மாம்,Mom

மாம் - பட காட்சிகள் ↓

மாம் - சினி விழா ↓

Advertisement
4

விமர்சனம்

Advertisement

இந்தியாவில் குறிப்பாக தலைநகர் டில்லியில், காரிலும் பஸ்ஸிலும் அவ்வப்போது, இளம் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கேங்ரேப்புக்கள் எனப்படும் பாலியல் தொடர்பான குற்றங்களையும், அதில் ஈடுபடும் இறக்கமற்றோர் சட்டத்தின் பிடியில் இருந்தும் தப்பும் கொடூரங்களையும் சுட்டிக்காட்டி, சாட்டையடி கொடுக்கும் விதமாகவும், ஸ்ரீதேவி நடிக்க, ஹிந்தியில் வந்துள்ள "மாம்" திரைப்படம், தமிழிலும் அதே பெயரில் டப்பாகி வெளிவந்துள்ளது.

இத்திரைப்படத்தை, ஜீ ஸ்டுடியோஸ் & நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வழங்க, ஏ மேட் பிலிம்ஸ் & நரேஷ் அகர்வால் பிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஸ்ரீதேவி கபூருடன், அக்ஷய் கண்ணா, சாஜல் அலி, அத்னன் சித்திக், அபிமன்யூ சிங், நவ்சுதின் சித்திக்... உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் நடிக்க, ரவி உத்யவார் இயக்கியுள்ளார்.

தன் வயிற்றில் பிறக்காத தன் மகளை, பாலியல் பலாத்கரம் செய்து விட்டு சட்டத்தின் பிடியில் இருந்தும் தப்பிக்கிற கும்பலை பழி வாங்கும் மேல்தட்டு குடும்பத் தாயாக வரும் ஸ்ரீதேவி, அதன் மூலம் தனது மூத்தாரின் மகளுக்கு தன் தாய்மையை புரியவைக்கிறார், தெளிய வைக்கிறார் இது தான்... "மாம்" படத்தின் பரபரப்பும், பாசப்போராட்டமும் நிறைந்த கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்!

கதையின் நாயகியாக... தேவகி எனும் பாத்திரத்தில் நடிகை ஸ்ரீதேவி, பத்து வயது பெண் குழந்தைக்கு தாய் என்றாலும் தன் மூத்தாரின் வயதுக்கு வந்த இளம் பெண்ணையும் தன் மூத்தக் குழந்தையாகவே கருதி அக்கறையுடன் வளர்க்கும் காட்சிகளில் அன்பான அம்மாவாக அசத்தியிருக்கிறார். மேலும், மகள்கள் படிக்கும் பள்ளியில், மூத்த மகளின் டீச்சராகவும் இருக்கும் ஸ்ரீதேவி, தன் மகளிடம் அநாகரீகமாக, ஆபாசமாக நடந்து கொண்ட ஒரு மாணவனை .அமைதியாக கண்டிப்பதுடன் அவனது செல்போனை பிடுங்கி தூக்கி எறிகின்ற காட்சியில் யதார்ததமான கோபத்தையும் கொட்டி மிரட்டலான நடிப்பை வழங்கியிருக்கிறார். மேலும் இடைவேளைக்குப் பிந்தைய புத்திசாலித்தனமான பழிக்கு பழி காட்சிகளில்அதிரடியிலும் கலக்கி, ரசிகனை வாய் பிளக்க வைத்திருக்கிறார்.

அதேமாதிரி, "அவளுக்கு நம்மை புரியறது விட நாம அவளை புரிஞ்சிக்கிறது தான் ரொம்ப முக்கியம்..." , என்பதில் தொடங்கி, "இந்த நாட்ல ரேபலாம் பண்ணலாம் பட் ரேப்பிஸ்ட்ட நம்மால அறையக் கூட முடியாது... அப்படித்தானே.." என்பது வரையிலான ஸ்ரீதேவி பேசும் பலப்பல அர்த்தம் பொதிந்த நச்-டச் "பன்ச்"களும் படத்திற்கு பெரும் பலம். அதேநேரத்தில், அவரது முகத்தில் தெரியும் முதுமையை மறைக்க போடப்பட்டிருக்கும், "ஒவர் மேக்-அப்" சற்றே உறுத்தலாக இருப்பது குறை.

முழுக்க முழுக்க, ஹீரோயின் ஒரியண்டட் சப்ஜெக்ட்டான இதில், நடித்துள்ள மற்ற பிற நட்சத்திரங்களில், போலீஸ் அதிகாரியாக ஸ்ரீயின் கணவர் ஆனந்தாக, தனியார் துப்பறியும் நிபுணர் டி.கே யாக, ஸ்ரீயின் மகள் ஆர்யாவாக, இளம் குற்றவாளி மோஹித்தாக, அவரது சகோ மற்றும் சகாக்கள ஜெகன், பாபுராமாக வரும் அக்ஷய் கண்ணா , சாஜல் அலி, அத்னன் சித்திக், அபிமன்யூ சிங், நவ்சுதின் சித்திக்... உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் உயிரைக் கொடுத்து மிகவும் இயல்பாக யதார்த்தமாக நடித்திருக்கின்றனர்.

அதிலும் ஸ்ரீயின் மகள் ஆர்யாவாக, வரும் அந்த இளம் பெண் உருக்கம். அவரை மாதிரியே, ரசிகர்களை வெகுவாக கவருகிறார் பிரைவேட் டிடக்டீவ் டி.கே யாக வரும் அந்த நடிகர். "உங்க அம்மா பேரு வெறும் தாராதானா? இல்ல நயன்தாராவா..? இந்தரேன்ஜ் பண்றாளே அதான் கேட்டேன்..." என தன் வீட்டிலும் , "அஸ்தியில் இருந்து கூட நான் உண்மையைக் கண்டுபிடிப்பேன். அதே மாதிரி, கிளையண்ட் சீக்ரஸியையும் காப்பேன்.... கடவுள் மீது நம்பிக்கை வையுங்க.. எல்லாவற்றையும் அவன் பார்த்துப்பான்..." என்றபடி தான் தொழில் செய்யும் பகுதியையும் மகிழ்ச்சியாக சகஜமாக வைத்துக் கொள்வதில் ஜமாய் திருக்கிறார் மனிதர். வாவ்!

மோனிஷா ஆர்.பல்தேவாவின் படத்தொகுப்பு - பக்கா தொகுப்பு மட்டுமல்ல... படா கிளாசிக் தொகுப்பும் கூட.

அனய்கோஸ்வாமியின் ஓவிய ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் அழகிய மிரட்டலாக ஒளிர்ந்திருக்கிறது, மிளிர்ந்திருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பின்னணி இசை, மிரட்டல் கதைக்கேற்ற அசத்தல். ஆனாலும், பாடல்கள்., டப்பிங் படம் என்பதாலோ , என்னவோ பெரிதாக பாராட்டும் படி இல்லை... என்பது குறை. .

பலவீனங்கள் பெரிதாக எதுவுமில்லாத. ரவி உத்யவாரின் இயக்கத்தில், பதைபதைக்க வைக்கும் டில்லியின் கற்பழிப்பு கொடூரங்களை பின்னணியாகக் கொண்ட கதைக்களம் பெரும் பலம் என்றால், அதற்கு பின்பாதியில் ஸ்ரீதேவி தரும் தீர்வுகளும், மிகச் சரியாகவே படமாக்கப்பட்டிருக்கிறது... என்பதும் மிகவும் பாராட்டிற்கு உரியது.

அதே மாதிரி, இப்படத்தின் கதைப்படி நாயகியின் மூத்தாரின் மகளுக்கு, அவரது அப்பாவின் இரண்டாம் தாரத்தை தன் தாயின் இடத்தில் வைத்து ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனதை, மிக அழகாகவும், யதார்த்தமாகவும் படம் பிடித்திருக்கும் விதமும், டில்லி சாலைகளில் நடு இரவில் காரில் இளம் பெண்ணை ஒரு கும்பல் கடத்தி, கேங் ரேப் செய்யும் காட்சி., துளியும் விரசம் இல்லாமல், அதே சமயத்தில் படம் பார்ப்பவர்களின் மனநிலை "பக் பக்..." என பரிதவிக்கும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதமும், இயக்குனரின் எக்கச்சக்கமான திறமைகளுக்கு எடுத்துக் காட்டாக நின்று "மாம்" படத்திற்கு மரியாதை கூட்டியிருக்கின்றன.

மேலும் தான் அயோக்கியர்களின் வன்புணர்ச்சியால் இரத்தம் வெளியேறி, உடம்பு முடியாது மருத்துவமனையில் குற்றுயிரும், குலை உயிருமாக இருக்கும் போது, வளர்ப்பு தாய் உதவியுடன் பெட்பேடில் யூரின் போவதை தனது வளர்ப்பு தாயே பார்க்க கூடாது என நினைக்கும் பெண்ணை, நான்கு பேர் கேங் ரேப் செய்திருப்பதை ரசிகனுக்கு உணர்த்தும் காட்சியில் இயக்குநர் எக்கச்சக்கமாக ஜெயித்திருக்கிறார்.... என்றால் மிகையல்ல!

ஆக மொத்தத்தில், ஸ்ரீதேவி, "மாம் - உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் மேம்!"

 

மாம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மாம்

  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓