Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

போடா போடி

  • படம் : போடா போடி
  • நடிகர் : சிலம்பரசன்
  • நடிகை : வரலெட்சுமி
  • இயக்குனர் :விக்னேஷ் சிவா

24 நவ்,2012 - 16:12 IST

 கருத்தைப் பதிவு செய்ய

தினமலர் விமர்சனம் » போடா போடி
 
தினமலர் விமர்சனம்

இது வழக்கமான சிம்பு அதாங்க எஸ்.டி.ஆர். படமல்ல... வித்தியாசமான எஸ்.டி.ஆர்., படம் என்று கேப்ஷனே போடலாம்! "போடா போடி" படம் மொத்தமும், அத்தனை வித்தியாசம், விறுவிறுப்பு! காதல் படம் தான் என்றாலும் "போடா போடி" இதுவரை கண்டிராத காதல் கலாட்டா படம்!

கதைப்படி லண்டனின் சித்தப்பா வீட்டில் வசித்தபடி அனிமேஷன் துறையில் சிறந்து விளங்கும் சிம்புவுக்கும், அதே லண்டனில் சல்சா நடனத்தில் சாதிக்க வேண்டுமென அந்த நடனத்தை கற்றபடி துடிக்கும் வரலெட்சுமி சரத்குமாருக்கும் இடையே ஒரு சின்ன சந்திப்பில் பெரிய காதல் பிறக்கிறது! அந்த காதல் ஒத்துவருமா, வராதா...? எனும் தருவாயிலேயே இருவருக்கும் கல்யாணமும் நடந்தேற அதன்பின் நடக்கும் சுவாரஸ்யங்களையும் சோகங்களையும் முற்றிலும் புதுமையாக ஏழெட்டு எபிசோட்டுகளாக தனித்தனி டைட்டில் கொடுத்து தொகுத்து வழங்கியிருக்கிறார்கள் "போடா போடி" குழுவினர்! அதில் ஒரு எபிசோட்டின் டைட்டில் கல்யாணமாம் கத்திரிகாயாம் என்பதில் இருந்தே அந்த ஏழெட்டு எபிசோட்களும் படமும் எத்தனை சுவாரஸ்யம் என்பது புரிந்து கொள்ள வேண்டும்!!

டி.ஆர்., உள்ளிட்டவர்களைக்கூட டயலாக்கில் தாளித்தபடி செம கேஷூவலாக தன் காதலை சொல்லும் எஸ்.டி.ஆர்., ஹீரோவாக படத்தின் பெரிய ப்ளஸ்!

ஹீரோயின் வர‌லட்சுமி சரத்குமார் நடிப்பில் அப்பாவை மிஞ்சுகிறார். சல்சா நடனகலைஞராக செம க்யூட், குரல்தான் சிம்புவுக்கு அக்கா மாதிரி தெரிகிறது. மற்றபடி டபுள் ஓ.கே.,! வி.டி.வி. கணேஷ், ஷோபானா உள்ளிட்டவர்கள் படத்தின் பெரியபலம்! டங்கனின் ஒளிப்பதிவு, தரண்குமாரின் இசை உள்ளிட்ட பள்ஸ் பாயிண்டுகள், புதியவர் விக்னேஷ் சிவனின் இயக்கத்திற்கு பக்கபலம்!

ஆக மொத்தத்தில் "போடா போடி" புதுமையாக கதை சொல்லும், அதுவும் காதல் கதை சொல்லும் முறையை தமிழ் சினிமாவிற்கு "வாடா வாடி" என அழைத்து வந்திருக்கிறது! ரசிகர் - ரசிகைகளையும் அவ்வாறே அழைக்கும் என நம்பலாம்!


-------------------------------------------------------

கல்கி சினி விமர்சனம்


கடைசியில் வந்தேவிட்டது போடா போடி. வருமா... வராதா? என “நீயா நானா’வில் வைத்து விவாதம் பண்ணாதது மட்டுமே குறை. ஆனால், படு லேட்டஸ்டாக, பக்கா ஸ்டைலாக வந்திருப்பது ப்ளஸ் பாயின்ட். தமிழ்க் கலாசாரப் பிடிப்பு கொண்ட சிம்புவுக்கும் மேற்கத்திய கலாசாரத்தில் வளரும் வரலட்சுமிக்கும் முதலில் டும் டும் டும்; பிறகு டிஷ்யூம்... டிஷ்யூம்... இறுதியல் சுபம் சுபம்! கலாசார மோதல்களில் காவு வாங்கப்படும் உறவுகளையும் மனங்களையும் கோடிட்டுக் காட்டி ஜெயித்திருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் நம்பிக்கையான புது வரவு!

சிம்புவுக்கு சவாலான விஷயம் என்று படத்தில் ஒன்றுமில்லை. அனிமேட்டராக வேண்டும் என்று பெயருக்குத் தான் லண்டன் வருகிறார். பிறகு, எப்போதும் போல அவரது சேட்டைகளில் அட்ரா சக்கை அட்ரா சக்கை. தமது மனைவி வரலட்சுமியின் ஃப்ரெண்டிடம் முகத்துக்கு நேராகப் பேசிவிட்டு, அவனைப் போகவிட்டுப் பின்னாலேயே போய் முகத்தை மூடி அடிப்பதும் கலகல காமெடி.

வரலட்சுமியே வாரே வாவ். நடிக்கவும் ஆடவும் தெரிந்த ஹீரோயின்! அதுவும் சிம்புவுக்கு முன்னால் செம போல்டாக நடித்திருக்கிறார் (சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பெண்ணாச்சே) சல்சா டான்ஸராக அவர் காட்டும் பரிணாமங்கள்(?) செம ஹாட் மச்சி. உடம்பைப் பார்த்துக்கோங்க அம்மணி. டான்ஸா, லைஃபா.. என முடிவெடுக்க முடியாமல் திணறும் இடங்களில் வரலட்சுமிக்கு லட்சுமி கணக்கா நடிக்க வருது! ஏற்கெனவே ஹிட்டாகி சிட்டாகிப் பறந்த பாடல்கள் அத்தனையிலும் இளமைத் துடிப்பு! அதிலும் லவ் பண்ணலாமா... வேணாமா? என சிம்பு டான்ஸில் செய்யும் வம்பு ரசிக்கத் தோன்றும் ஹைகூ!

விடிவி கணேசன் + சிம்பு ஆன் ஸ்கிரின் கெமிஸ்ட்ரி அட்டகாசம். கணேசன் வரும் சீன்களெல்லாம் பொங்கி வழிகிறது காமெடி! குரலே கிச்சு கிச்சு மூட்டுதையா! ஷோபனா வெறும் ஷோவுக்கு! கவனிக்கப் பட வேண்டிய இன்னொரு நபர் இசையமைப்பாளர் தரன். வார்த்தைகளைச் சிதைக்காத வெஸ்டன் ட்யூன்களில் வெல்டன். டன்கண் டெல்போரிட் ஒளிப்பதிவில் யூத் பெஸ்டிவல்!

வழவழ கொழகொழன்னு இழுக்காமல் படத்தை நறுக்சுறுக்குன்னு முடிச்சது மிர்ச்சி கணக்கா சுர்ர்ர்னு இருக்கு. வாழ்த்துக்கள் டைரக்டர் விக்னேஷ் சிவன்.

போடா போடி - கலாட்டா கவிதை!


வாசகர் கருத்து (111)

நா சதீஷ் குமார் - Chennai,இந்தியா
25 டிச,2012 - 04:02 Report Abuse
 நா சதீஷ் குமார் நல்ல படம் வெரி குட் டைரக்டர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
saravanan - chennai,இந்தியா
21 டிச,2012 - 16:38 Report Abuse
 saravanan very nice movie if you don,t like the movie pls dont comment by thala rasigar mandram
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
prem - chennai,இந்தியா
12 டிச,2012 - 07:54 Report Abuse
 prem மொக்க படம். தயவு செய்து யாரும் பாக்காதீங்க ...ப்ளிஸ்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
shiva - erode,இந்தியா
11 டிச,2012 - 17:09 Report Abuse
 shiva படம் உண்மைலேயே நல்லாதான் இருக்கு. தேவை இல்லாம தப்பான கமெண்ட்ஸ் குடுக்காதீங்க. உண்ணக ரசிகர் படம் நல்லா இருந்தா அதும் ரசிங்க அதுக்காக தேவ இல்லாம பேசாதேங்க by தல (அஜித்) வெறியர்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Guna - London,யுனைடெட் கிங்டம்
09 டிச,2012 - 05:00 Report Abuse
 Guna நல்ல படம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 106 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

டாப் 5 படங்கள்

  • Advertisement
    Advertisement
    Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in