Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஹிந்தி மீடியம் (ஹிந்தி)

ஹிந்தி மீடியம் (ஹிந்தி),Hindi Meidum
  • ஹிந்தி மீடியம் (ஹிந்தி)
  • இர்பான் கான்
  • சபா ஓமர்
  • இயக்குனர்: சாகேட் சவுத்ரி
20 மே, 2017 - 12:38 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஹிந்தி மீடியம் (ஹிந்தி)

பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் படும் பாட்டை சொல்லும் படமாகவும், பாடமாகவும் வந்துள்ளது ஹிந்தி மீடியம். எப்போதும் வித்தியாசமான கதைகளையே தேர்ந்தெடுத்து நடிக்கும் இர்பான் கான், இதில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ஹிந்தி மீடியம் ரசிகர்களை கவர்ந்ததா...? என்று பார்ப்போம்.

கதைப்படி, ராத் பத்ரா எனும் இர்பான் கான், டில்லி சாந்தினி சவுக் பகுதியில் ஆடைகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அவரால் சரிவர ஆங்கிலம் பேச முடியவில்லை. இதனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சரியாக வியாபாரம் செய்ய முடியாத சூழல். ஆனால் அவரது மனைவியான மிட்டா எனும் சபா ஓமர் நன்கு ஆங்கிலம் பேசக்கூடியவர். மகள் பியாவை இங்கிலீஷ் மீடியத்தில் சேர்த்து படிக்க வேண்டும் என்பது சபாவின் ஆசை. இதனால் இர்பான் மற்றும் சபா இருவரும் டில்லியில் டாப் பள்ளிகளில் ஒன்றில் தங்களது குழந்தைகளை சேர்க்க முயல்கின்றனர். ஆனால், இர்பான் மற்றும் சபாவின் ஏழ்மை நிலை மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதி குடிசை பகுதி உள்ளிட்ட பல காரணங்களை காட்டி பள்ளியில் இடம் தர மறுக்கின்றனர். தங்களது பிள்ளையை எப்படியாவது அந்தபள்ளியில் சேர்த்து விட வேண்டும் போராடுகின்றனர் இர்பான் மற்றும் சபா. இதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா... இல்லையா... என்பது படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.

மரத்தை சுற்றி டூயட் பாடும் பல நடிகர்களுக்கு மத்தியில் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான படங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இர்பான், ஹிந்தி மீடியம் படத்திலும் வித்தியாசமான ரோலில் நடித்து அசத்தியிருக்கிறார். தன்னால் எப்படிப்பட்ட ரோலையும் செய்ய முடியும் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

பாகிஸ்தான் நடிகையான சபா ஓமரும், அழகான அம்மாவாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மகளாக வரும் சிறுமி பியா, தீபக் டாப்ரியால் உள்ளிட்டவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

ஹிந்தி மீடியம் படத்தை சாகேட் சவுத்ரி இயக்கியுள்ளார். பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் படும் பாட்டை அவ்வளவு அழகாக படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதியை விட முதல்பாதி தான் விறுவிறுப்பாக நகருகிறது. அதற்கு படத்தின் திரைக்கதையும், வசனங்களும் பக்காவாக அமைந்துள்ளது. சச்சின் ஜிகாரின் பாடல்கள் இசை மற்றும் அமர் மோகிலின் பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பும் படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கின்றன. இருந்தாலும் கிளைமாக்ஸ் மட்டும் தான் கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிறது.

குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் படும் பாட்டை அவ்வளவு அழகாக, அசத்தலாக படமாக்கியதற்காகவே ஹிந்தி மீடியம் படத்தை ஒவ்வொரு குடும்பத்தினரும் தவறாது பார்க்கலாம்.

மொத்தத்தில், "ஹிந்தி மீடியம் - பாடம்!"

ரேட்டிங் - 3/5



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in