Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

அழகான ‌பொண்ணுதான்

அழகான ‌பொண்ணுதான்,
  • அழகான ‌பொண்ணுதான்
  • ராஜ கார்த்திக்
  • நமீதா
  • இயக்குனர்: திரு
19 மார், 2010 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » அழகான ‌பொண்ணுதான்

தினமலர் விமர்சனம்

நடுத்தர வயது அம்மணி மீது சிறுவயது பையனுக்கு ஏற்படும் காதலும், காமமும்தான் அழகான பொண்ணுதான் படத்தின் ‌மொத்த கதையும்! அதை அழகாகவும் சொல்லாமல், ஆபாசமாகவும் சொல்லாமல் அய்யோ பாவம் என சொல்லியிருப்பதுதான் பலவீனம்!

கதைப்படி இராணுவத்தில் இருக்கும் கணவனின் வரவுக்காக காத்திருக்கும் நமீதாவை அடைய முடியாத வருத்தத்தில் ஆண்களும், அவரை வளைத்து விடுவார்களோ தங்கள் வீட்டு ஆண்கள் எனும் பயத்தில் பெண்களும் அந்த ஏரியா முழுக்க வயது வித்தியாசமின்றி நமீ பற்றிய சிந்தனையிலேயே இருக்க., நம் விடலைப் பருவத்து ஹீரோ மட்டும் நமீயோடு கனவு‌லகிலேயே வாழ்கிறான். கட்டில் அதிரவும் செய்கிறான். கணவன் இருக்கிறான் நமீக்கு என தெரிந்தும், அவன் மரித்துப் போக வேண்டும் என நமீ போகும் சர்ச்-க்கே சென்று ‌சிலுவையில் அறையப்பட்டிருக்கும் இயேசுவிடம் வேண்டுகிறார். இப்படி எல்லாமும் செய்யும் ஹீரோ நமீதாவை அவரது புருஷன் இறந்ததும், தங்களது சுய லாபத்தறி்காக ஊரே திரண்டு நடத்தை கெட்டவள் என அடித்து உதைத்து துரத்தும்போது அரவணைத்தோ, அடைக்கலம் தந்தோ அழைத்து சென்றிருந்தால் சபாஷ் சொல்லியிருக்கலாம்!

விடலைப்பருவத்து ஹீரோவாக புதுமுகம் கார்த்திக். துள்ளுவதோ இளமை தனுஷை ஞாபகத்தில் வைத்துக் கொண்டே நடிக்க  வந்திருப்பார் போலும். நமீதா சோக காட்சியிலும் கவர்ச்சி பதுமையாக பளீச் என்று பவனி வருகிறார். பார்த்திபன், நிழல்கள் ரவி உள்ளிட்டவர்களும் இருக்கிறார்கள்

மெலினா எனும் சவுத்ஆப்ரிக்கன் படத்தை உல்டா செய்திருக்கும் இயக்குனர் திரு, அதை உருப்படியாக செய்திருந்தால் ஜெயித்திருக்கலாம். நாமும் ரசித்திருக்கலாம்!!

அழகான பொண்ணுதான் : நமீதா மட்டுமல்ல; அய்யோ பாவம் நாமும்தான்!



வாசகர் கருத்து (5)

kavitha - tamailnadu,இந்தியா
18 செப், 2010 - 15:52 Report Abuse
 kavitha இவளை போய் சூப்பர் என்று சொல்லாதீர்கள் மானம் கெட்ட மடையன்களா.
Rate this:
dhanaraj - thungapuram,இந்தியா
16 செப், 2010 - 00:12 Report Abuse
 dhanaraj very nice ......owe ......
Rate this:
s.sathish - perambalur,இந்தியா
11 செப், 2010 - 16:06 Report Abuse
 s.sathish super
Rate this:
kathir - chennai,இந்தியா
06 ஜூலை, 2010 - 16:32 Report Abuse
 kathir Diffrenta yosipanganu kalvipatruken ana ivalauo diffrenta yosikratha ipatan pakren konjam konjam nalla per eduthurukra directors lam pavam
Rate this:
thillainatarajan - madurai,இந்தியா
22 மே, 2010 - 18:56 Report Abuse
 thillainatarajan inimel intha mathiri padam edutha serupa kalati adinga. namithava mudhala avanga ooruku poga solunga. ava nama oora remba keduthuta
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in