! 1. கௌதம் படம் திரை அரங்கில் பார்க்க கூடாது. 2. கௌதம் படம் திருட்டு சி டி யில் கூட பார்க்க கூடாது. நல்ல வேலை neerpparavai மற்றும் கும்கி பார்த்த திருப்தி இருக்கிறது.
raja - coimbatore,இந்தியா
04 ஜன,2013 - 19:54
 raja 100 ரூபாய் வேஸ்ட் ........
Priya - Bangalore,இந்தியா
04 ஜன,2013 - 17:51
 Priya Very good movie. Thanks Goutham for this wonderful movie.
vasanthakumar - bangalore,இந்தியா
04 ஜன,2013 - 16:09
 vasanthakumar Awesome movie, samantha is really super.thanx to gowthem
ஹரிஷ்குமார் - Chennai,இந்தியா
04 ஜன,2013 - 15:24
 ஹரிஷ்குமார் படத்தை சுத்தமாக பிடிக்கவில்லை ... திரையரகில் உட்கார முடியவில்லை .. மொக்க படம் .. எனக்கு தெரிந்த வரை படத்தை ஒருவர் கூட விரும்ப வில்லை .... சொதபல் ........ ஏமாந்து போனேன் ..
பிரியா - Bangalore,இந்தியா
04 ஜன,2013 - 14:41
 பிரியா மிக நல்ல படம். உண்மையா Love பண்ற எல்லரோக்கும் இந்த படம் பிடிக்கும். Thanks Goutham for this wonderful movie. Thanks Illayaraja, Yuvan
Murugesh - Jakarta,இந்தோனேசியா
04 ஜன,2013 - 13:19
 Murugesh very nice movie in recent times, music, songs
shankar - chennai,இந்தியா
04 ஜன,2013 - 10:29
 shankar பெஸ்ட் மொவயே ஒப் தி இயர்
கிரிஷ் - bangalore,இந்தியா
03 ஜன,2013 - 20:25
 கிரிஷ் சமந்தா அருமையான நடிப்பு கடைசி 20 நிமிடம் எக்சலண்ட்
nisha - chicago,யூ.எஸ்.ஏ
02 ஜன,2013 - 20:54
 nisha i totally agree with you Mr Karun..
surya - Madurai,இந்தியா
02 ஜன,2013 - 15:50
 surya Ennodhu va va Song was its very nice chanca ella its amazing
karun - Bern,சுவிட்சர்லாந்து
02 ஜன,2013 - 02:21
 karun நீதானே என் பொன்வசந்தம்’.மிக அருமையான படம்., காதலிதவர்களுக்கு மட்டும் தான் தெரியும் ஈகோவும் அதனால் ஏற்படும் மிகுதியான காதலும்... நன்றி இளையராஜா மற்றும் கெளதம் சார்... இளையராஜா இசையில் நா.முத்துக்குமார் வரிகள். எல்லா பாடல்களும் தேவாமிர்தம் ரகம்! கார்த்திக்கின் “என்னோடு வா வா என்று..” பாடல் இன்னொரு தாலாட்ட வருவாளா! சுனிதி சௌகானின் “முதல் முறை பார்த்த ஞாபகம்..” பாடல் பல காட்சிகளில் வசனமில்லாமலே கதை சொல்ல உதவியிருக்கிறது. இளையராஜாவின் “வானம் மெல்ல...” மீண்டும் எண்பதுகளுக்கு கூட்டிப் போகிறது. படத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜாவின் பின்னணி இசை. இசை பேச வேண்டிய இடத்தில் இசையையும், கண்கள் மட்டும் பேசிக்கொள்ள வேண்டிய இடத்தில் மௌனத்தையும் கதை பேச வைத்து இசைக்காவியம் இழைத்திருக்கிறார் இசைராஜா. பின்னணி இசையை அனுபவித்து பார்க்க வேண்டிய மற்றொரு படம் இது.
க்க்ரிஷ் - Ras al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்
01 ஜன,2013 - 23:17
 க்க்ரிஷ் good direction gowtham sir. samantha acting
Nambi - Dubai,இந்தியா
01 ஜன,2013 - 22:19
Nambi This is the flim for lovers and lovers only no to others who don't know what is love
பாஷா - Kuwait ,இந்தியா
01 ஜன,2013 - 13:37
 பாஷா நல்லா படம் காதல் உண்மையனது
Advertisement

மேலும் விமர்சனம்

டாப் 5 படங்கள்

 • Advertisement

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in