Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » விமர்சனம் » மாலை‌பொழுதின் மயக்கத்திலே

மாலை‌பொழுதின் மயக்கத்திலே

  • நடிகர் : ஆரி
  • நடிகை : சுபா
  • இயக்குனர் :ஆதி
Share  
Bookmark and Share

தினமலர் முன்னோட்டம் » மாலை‌பொழுதின் மயக்கத்திலே

அஞ்சாதே, நந்தலாலா போன்ற படங்களில் மிஷ்கினிடம் உதவியாளராக பணிபுரிந்த ஆதி, என்பவர் இயக்குநராக அவதரித்திருக்கும் படம் மாலைப் பொழுதின் மயக்கத்திலே. புதுமுகம் ஆரி ஹீரோவாகவும், மிஸ் பெங்களூரு சுபா ஹீரோயினாகவும் நடித்து வரும் இப்படத்தை, பல படங்களை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு விநியோகம் செய்த சி.ஹெச்.மயூரிசேகர் தனது ஸ்ரீ ஹம்சி நரசிம்மா கிரியேஷன்ஸ் சார்பில் மிகுந்த பொருட்ச் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

மாலை 6.30 மணிமுதல் 8.30 மணி வரை நடைபெறும் சம்பவங்களையும், அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனைகளையும் கோர்வையாக்கி காதலை மையமாக கொண்டு ஜனரஞ்சகமான கதையை உருவாக்கி வருகிறார் ஆத‌ி.

முதன்முறையாக நடிகை ரோகினி இந்தபடத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். அச்சு இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். தியாகு படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார்.

சென்னையில் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் இப்படத்தின் சூட்டிங், விரைவில் கோவா, கேரளா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற இருக்கிறது. இசை வெளியீடு அக்டோபரிலும், படம் டிசம்பரிலும் திரைக்கு வர இருக்கிறது.
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in