Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

சேட்டை

18 ஏப்,2013 - 12:17 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சேட்டை

   

தினமலர் விமர்சனம்


ஆரம்பம் முதல் இறுதி வரை படம் முழுக்க மோஷன் போவதை பற்றி மட்டுமே பேசியிருக்கும், காட்சிப்படுத்தியிருக்கும் யு.டி.வி.மோஷன் பிக்சர்ஸின் மோசமான படம் தான் "சேட்டை" என்றால் மிகையல்ல!
பின்ன என்னங்க?! ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, நாசர், ஷாயாஜி ஷிண்டே, சித்ரா லட்சுமணன், ஹன்சிகா, அஞ்சலின்னு பெரிய பெரிய நடிகர், நடிகையையெல்லாம் வச்சுகிட்டு, படம் முழுக்க சந்தானத்துக்கு வயிற்றை கலக்குவதையும் அவர் கண்டவன் வீட்டில் கக்கா போவதையும், கார்பன்டை ஆக்சைடு கேஸ் ரிலீஸ் செய்வதையுமே காட்சிப்படுத்தி நம்மை கஷ்டப்படுத்தி தியேட்டரை நாறடித்து விடுகிறார்கள் என்றால் பாருங்களேன்! இதில் "டில்லி பெல்லி எனும் இந்திப்படத்தின் ரீ-மேக் என்ற பில்-டப் வேறு!
"கோ மாதிரி பத்திரிகையாளர்களின் பராக்கிரமம் பேசும் படங்கள் வந்த தமிழ் சினிமாவில், இது மாதிரி பத்திரிகையாளர்களை பழிக்கு பழிவாங்கும் கதைகளும் வெளிவருவது கொடுமை! ஆர்யா, பிரேம்ஜி ஆ‌கியோரது நடிப்பு, அஞ்சலி, ஹன்சிகாவின் இளமை துடிப்பு உள்ளிட்டவைகளை, சந்தானத்தின் அதிர்வேட்டுகள் அமுக்கிவிடுவதால் அவைப்பற்றியெல்லாம் நோ கமெண்ட்ஸ்.
ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி மூவரும் ஒரே தமிழ் தினசரியில் நிருபர், புகைப்பட நிருபர், கார்ட்டூனிஸ்ட்களாக வேலை பார்க்கும் தோஸ்துகள், அஞ்சலி ஆங்கிலப்பத்திரிகை நிருபர். ஹன்சிகா, ஆர்யாவை தான் சார்ந்திருக்கும் மேல்தட்டு நாகரீகத்துக்கு அழைத்து போகத்துடிக்கும் ஏர்ஹோஸ்டஸ். அவர் கையில் தரப்படும் ஒரு பார்சலை ஆர்யா மூலம் நாசருக்கு தரச்சொல்கிறார். ஆர்யாவோ, சந்தானத்திடம் தருகிறார். சந்தானமோ, பிரேம்ஜியிடம் தருகிறார். கூடவே இலியானா சிக்கன் சாப்பிட்டதால் நிக்காமல் போகும் தன் மலத்தையும் ஒரு டப்பாவில் பிடித்து, போகும் வழியில் லேபில் டெஸ்ட்க்கு கொடுத்துவிட்டு போக சொல்கிறார். பார்சல் மாறுகிறது! நாசர் வருகிறார். ஆயை ஆராய்ச்சி பண்ணி ஆர்யா, சந்தானத்தை அடித்து உதைத்து தன் வைர பார்சலை கொடுத்து விட சொல்கிறார். அப்புறம்? அப்புறமென்ன...? அந்த பார்சலில் ரூ.2 கோடி மதிப்புள்ள வைரம் இருப்பது தெரிந்ததும் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி மூவரும் அதை காசாக்கி கரையேற நினைக்கின்றனர். விடுவாரா நாசர்? இறுதியில் ஜெயித்தது அந்த மூவரா? நாசரா...? என்பது க்ளைமாக்ஸ்!
இந்த கதையையும், காட்சிகளையும் விட அடிக்கடி சந்தானம் வயிற்றை பிடித்து கொண்டு ஆசன வாயால் பேசும் காட்சிகள் தான் அதிகம் என்பதால் படம் முழுக்க போரடிக்கிறது. நாரடிக்கிறது!
எஸ்.எஸ்.தமனின் இசை, பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு, ஆர்.கண்ணனின் இயக்கம் என எல்லாம் இருந்தும் படம் மொத்தமும், மலமும் மலம் சார்ந்த இடமும்மாக இருப்பது கொடுமை!
மொத்தத்தில், "சேட்டை" - கோட்டை விட்ட "குசு மூட்டை (இந்த அருவெறுப்பான வார்த்தையை இந்த இடத்தில் நாம் பயன்படுத்தியதற்கு சேட்டையை முழுசாக பார்த்த துணிச்சல் தான் காரணம்)!"


-----------------------------------------------------------------

குமுதம் சினி விமர்சனம்


வடக்கே சக்கைப்போடு போட்ட “டெல்லி பெல்லி’யின் கலகல தமிழ் வடிவம்.
கடத்தல் வைர டப்பாவையும், சந்தானத்தின் “கக்கா’ டப்பாவும் கை மாறிப் போக நடக்கும் காமெடி கலாட்டாதான் சேட்டை.
தீப்பெட்டி டப்பாவுக்குள் அடைக்கக்கூடிய சின்ன கதைதான் என்றாலும் சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறு காட்டியிருக்கிறாரர் இயக்குநர் ஆர்.கண்ணன்.
லட்டு திங்க ஆசை என்று ஒன்றுக்கு இரண்டாய்ச் சாப்பிடுகிறார் ஆர்யா.
படம் முழுக்க சிரிப்பலைகளை எழுப்புகிறார் சந்தானம். ஏதோ கோழிக் கறியைச் சாப்பிட்டுவிட்டு படம் பூராவும் அவர் சப்தமெழ “கக்கா’ போவதை விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள். அந்த கக்கா சமாசாரத்தை வைரம் என்று நினைத்து நாசர், மேசை மேல் கொட்டி பார்க்கும்போது தியேட்டரில் சோளப்பொறி சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள், மேலும் சாப்பிடப் பிடிக்காமல் “உவ்வே’ செய்கிறார்கள்.
பங்களாவாயன் பிரேம்ஜிக்கு தனி டான்ஸ் வேறு சகிக்கவில்லை. ஹன்சிகா இளைத்திருக்கிறார். அஞ்சலி பருத்திருக்கிறார்.
மும்பையையும், வெளிநாட்டையும் முத்தையாவின் ஒளிப்பதிவு குளுமையாகக் காண்பிக்கிறது.
தமனின் இசையில் “அகலாதே’ பாடல் மனசை விட்டு அகலாமல் இருக்கிறது.
சேட்டை - மூக்கைப் பொத்திக் கொண்டு சிரிக்கலாம்.
குமுதம் ரேட்டிங் - ஓகே

வாசகர் கருத்து ()

தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

டாப் 5 படங்கள்

  • Advertisement

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in