Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சில்லுன்னு ஒரு சந்திப்பு

 • சில்லுன்னு ஒரு சந்திப்பு
 • விமல்
 • ஓவியா
 • இயக்குனர்: ரவி வல்லின்
26 பிப்,2013 - 17:16 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சில்லுன்னு ஒரு சந்திப்பு

  

தினமலர் விமர்சனம்


"களவாணி" விமலும், ஓவியாவும் ஒரே பள்ளியில் ப்ளஸ்-டூ படிக்கின்றனர். அதுவும் ஊட்டி கான்வெண்ட்டில் படிக்கும் இருவருக்குமிடையே காதல் கண்ணா மூச்சி காட்டும் வேளையில், ஓவியாவின் அரசாங்க அதிகாரி அப்பாவுக்கு சென்னைக்கு மாற்றம் வருகிறது! காதல் ஜோடி, கல்யாணம் செய்து வைக்க சொல்லி காவல்துறையை நாட, உங்கள் இருவருக்கும் அதற்கான வயது இன்னும் வரவில்லை, வந்ததும் உங்களிடையே இதே காதல் இருந்தால் உங்களுக்க திருமணம் செய்து வைக்க நான் தயார், அதுவரை உங்கள் தாய், தந்தையாருடன் வாழுங்கள் என்று இருவரது அப்பா-அம்மாவிடமும் அக்ரிமெண்ட் போட்டு அனுப்புகிறார் ஊட்டி இன்ஸ்!
இது பழைய கதை - புதுசு, அதே விமல், அமெரிக்காவில் கைநிறைய சம்பாதித்து ஊர் திரும்பியதும், தன் அண்ணியின் தங்கையான தீபாஷாவை லவ்வுகிறார். அவர்கள் காதல் கல்யாணத்திற்கு போகும் தருவாயில், விமலின் பழைய காதல் தீபாஷாவிற்கு தெரிய வருகிறது. அதனால் காதலுக்கு தடையை போட்டு கல்யாணத்திற்கு கட்டையை போடுகிறார் அம்மணி. விமல் மீண்டும் அமெரிக்கா கிளம்புகிறார், ஆனால் ஓவியா உண்மையை விளக்கி மீண்டும் வந்து இவர்களை சேர்த்து வைப்பது தான் "சில்லுன்னு ஒரு சந்திப்பு" கதை, களம் எல்லாம்! இந்த வித்தியாசமான கதையை எத்தனை விதங்களில் சொதப்ப முடியுமோ, அத்தனை விதங்களில் சொதப்பி காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ரவி லல்லின் என்பது படத்தின் பெரும் பலவீனம்!
விமல், ஓவியா, தீபாஷா, சாருஹாசன், அஸ்வின் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்தில் ஓவியா மட்டுமே பாஸ் மார்க் வாங்குகிறார். விமல் இனியும் சிட்டி ‌சப்ஜெக்ட்டுகளில் கவனம் செலுத்தாமல், களவாணி, வாகை சூடவா போன்ற கிராமத்து கதைகளில் கவனம் செலுத்தினால் நல்லது.
ராஜேஷ் யாதவ், ஆரோவின் ஒளிப்பதிவு, பைசலின் இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் படத்தின் பலம். ஆனாலும் "சில்லுன்னு ஒரு சந்திப்பு"  - "சுள்ளுன்னு அடிக்கிற வெயிலாக" தகிப்பது தாங்கலடா சாமி!

--------------------------------------------------------

குமுதம் சினி விமர்சனம்


ப்ளஸ் 2 பருவத்தில் வரும் காதல் எல்லாம் சும்மா இனக்கவர்ச்சிதான். மன முதிர்ச்சி பெற்ற பிறகு வரும் காதலே நல்ல காதல் என்று சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.
முதல் அரை மணி நேரத்தில் வரும் அந்தப் பள்ளிக்கூடக் காதல் க்யூட். ஒருவரை ஒருவர் மாட்டி விடும் காட்சியும், நண்பர்களின் அரட்டையும் பழசாக இருந்தாலும் ரசிக்க முடிகிறது. அதற்குப் பிறகு ஹீரோவுக்கு இன்னொரு காதல் வருவதுகூட ஓகே. ஆனால் சாருஹாசன் தம்பதி, 70 வயதில் விவாகரத்து செய்வதையெல்லாம் எதற்காகச் சேர்த்தார்கள் என்பதுதான் தெரியவில்லை.
விமல், ஒன்றிரண்டு ஹிட் கொடுத்த பிறகும் நடிக்க ஆரம்பிக்காவிட்டால் எப்படி? சும்மா ஏதோ ஒப்பிப்பதைப் போல நடிப்பதையெல்லாம் மூட்டைக் கட்டி வையுங்கள்.
ஓவியா பளிச். அந்தக் கண்களே பல வார்த்தைகளைப் பேசுகின்றன. (ஹிஹி... உங்கள் இருவருக்குள் இருந்த பஞ்சாயத்தெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதா?)
தீபாஷா ஓகே. அடிக்கடி தலையைக் குட்டிக் கொள்வது அழகாக இருக்கிறது. ஒவ்வொரு டிரெஸ்ஸில் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்.
படத்தின் பெரிய ஆறுதல் குளுகுளு ஊட்டியைச் சுற்றிக் காண்பிக்கும் அலுக்காத கேமரா. பாடல்களைக் கேட்பதைவிடப் பார்க்கலாம்.
சில்லுன்னு ஒரு சந்திப்பு - தலைப்பிலும் லொக்கேஷனிலும் இருக்கும் குளிர்ச்சி, படத்தில் மிஸ்ஸிங்!
ஆஹா: பள்ளிக்கூடக் காட்சிகள், லொகேஷன்
ஹிஹி: திரைக்கதை
குமுதம் ரேட்டிங்: சுமார்


--------------------------------------------------------

கல்கி சினி விமர்சனம்


* மீண்டுமொரு முக்கோணக் காதல் கதை!
* ஊட்டியில் உடையும் காதல் சென்னையில் சேருமா... சேராதா... என்ற திக்திக் எதிர்பார்ப்பில் திரைக்கதையில் ஸ்கோர் செய்கிறார் இயக்குனர் “ரவிலல்’!
* காமெடியாகவே பார்த்துப் பழகிய விமலை சீரியஸாகப் பார்க்க சிரிப்பு வருகிறது! விமல் ஸார் உங்களுக்கு காமெடி கதைதான் ஒத்துவரும். சீரியஸ் பக்கம் போகவே போகாதீங்க.
* விமல் - ஓவியா காதல் பிரேக்-அப் ஆக இன்னொரு ஹீரோயின் தீபாஷாவோடு வரும் காதலெல்லாம் கோடம்பாக்க சினிமாவுக்காக....
* சிரிப்பதும், சிக்கென்ற உடையில் வருவது மட்டும் ஓவியாவின் வேலை எனில், இனி ரசிகர்கள் தாங்கமாட்டாங்க அம்மணி. ரூட் மாத்தி ரசிகர்கள் மனசுல கேட் போடுங்க.
* தீபாஷா, தித்திக்கும் அழகும், சின்னச் சின்ன மேனரிசங்களிலும் க்யூட், விமலிடம் முறைத்துக் கொள்ளும் போதெல்லாம் நடிக்கவும் செய்கிறார்.
* மனோபாலா காமெடி நக்கல், நையாண்டி தர்பார்! அதுவும் அந்த காப்பி மேட்டர் லக லக லட்டு!
* அடி ஆத்தி பாடலில் பி.எஸ்.பைசலின் இசை இருப்பு கொள்கிறது.
* ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவில் ஊட்டியின் குளிர்ச்சி.
* எந்த வயதில் வரும் காதல் வெறும் இன ஈர்ப்பு என்பதை ஹீரோ - ஹீரோயினைச் சுற்றி வரும் கேரக்டர்கள் மூலம் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல சொல்கிறார் இயக்குனர் ரவி லல்.

வாசகர் கருத்து ()

Advertisement

மேலும் விமர்சனம்

டாப் 5 படங்கள்

 • Advertisement

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in