Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

அடுத்தது

அடுத்தது,Aduthathu
  • அடுத்தது
  • நடிகர்: ஸ்ரீமன்
  • மீனாள்
  • இயக்குனர்: தக்காளி சீனிவாசன்
29 ஏப், 2012 - 15:25 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » அடுத்தது

தினமலர் விமர்சனம்



தமிழ்ல குறைஞ்ச செலவுல த்ரில்லர் படம் எடுத்தா கதை என்னவா இருக்கும்? ஊரை விட்டு ஒதுக்குப்புறமா ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு பங்களாவுக்கு 4,5 ‌பேர் போவாங்க... அவங்க வரிசையா சாகடிக்கபடுவாங்க. கடைசியில அவங்களை கொன்னது யாரு? காரணம் என்ன?னு காட்டுவாங்க. ‌கரெக்ட்! அடுத்தது படத்தோட கதையும் அதுதான். என்ன.., 4,5 பேருக்கு பதில் 10 பேர் ஒதுக்குப்புற பங்களாவுக்கு பதில் தீவுல இருக்கற ஒரு பங்களா.

ஆள் இல்லாத தீவுல இருக்கற ஒரு பங்களாவுல தனியா(?) 10 நாள் தங்கியிருந்தா 10 கோடி ரூபாய் ஜெயிக்கலாம்!ன்னு ஒரு டி.வி.யில போட்டி நடத்துறாங்க. அதுல கலந்துக்க சமையல்காரன் (வையாபுரி), டாக்டர் (இளவரசு), வக்கீல் (மீனாள்), லோக்கல் ஏரியா பெண் (ஆர்த்தி), கடத்தல்காரன் (ஸ்ரீமன்)... இப்படி 10 பேர் தேர்வாகுறாங்க. டி.வி. நிகழ்ச்சியை காரணமா வைச்சு இங்க கூட்டிட்டு வந்து கொலை பண்றாங்க!ங்கறது தீவுக்கு வந்து அடுத்தடுத்து ரெண்டு கொலைகள் விழுந்ததும் தான் இவங்களுக்கு தெரிய வருது. தப்பிச்சு போக வழியில்லாத நிலைமையில் ஒவ்வொருத்தரா சாகறாங்க. இதுக்கிடையில இவங்களை சாகடிக்கிறதுக்கான காரணத்தை திரைபோட்டு காட்டுகிறார் கொலைகாரர்(நாசர்). எத்தனை பேர் தப்பிச்சாங்க?ங்கறது மீதி கதை.

ஜென்ம நட்சத்திரம், நாளைய மனிதன் மாதிரி பெரிய த்ரில்லர் படங்களை எடுத்த இயக்குனரோட படமா இது! நல்லா இருக்குன்னு சொல்ல படத்துல ஒரு விஷயம்கூட இல்லை. நாடகத்தன்மையான நடிப்பு, சுவாரஸ்யமே இல்லாத திரைக்கதைன்னு படம் முழுக்க குறைகள் அதிகமா தெரியுது. பெயரளவுக்கு கூட படத்துல லாஜிக் இல்லை. கேமராவும், பின்னணி இசையும் தான் த்ரில்லர் படத்துக்கு பலமே! இங்கே இரண்டுமே பெரிய சொதப்பல். குறிப்பா கேமரா... 3டி படத்தை கண்ணாடியை கழட்டிட்டு அவுட் ஆப் போகஸ்! நாசர், இளவரசு, வையாபுரின்னு நல்ல நடிகர்கள் இருந்தும் யாருக்கும் நடிக்கறதுக்கு படத்துல வாய்ப்பு இல்லை.


மொத்தத்தில் அடுத்தது, பயங்கரமான படம் ஜாக்கிரதை

ரசிகன் குரல் - கொலை பண்றாங்க... கொலை பண்றாங்க!



வாசகர் கருத்து (5)

pavithra - ambasamuthram,இந்தியா
04 ஜூன், 2012 - 11:12 Report Abuse
 pavithra ரொம்ப mokkai
Rate this:
murugan - viluppuram,இந்தியா
04 மே, 2012 - 19:15 Report Abuse
 murugan ஜென்ம நட்சத்திரம், நாளைய மனிதன் மாதிரி ஒப்பிட கூடாது சுமார்.
Rate this:
விமல் - chennai,இந்தியா
04 மே, 2012 - 11:09 Report Abuse
 விமல் nice movie
Rate this:
habeeb - chennai,இந்தியா
03 மே, 2012 - 15:04 Report Abuse
 habeeb Jenma natchathiram is copy of Omen English movie
Rate this:
Hariharan - chennai,இந்தியா
30 ஏப், 2012 - 10:15 Report Abuse
 Hariharan பிலிம் சூப்பர் அப்படினு சொல்ல மாட்டேன். ஓகே ஒரு டைம் பாக்கலாம்......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

அடுத்தது தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in