Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்,Naduvula Konjam Pakkatha Kaanom
12 டிச, 2012 - 16:46 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

 

தினமலர் விமர்சனம்



நான்கு நண்பர்கள், அவர்களில் ஒருவருக்கு நடுவுல ஒரு சின்ன விபத்தால் இரண்டு வருட காலம் நினைவுகள் அனைத்தும் காணாமல் போக, எதிர்படும் எல்லோரிடமும் ஆமாம் என்னாச்சு? கிரிக்கெட் ஆடினோம்... நீ தான் பந்த அடிச்ச... நான் கேட்ச் பிடிக்கப் போனேன் தடுமாறி கீழே விழுந்தேன். இங்கதான் அடிபட்டுச்சு... கொஞ்ச நேரத்துல எல்லாம் சரியாகிடும்... என்று பேசியதையே பேசியபடி அந்த நண்பர் காதலை மறக்கிறார்., நடக்க இருந்த கல்யாணத்தை மறக்கிறார்.... நடிகர் சிவாஜி இறந்து போனதை மறக்கிறார்... இன்னும் இன்னும் என்ன என்னவல்லாத்தையும் மறக்கிறார். மறுக்கிறார். அவர் மறந்தவற்றையெல்லாம் மறைத்து அவருக்கு அவர் விரும்பிய காதலியுடனேயே திருமணம் செய்து வைத்து இயல்பு வாழ்க்கையை திரும்ப கொண்டு வர போராடுகின்றனர் உடன் இருக்கும் நண்பர்கள் மூவரும்! அவர்களது போராட்டம் வெற்றி அடைகிறதா? இல்லையா...? என்பது யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ். அந்த க்ளைமாக்ஸ் மட்டுமல்ல இப்படத்தின் மொத்த கதையும், களமும் கூட தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் புதுசு என்பது "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தின் பெரிய ப்ளஸ்!

தலையில் அடிபட்டு நடுவுல கொஞ்சம் பக்கத்த இழந்த நண்பராக விஜய் சேதுபதி, "தென்மேற்கு பருவக்காற்று", "சுந்தரபாண்டியன்", "பீட்சா" படங்களுக்கு அப்புறம் இதிலும் பேர் சொல்லும்படி முகபாவனைகளையும், முழுநடிப்பையும் காட்டி நம்மை இருக்கையோடு இருக்கையாக கட்டி போட்டுவிடுகிறார். அதுவும் என்னாச்சு? எனும் ஒரே டயலாக்கை திரும்ப திரும்ப அவர் ஒரே எக்ஸ்பிரஷ்னுடன் வெளிப்படுத்துவது செம காமெடி!

விஜய் மாதிரியே, அவரது நண்பர்களாக வரும் பகவதி பெருமாள், ராஜ்குமார், விக்னேஷ்வரன் ஆகிய நான்கு பேரும் கூட தங்களது இயல்பான நடிப்பால் நம்மை மிரள வைப்பதும், மிரட்டுவதும் படத்தின் பெரும் பலங்களில் ஒன்று!

விஜய்யின் காதலி கம் மனைவியாக வரும் காயத்ரியும் தன் பங்‌கிற்கு சரியாக தன் பாத்திரம் அறிந்து பளிச்சிட்டிருக்கிறார்.

மணமேடையில், அருகில் நிற்கும் காயத்ரியை பார்த்து "இந்தப்பொண்ணு யாரு?..." என்று விஜய் கேட்பதிலும் "பேய் மாதிரி இருக்கு..." என்று கமெண்ட் அடிப்பதிலும் விஜய்யை தாண்டி, படத்தின் இசையமைப்பாளர் தேவ்சங்கர், ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் (இவரது வாழ்க்கையில் நடந்த கதைதான் விஜய் சேதுபதியின் கேரக்டர் என்பது கூடுதல் தகவல்),  இயக்குனர் பஜ்ஜி எனும் பாலாஜி தரணிதரன் என எல்லோரும் தெரிவது தான் படத்தின் பெரும்பலம்!

மொத்தத்தில், "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், தமிழ் சினிமாவில் "நல்ல படத்த காணோம்" என யாரும் சொல்ல முடியாத அளவு தரமான திரைப்படம்! பேஷ், பேஷ்!!




-------------------------------------------------------


குமுதம் விமர்சனம்



நான்கைந்து பாடல்கள், ஃபாரின் லொக்கேஷன், கதாநாயகி, குத்தாட்டம், அதிரடி சண்டை என்று எதுவுமே இல்லாத ஒரு ரொம்ப “சீரி’யஸாக எடுக்க முடியும் என்று வெற்றிகரமாய் நிரூபித்திருக்கிறது ஓர் இளைஞர் பட்டாளம். சினிமா டிக்கெட்டின் பின்பக்கத்தில் எழுதிவிடக்கூடிய கதைதான்.

இரண்டு நாளில் விஜய் சேதுபதிக்குத் திருமணம் நண்பர்கள் சும்மா ஜாலியாக கிரிக்கெட் ஆடுகிறார்கள். கேட்ச் பிடிக்கும்போது விஜய்க்குத் தலையில் அடிபடுகிறது. வாழ்க்கையின் “நடுவுல கொஞ்சம் பக்கம்’ அவனுக்கு மறந்து போகிறது. தான் காதலித்த பெண்ணுடன் தனக்குத் திருமணம் நடக்கப்போகிறது என்பது கூட நினைவில் இல்லை. நடந்த இந்த பயங்கரத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து, நண்பர்கள் அவனுக்கு திருமணமும் செய்து வைத்துவிடுகிறார்கள். அவனுக்கு நினைவு வந்ததா இல்லையா என்ற உண்மைக் கதையை தியேட்டரில் சிரித்துக் கொண்டே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

சுமாரான நான்கு நண்பர்களைப் பார்த்ததும் ஆரம்பத்தில், ஆஹா, வந்து மாட்டிக்கிட்டோம் போல இருக்கே என்ற உணர்வுதான் எழுகிறது. ஆனால் பார்க்கப் பார்க்க, அவர்களின் பேய் முழியைப் பிடித்துப் போகிறது.

“என்ன ஆச்சு? கிரிக்கெட் விளையாடினோமா, நீதானே பந்தைப் போட்டே? பந்து மேல வந்துச்சு. நான் புடிக்கப் போனேனா? கால் ஸ்லிப் ஆகிக் கீழே விழுந்துட்டேன். தலையில் அடி பட்டிடுச்சு’. இந்த டயலாக் மட்டும் படத்தில் 20 தடவை வருகிறது. அதற்கு 19 தடவை நாம் கட்டாயம் சிரிப்போம்!

அதுவும் க்ளைமாக்ஸில் கிளிமாதிரி இருக்கும் மணப்பெண்ணைப் பார்த்து, “ப்பா, யார்டா இவ? பேய் மாதிரி இருக்கா?’ என்று திரும்பத் திரும்பச் சொல்லும்போதெல்லாம் தியேட்டர் வெடிக்கிறது.

கதாநாயகனுக்கு இணையாக கலக்கியிருக்கிறார்கள் அந்த மூன்று நண்பர்களும். யாருக்கும் தெரியாமல் அவர்கள் திருமணத்தை நடத்திவிட வேண்டுமே என்கிற படபடப்பு அவர்களுக்கு இருப்பதைப் போலவே நமக்கும் இருப்பதுதான் இயக்குநரின் சாமர்த்தியம்.

ஓர் ஆஸ்பத்திரி, ஒரு கல்யாண மண்டபம், ஒரு பழைய வீடு என்ற மூன்று லொகேஷனையும் நான்கு சுமாரான பசங்களையும் மட்டும் வைத்துக் கொண்டு வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கிறார் பாலாஜி தரணிதரன்.

ந.கொ.ப.கா. - முழுமையான நகைச்சுவைப் புத்தகம்.

ஆஹா: எல்லாம்தான்!

ச்சே: ஆரம்பத்துல கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

குமுதம் ரேட்டிங்: நன்று



வாசகர் கருத்து (53)

சிதயுவராஜ் - Bangalore,இந்தியா
01 பிப், 2013 - 03:41 Report Abuse
 சிதயுவராஜ் செம காமெடி படம்.
Rate this:
vincent - chennai,இந்தியா
27 ஜன, 2013 - 12:45 Report Abuse
 vincent ப்பா.என்ன ஆச்சு தமிழ் திரை உலகத்திற்கு? இது மாதிரி சூப்பர் படமெல்லாம் வருது.
Rate this:
சரவணன் - Madurai,இந்தியா
22 ஜன, 2013 - 16:29 Report Abuse
 சரவணன் நடிப்பு ,காமெடி இரண்டுமே சூப்பர்.............
Rate this:
RAVIJI - TRICHIRAPPALLI,இந்தியா
17 ஜன, 2013 - 16:19 Report Abuse
 RAVIJI நல்ல தரமான தமிழ் படம், நல்ல நட்பை வெளி காட்டிய அருமையான படம், பரணி நல்ல யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க, ஒரு வேலை உங்களுக்கு பின் தலையில் அடி பட்டிருக்குமுனு நினைக்கிறேன்
Rate this:
dhivya - dindigul,இந்தியா
16 ஜன, 2013 - 10:12 Report Abuse
 dhivya ம்ம்ம் சூப்பர் படம்,அனா கொஞ்சம் போர் அஹ இருந்துச்சு அப்ப அப்ப
Rate this:
மேலும் 48 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in