Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

புத்தகம்

புத்தகம்,Puthagam
20 ஜன, 2013 - 14:05 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » புத்தகம்

தினமலர் விமர்சனம்



ஊழல் அமைச்சரின் கோடிக்கணக்கான கறுப்பு பணம் மறைக்கப்பட்டிருக்கும் இடம் குறித்த விவரத்தாள், அரசு நூலகத்தில்... அஹிம்சை அண்ணலின் புத்தகத்தில்! விவரம் அறிந்து, புதையலைக் கண்டெடுக்கும் மூன்று இளைஞர்களும், அவர்கள் சந்திக்கும் விளைவுகளுமே கதை.

முன்னாள் அமைச்சர் இமயப்பன் (சுரேஷ்), ஆட்சியில் இருந்தபோது சேர்த்த ஊழல் பணத்தின் மதிப்பு ஆயிரம் கோடி! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பயந்து, அதை தன் நண்பன் வசந்திடம் (தலைவாசல் விஜய்) கொடுக்க, நண்பன் நிறம் மாறுகிறான். சத்தியசோதனை புத்தகத்தில்... பணம் பதுக்கிய இடத்திற்கான குறிப்பை மறைந்து விபத்தில் சாகிறான். இமயப்பன், ஜேபி-யின் (ஜெகபதி பாபு) உதவியை நாடுகிறான். காலீஸ் நடத்தும் மேன்ஷனில் வசிக்கும் மொக்கை மோகன் (ஆர்யா தம்பி சத்யா), அவன் நண்பன் ஆண்டனி (விக்னேஷ் குமார்), ராதாகிருஷ்ணன் (சஞ்சய் சந்தானபாரதி) இவர்களுக்கு, நூலக புத்தகத்தில் பண விவர சீட்டு கிடைக்கிறது. பணம் பையன்களுக்கா? அல்லது அரசாங்கத்திற்கா? என்பது க்ளைமாக்ஸ்.

புலி குட்டி போடுவது போல், வெகுநாட்களுக்குப் பிறகு ஜேம்ஸ் வசந்தன் இசையில் வந்திருக்கும் படம்... நம்மை ‌ஏமாற்றவில்லை! இசையில் மென்மையும், குரல் உச்சரிப்பில் தெளிவும் ஜேம்ஸின் பலம். இதில் அப்படியே பெல்லிராஜ், தீபா மரியம் குரல்களில் "மெல்ல பூ பூக்குதே..." புல்லாங்குழலும், வயலின்களும் பரவிப் படர, நம் காதுகளில் இறங்கும் இன்னொரு "கண்களிரண்டால்...". "இட்டாலிக்கா..." மாதங்கி குரலில் சர்ர்...ரென ஏறுகிறது சிவகாசி ராக்கெட்.

டி.வி., நடிகர் விஜய் ஆதிராஜின் திரைப்பிரவேசம்... இயக்குனராக! முதல் படமென்பதால் அதிக கீறல் வேண்டாம் என்றாலும் படத்தின் நீளமும், தொடர்பில்லாமல் துள்ளும் திரைக்கதையும், அவர் சரி செய்திருக்க வேண்டிய இலாகாக்கள். மற்றபடி, ஜெ.லட்சுமணனின் ஒளிப்பதிவிலும், கெவினின் எடிட்டிங்கிலும், ஜீ.கே.யின் கலை இயக்கத்தில் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி ஏதுமில்லை.

பீட்சா என ஆரம்பித்து,  கல் தோசை போட்டிருக்கும் விஜய்... அடுத்து பர்கர் செய்ய முயற்சித்தால் பீட்சா கிடைக்கும்.

ஆக மொத்தத்தில், "புத்தகம்" - "படிக்கலாம்"

ரசிகன் குரல் - இனிமேலாவது நாம சத்தியசோதனை புரட்டணும்டா!!



வாசகர் கருத்து (5)

nijas - kandy,இலங்கை
06 பிப், 2013 - 01:24 Report Abuse
 nijas படம் பார்க்கவில்லை ஆனால் பார்தமாதிரிதான்
Rate this:
iliyass - pankoor,இந்தியா
25 ஜன, 2013 - 13:21 Report Abuse
 iliyass படம் super
Rate this:
பெருமாள் சாமி - chennai,இந்தியா
21 ஜன, 2013 - 19:59 Report Abuse
 பெருமாள் சாமி படம் நன்றாக உள்ளது. நல்ல கதை. விஜய் ஆதீராஜை பாராட்ட வேண்டும்.
Rate this:
ரகு - Seychelles,செசேல்ஸ்
21 ஜன, 2013 - 17:10 Report Abuse
 ரகு குட் film
Rate this:
அண்ணாமலை - muscat,ஓமன்
21 ஜன, 2013 - 01:22 Report Abuse
 அண்ணாமலை படம் ரொம்ப மொக்கை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

புத்தகம் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in