Advertisement

சிறப்புச்செய்திகள்

கஹானி ரீமேக்கில் நடிக்கிறார் பசுபதி! | சித்தார்த் க்யூட்டான நடிகர்! ஹன்சிகா | சிலக் வேடத்தில் நடித்தால் கவர்ச்சி நடிகை என்று முத்திரை குத்துவதா? சனாகான் சாடல் | சிங்கம்-2 ஆடியோ விழாவில் மேலும் மூன்று சிங்கங்கள்! | அஜீத், சூர்யா படங்களுக்கு ரூட் விடும் அமலாபால்! | பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்! ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி! | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! |

சினிமா முதல் பக்கம் » விமர்சனம் » 18 வயசு

18 வயசு

  • நடிகர் : ஜானி
  • நடிகை : காயத்ரி
  • இயக்குனர் :பன்னீர்செல்வம்
Share  
Bookmark and Share

தினமலர் விமர்சனம் » 18 வயசு

தினமலர் விமர்சனம்

"ரேணிகுண்டா" இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம், நாயகர் ஜானி உள்ளிட்டவர்களின் அடுத்தபடைப்பு தான் "18 வயசு". இதுதான் இப்படத்திற்கான பெரிய எதிர்பார்ப்பு!

அம்மாவின் தவறு, அப்பாவின் தற்கொலை, மகனின் மனநிலை பாதிப்பு, ஆதரவற்ற அழகிய நாயகி, அவர் மீது மனநிலை பாதித்த நாயகரின் அழகிய அதிரடி காதல், இவர்கள் மீதான ஒரு பெண் மருத்துவரின் கரிசனம், போலீஸாரின் ஆக்ரோஷம்... இதுதான் "18 வயசு" மொத்தமும்!

முதல்படமான "ரேணிகுண்டா"விலேயே எக்கச்சக்க ஸ்கோர் செய்த ஹீரோ ஜானி, இதிலும் நடிப்பிலும், துடிப்பிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார். சக மனநிலை பாதிப்பாளர் சத்யேந்திராவுடன் சேர்ந்து கொண்டு நாயகியை கடத்துவதும், கடத்துவதற்கு முன் காதலிப்பதுமாக பட்டையை கிளப்பி இருக்கிறார் பலே பலே!

நாயகி காயத்ரி அழகு பதுமை முகவாகு, உடல்வாகில் மட்டுமல்ல... நடிப்பிலும் "நச்" என்று முத்திரைப்பதித்து இருக்கிறார் அம்மணி! ஜாக்கியாக வரும் சத்யேந்திரா, ஜானியின் அம்மாவாக வரும் யுவராணி, டாக்டர் ரோகிணி, இன்ஸ்பெக்டர் ஜெ.எஸ். உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

சக்தியின் ஒளிப்பதிவு, தினேஷ்-சார்லஸ் போஸ்கோவின் இசை, குறிப்பாக பின்னணி இசை உள்ளிட்டவைகள் "18 வயசு"வின் பெரும்பலம். ஆர்.பன்னீர்செல்வத்தின் எழுத்தும்-இயக்கமும் "ரேணிகுண்டா" அளவிற்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் இல்லாதது "18 வயசை" பெரிதா பாதிக்குது.

மொத்தத்தில், "18 வயசு" - "பாதித்த மனசு"


வாசகர் கருத்து (16)

ராஜா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2012-09-28 00:45:41 Report Abuse
 ராஜா நா மொக்க படத்த கூட பாத்துருக்கேன் ஆனா இந்த படம் மொக்கைலயும் மொக்க. time pass கு குட இந்த படத்த பாக்காதிங்க நண்பர்களே. director sir please see ur movie once before u release
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Moorthy - Chennai,இந்தியா
2012-09-22 11:15:05 Report Abuse
 Moorthy சரியான மொக்கை படம். ஏற்கனவே பலமுறை பார்த்த கதை பார்ககாதிங்க ப்ளீஸ்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கோ.ரா.பழனி - dharmapuri,இந்தியா
2012-09-17 12:00:22 Report Abuse
 கோ.ரா.பழனி above average
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
vinitha baskar - namakkal,இந்தியா
2012-09-13 10:38:54 Report Abuse
 vinitha baskar excellent move,excellent song
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
hi - chennai,இந்தியா
2012-09-11 12:08:17 Report Abuse
 hi என்ன மணி ...போங்க மணி....சின்ன புல்லையவே இருக்கீங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in