Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

,
16 ஜூலை, 2009 - 00:00 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் »

தகப்பன் சாமி படத்தை தயாரித்த பி.எஸ்.கோபால் திருமலை கிரியேஷன்ஸ்சின் அடுத்த தயாரிப்பு `உச்சகட்டம்'. ஹீரோவாக ஜெமினி நடிக்கிறார். ஹீரோயினாக ப்ளோரா இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமராக நடித்து அசத்தியிருக்கிறார். ப்ளோராவுக்கு கிளாமர் போட்டியாக, மிஸ் கர்நாடகா அழகியாக தேர்வான ஸ்வாதி இன்னொரு ககதாநாயகியாக நடிக்கிறார்.

கஞ்சா கருப்பு, இந்த படத்தில் அவரது சொந்த ஊரான சிவகங்கை கருப்பாகவே நடிக்கிறார். அவரது மனைவியாக கல்லூரி மாணவி இன்பேன்சி நடிக்கிறார். படத்தின் தயாரிப்பாளர் பி.எஸ்.கோபால், வில்லத்தனமான நடிப்பிலும் ஒரு புதிய பரிமாணத்தை கொண்டு வந்திருக்கிறார். இவர் கதாநாயகி ஃப்ளோராவை அறையும் காட்சியில் கைதவறி அறை உண்மையிலேயே விழ... சூட்டிங் சில மணி நேரங்கள் நிறுத்தப்பட்டு பின் சமாதானத்துக்கு பிறகு அந்த காட்சி மீண்டும் படமாக்கப்பட்டதாம். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக ... ப்ளோரா, ஸ்வாதி, ஜெமினி, தொடர்ச்சியாக 8 நாட்கள் மழையில் நனைந்தபடி நடித்தனர்.

ஸ்ரீகுட்டி, இன்பேன்சி, மாரிமுத்து, புலிக்குட்டி ரவி, மணிவாசகம், கருப்பையாவும் நடிக்கின்றனர். இசை: சார்லஸ் மெல்வின், எடிட்டிங்: சாபு-ரியாஸ், ஒளிப்பதிவு: செந்தில்குமார், தயாரிப்பு நிர்வாகம்: ரா.சேகர், சுஜின்ராஜ். பி.எல்.

இப்படத்தினை கே.எஸ்.ரவிக்குமார், பி.ஜி.ஸ்ரீராமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த நவீன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in