Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஹாப் கேர்ள்பிரண்ட் (ஹிந்தி)

ஹாப் கேர்ள்பிரண்ட் (ஹிந்தி),Half Girlfriend
மோகித் சூரி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் இது.
20 மே, 2017 - 11:42 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஹாப் கேர்ள்பிரண்ட் (ஹிந்தி)

சேத்தன் பகத் எழுதிய ஹாப் கேர்ள்பிரண்ட் நாவலை தழுவி, அதேபெயரில் மோகித் சூரி இயக்கத்தில், அர்ஜூன் கபூர், ஸ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ஹாப் கேர்ள்பிரண்ட். இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா... என்று இனி பார்ப்போம்.

கதைப்படி, பீகார் மாநிலம் நடுத்தரவர்க்கத்து குடும்பத்தை சேர்ந்தவர் மாதவ் ஜா எனும் அர்ஜூன் கபூர். படிப்பு விஷயமாக டில்லி செல்லும் அர்ஜூன், அங்கு மாடர்ன் மற்றும் மேல்தட்டுவர்க்கத்தை சேர்ந்த ரியா எனும் ஸ்ரத்தா கபூரை சந்திக்கிறார். ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகுகின்றனர். பின்னர் காதலில் கசிந்துருகின்றனர். ஒருநாள் ஸ்ரத்தா, அர்ஜூனிடம் நான் உன்னை திருமணம் செய்ய முடியாது, ஆகையால் நீ என்னை மறந்துவிடு என்கிறார். இதனால் மனமுடைந்து அர்ஜூனும் தன் சொந்த ஊரான பீகாருக்கே சென்று விடுகிறார். இருவரும் வேறு வேறு பாதையில் பயணிக்கின்றனர். ஒருநாள் ஸ்ரத்தா, பாட்னா செல்ல, அங்கு அர்ஜூனை சந்திக்கிறார். மீண்டும் அவர்களுக்குள் காதல் பிறக்கிறது. ஆனால் ஒருக்கட்டத்தில் மீண்டும் பிரிந்து விடுகிறார்கள். எதற்காக இருவரும் பிரிந்தார்கள், மீண்டும் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா...? என்பது ஹாப் கேர்ள்பிரண்ட் படத்தின் மீதிக்கதை.

மாதவ் ஜாவாக அர்ஜூன் கபூர். நடிப்பில் அர்ஜூன் இன்னும் வளர வேண்டும். பீகார் மொழியில் அவர் பேசுவது எல்லாம் சுத்தமாக எடுபடவில்லை.

ரியாவாக ஸ்ரத்தா கபூர். முந்தைய படங்களில் இருந்த அசத்தல் நடிப்பு இந்தப்படத்தில் கொஞ்சம் கம்மி என்று தான் எண்ண தோன்றுகிறது. நிறைய இடங்களில் அவரது எக்ஸ்பிரஸன் ஒர்க்-அவுட்டாகவில்லை.

ஹாப் கேர்ள்பிரண்ட் நாவலை தழுவி படத்தை இயக்கியுள்ள மோகித் சூரி, கதை மற்றும் திரைக்கதையில் நிறைய கோட்டை விட்டுள்ளார். மேலும் படம் மெதுவாக நகருவதும், ரசிகர்களை கவராத வசனங்களுக்கும் படத்திற்கு பலவீனம்.

படத்தின் பெரிய பிளஸே இசை தான். ராகுல் மிஸ்ரா, ராஜூ சிங் ஆகியோருடன் இணைந்து மிதுன், தனிஷ்க் பாகி, அமி மிஸ்ரா உள்ளிட்ட பல இசையமைத்திருப்பதால் என்னவோ படத்தின் ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு ரகமாகவும், பின்னணி இசை இதமாகவும் அமைந்துள்ளன. விஷ்ணு ராவ்வின் ஒளிப்பதிவு ஓவியம், அதற்கேற்ற தேவேந்திர மர்தேஸ்வரின் படத்தொகுப்பும் பக்காவாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில், எந்த சுவாரஸ்யமும் இல்லாத கதை, திரைக்கதையுடன் படமும் மெதுவாக நகருவதால் ஹாப் கேர்ள்பிரண்ட் - ரசிகர்களிடத்தில் பாதி கூட தேறுமா... என்பது சந்தேகம்.?!

ரேட்டிங் - 2/5



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in