3

விமர்சனம்

Advertisement

"கழுகு" கிருஷ்ணா, "கயல்" ஆனந்தி ஜோடியுடன் "பருத்தி" சரவணன், கருணாஸ், நிதின் சத்யா, மதுசூதனன், அருள்தாஸ், பிளாக் பாண்டி ஆகியோர் நடிக்க, பெரோஸ் இயக்கத்தில், அவரது மனைவி நடிகை விஜயலஷ்மி பெரோஸ், தனது, "டீ டைம் டாக்ஸ்" பேனரில் தயாரிக்க, "அயூரா சினிமாஸ்" வெளியீடு செய்திருக்கும் லவ், க்ரைம், த்ரில்லர் - சென்டிமென்ட் திரைப்படம் தான் "பண்டிகை".

"ஸ்ட்ரீட் பைட்" சூதாட்டத்தில் பைட்டராக தனக்கு வேலை வாங்கி தந்த "பருத்தி வீரன்" சரவணன், சட்டத்திற்கு முற்றிலும் புறம்பான கிரிக்கெட் பெட்டிங்கில் அதே நயவஞ்சக "ஸ்ட்ரீட் பைட்" சூதாட்ட முதலாளி மதுசூதனனிடம் முறையில்லாமல் தோற்று, தொலைத்து விட்டு வீடு, வாசல், மனைவி மற்றும் குடும்பத்தை இழந்து பெரும் கடன்பட்டு நிற்பது கண்டு, பொறுக்க முடியாத ஹீரோ கிருஷ்ணா, சரவணன் மற்றும் மதுசூதனனிடம் வேலை பார்க்கும் நிதின் சத்யா ஆலோசனைப்படி, சரவணன் இழந்த பணத்தையும், மேலும், தனக்கும் தன் சகாக்கள் நிதின் சத்யா, கருணாஸ், பிளாக் பாண்டி... உள்ளிட்டோருக்கு தேவையான பணத்தையும் அந்த சூதாட்ட விடுதி உரிமையாளர் மதுசூதனனிடமிருந்து மேற்படியாளர்களின் கூட்டணியோடு கொள்ளையடிக்க களம் இறங்குகிறார். அதில், கிருஷ்ணா - சரவணன் கூட்டணியினரின் கையில் வெற்றி கிட்டியதா? அல்லது இவர்கள் சூதாட்ட தாதா மதுசூதனன் கையில் சிக்கி சின்னாபின்ன மானார்களா..? என்பது தான் "பண்டிகை" படத்தின் கதையும், களமும். இது கூடவே, கிருஷ்ணா - ஆனந்தியின் காதல் கண்ணாமூச்சியையையும் கலந்து கட்டி, கலர்புல்லாகவும், கலக்கலாகவும் "பண்டிகை" படத்தை புதுசாக படைத்திருக்கின்றனர்!
கதாநாயகராக "கழுகு" கிருஷ்ணா, இப்படத்தின் மூலம் லவ் வில் அடக்கி வாசித்து, ஆக்ஷனில் புகுந்து புறப்பட்டு விளையாடி இருக்கிறார். தமிழ் சினிமாவில் இதுவரை பெரிதாக காட்சிப்படுத்தப்படாத "ஸ்ட்ரீட் பைட்" சண்டை சூதாட்டத்தை மையமாக வைத்து இப்படத்தில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக கிருஷ்ணா எதிர்பார்த்ததற்கும் மேல் அசத்தியிருக்கிறார்.

வளரும் இளம் நடிகராக, "கயல்" ஆனந்தியிடம் தனது காதலை மிக அழகாக வெளிப்படுத்துவதிலும், ஆக்ஷ்ன் காட்சிகளில் தனது ஆக்ரோஷத்தை காட்டுவதிலும், வெகு சிறப்பாக நடித்திருக்கிறார். அதிலும், தாதா மதுசூதனன் வீட்டில் பணத்தை அடித்து விட்டு மாட்டிக் கொள்ளப் பார்த்து மயிரிழையில் தன் புத்திசாலிதனத்தால் எஸ்கேப் ஆகும் காட்சிகளில் கிருஷ்ணா செம ஷார்ப்பாக நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக, கிருஷ்ணாவின் காதலியாக "கயல்"ஆனந்தி தனது முதல் படம் மாதிரி நடிக்க முயற்சிக்காது அடுத்தடுத்த, முந்தைய படங்களைப் போலவே., இதிலும் வந்து போய் வசனம் பேசிருக்கிறார் .

"பருத்திவீரன்" சரவணனுக்கு வெயிட்டான ரோல் படம் முழுக்க பணத்தை இழந்து, மனைவியை பிரிந்து வீட்டை இழந்து, பயந்தபடியே வந்து இறுதியில் இழந்ததை மீட்கும் போது நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார் .

பெரும் கபடதாரியாக சூதாட்டத்தாதாவாக மதுசூதனன் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். அடாவடி வட்டிக்காரராக அருள்தாஸ், விழிகளை உருட்டியே வில்லத்தனம் காட்டி மிரட்டுகிறார். படம்முழுக்க பிளாக் பாண்டி காமெடி, கடியாகவே இருக்கிறது.

அதேசமயத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும், கருணாஸ் காமெடியில் கச்சிதம். .நிதின் சத்யா, சண்முகராஜன், அர்ஜய், ஆகியோரும் தங்கள் பாத்திரத்திற்கு தேவையானதை சிறப்பாக தந்திருக்கின்றனர்.

"ஸ்ட்ரீட் பைட்" சூதாட்டத்தை வித்தியாசமான கோணத்தில் பதிவு செய்திருக்கும் அர்வி எனும் அர்விந்தின் ஒளிப்பதிவில் மொத்த படமும் மிளிர்கிறது

ஆர்.ஹெச்.விக்ரமின் பின்னணி இசையும், இப்பட தயாரிப்பாளர் "சென்னை - 28" நடிகை விஜயலட்சுமி பாடியுள்ள "தேன் சிலை நான்...", "சில வாரமா .." உள்ளிட்ட பாடல்கள் இசையும் இப்படத்திற்கு கூடுதல் பலம்.

இயக்குநர் பெரோஸின் எழுத்து, இயக்கத்தில், "உதவின்னு கேட்டு ஒருத்தன்ட்ட நிக்கும் போது அசிங்கப்படுத்தறதை விட கைகாட்டி விடுறது ஹெல்ப்ண்னே... அடுத்த பண்டிகை எப்பண்னே?" என்பது உள்ளிட்ட ரசிகனைவசியம் செய்யும் டயலாக்குகளும், "பண்டிகை" எனும் பாஸிடீவ்வான டைட்டிலும், மேலும் படத்தில் இடம் பிடித்திருக்கும் தமிழ் சினிமாவிற்கு புதிதான "ஸ்ட்ரீட் பைட்" எனும் மனித சண்டை சூதாட்டமும் இப்படத்திற்கு பெரியப்ளஸ்.

அதே நேரம் ரொம்ப நேரம் வேறு எங்கெங்கெல்லாமோ சுற்றும் கதைக்களம் பலவீனம். அதே போன்று நாயகர் - நாயகியின் காதல் காட்சிகளில் பெரிய அளவில் ஈர்ப்பு இல்லாததும் பெரும் பலவீனம்... என்றாலும்., இப்படியும் கூட சூதாட்டங்கள் நம்மூரில் இருக்கிறதா? என புருவம் உயர்த்தும் அளவிற்கு அந்த "ஸ்ட்ரீட் பைட்" சூதாட்டங்களும், மற்ற பிற சூதாட்டங்களும் படம் பிடிக்கப்பட்டிருக்கும் விதம் வியப்பளிக்கிறது.

ஆக மொத்தத்தில், "பலேகையான -பண்டிகை இதே நேரத்தில், தியேட்டரில் ஓடும் பிற படங்களை பார்க்கலாம் ஒரு கை!"

 

பண்டிகை தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பண்டிகை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓