Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

புதிய திருப்பங்கள்

புதிய திருப்பங்கள்,Puthiya Thiruppangal
  • புதிய திருப்பங்கள்
  • நந்தா
  • ஆண்ட்ரியா
  • இயக்குனர்: சாரதா ராமநாதன்
01 ஏப், 2013 - 15:38 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » புதிய திருப்பங்கள்

  "கண்டேன்" படத்தை தொடர்ந்து ஸ்ரீசெல்வநாயகி அம்மன் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் "திருப்பங்கள்". ஹீரோவாக நந்தாவும், ஹீரோயினாக ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர். இரண்டாவது நாயகியாக பாலிவுட் நடிகை சுர்விர் நடிக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் கவுதம் குரூப், சாம்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். குழந்தை முதல் பெண்கள், இளைஞர்கள் வரை கடத்தப்படுவதை மையப்படுத்தி பரபரப்பான காட்சிகளின் பின்னணியில் திருப்பங்கள் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வருகிறார் சாரதா ராமநாதன்.

நா.முத்துக்குமார் பாடல் வரிகள் எழுத, வித்யாசாகர் இசையமைக்கிறார். ராஜலட்சுமி என்ற பெண் படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார். தமிழ் சினிமாவில் பெண் படத்தொகுப்பாளர் பணியாற்றுவது இதுவே முதல்முறை. படத்தின் சூட்டிங் முழுக்க, முழுக்க சென்னையில் நடந்து வருகிறது.

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in