Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » விமர்சனம் » பனித்துளி

பனித்துளி

  • நடிகர் : கணேஷ் வெங்கட்ராமன்
  • நடிகை : ஷோபனா
  • இயக்குனர் :நட்டி குமார்
Share  
Bookmark and Share

தினமலர் விமர்சனம் » பனித்துளி

தினமலர் விமர்சனம்


"அபியும் நானும்" உள்ளிட்ட இன்னும் சில தமிழ்படங்களில் இரண்டாம், மூன்றாம் நாயகராக முகம் காட்டிய கணேஷ் வெங்கட்ராம் முழுநாயகராக நடித்து, முதன்முதலாக வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "பனிதுளி!"

பொறியியல் படித்துவிட்டு ஜாலி பேர் வழியாக ஊர் சுற்றி வரும் கணேஷ் வெங்கட்ராமின் காஸ்ட்லியான இடத்து காதலி கல்பனா பண்டிட். மருத்துவ மாணவியான கதாநாயகி கல்பனா, தன் ஸ்டேட்டஸிற்கு கணேஷ் வெங்கட்ராமை கொண்டு வர விரும்பி, அமெரிக்காவில் அவருக்கு வேலைக்கு ஏற்பாடு செய்வதுடன், தன் அப்பாவிடமும் பெண் கேட்க சொல்கிறார். அதன்படியே பெண் கேட்க போகும் கணேஷ் வெங்கட்ராமிடம், ஒருவருடம் என் மகளிடம் போன், இண்டர்நெட், ஈ-மெயில் என எந்த தொடர்பும் இல்லாமல் இரு, அதன்பிறகு உங்கள் திருமணத்திற்கு ஓ.கே. சொல்கிறேன் என்கிறார் கிரிமினல் கேரக்டரான கல்பனாவின் கோடீஸ்வர அப்பா! அப்புறம்? அப்புறமென்ன, கல்பனாவின் அப்பா பேச்சுக்கு கட்டுப்பட்டு அமெரிக்கா செல்லும் கணேஷ், அங்குபோய் கல்பனாவையே மறந்து போகிறார். அமெரிக்க காதலி ஷோபனாவுடன் கூத்தடிக்கிறார். அது எப்படி? ஏன்...? அதற்கு காரணம் யார்...? என்பது தான் "பனித்துளி" படத்தின் மீதிக்கதை!

ரியல் மாடல் கணேஷ் வெங்கட்ராம், கதாநாயகராக - மாடல் மாதிரியே வருவது போவதுடன் சில இடங்களில் நச் என்று நடிக்கவும் செய்திருக்கிறார்.கல்பனா, ஷோபனா இருவருடனும் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் அவர் அடிக்கும் லூட்டி, மனிதர் மீது நம்மை பொறாமை கொள்ள வைக்குமளவிற்கு இருக்கிறது! பச்! கொடுத்து வைத்த நடிகர்!

கல்பனா, கணேஷின் இந்திய காதலியாக "நச்" ‌என்றால் ஷோபனா, அமெரிக்க காதலியாக "இச், இச், டச்!" நாரயண் சுந்தர்ராஜன், ஸ்ரீதர் கார்த்திகேயன், திருமுடி செளந்தர் உள்ளிட்டவர்களுடன் அமெரிக்காவின் அழகிய லொகேஷன்களும் அழகாக நடித்து பனிதுளியை பளிச் என்று பளபளக்க செய்திருக்கின்றன.

அக்னல் ரோமன், பைசன், உசைன், ஆகியோரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும், சி.ஜெ.ராஜ்குமாரின் அழகிய பிரம்மாண்ட ஒளிப்பதிவும் படத்தின் பெரும் பலம்!

கனவு, நிஜமென்று கலந்துகட்டி கதை சொல்லியிருப்பதால் ஆங்காங்கே நிறைய குழப்பங்கள் ஏற்படுகிறது. நமக்கு மட்டுமல்ல இப்படத்தின் இரட்டை இயக்குநர்கள் நட்டிகுமார், டாக்டர் ஜெ., இருவருக்கும் கூட என்பது தான் வேதனை! மற்றபடி "பனிதுளி", மற்ற தமிழ் சினிமாக்களில் இருந்து சற்றே "புதுத்துளி!!"


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in