Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

அலமாரா (மலையாளம்)

அலமாரா (மலையாளம்),alamara (Malayalam)
  • அலமாரா (மலையாளம்)
  • இயக்குனர்:
22 மார், 2017 - 10:34 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » அலமாரா (மலையாளம்)

நடிகர்கள் ; சன்னி வெய்ன், அதிதி ரவி, அஜூ வர்கீஸ், ரெஞ்சி பணிக்கர், ஷைஜு குரூப், மணிகண்ட ஆச்சாரி, இந்திரன்ஸ், சீமா நாயர், சோனு அன்னா ஜேக்கப், மஞ்சு சதீஷ்,

கதை ; மகேஷ் கோபால் & ஜான் மந்திரிக்கல்

டைரக்சன் ; மிதுன் மானுவேல் தாமஸ்


புதுமண தம்பதிகளுக்கு சீதனமாக கொடுக்கப்பட்ட ஒரு அலமாரியும் அதன்பின் அந்த தம்பதி மற்றும் அவர்களது குடும்பத்தில் அந்த அலமாரியை வைத்து நடக்கும் பஞ்சாயத்துக்களையும் காமெடியாகவும் அதேசமயம் கருத்தாகவும் சொல்லியிருக்கும் படம் தான் இந்த 'அலமாரா'. துல்கரின் நெருங்கிய நண்பரான சன்னி வெய்ன் தான் இந்தப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார்.


பெங்களூரில் தனியார் வங்கி ஒன்றில் வேலைபார்ப்பவர் தான் படத்தின் நாயகன் சன்னி வெய்ன்.. இவருக்கு திருமணம் நடைபெற இருந்த சமயத்தில் மணப்பெண் வேறு ஒருவருடன் ஓடியதால் இவரது திருமணம் நிற்கிறது.. இந்தநிலையில் கிராமத்தில் தனது நண்பன் அஜூ வர்கீசுக்காக, தனது தங்கையின் தோழியான அதிதியை பெண்பார்க்க செல்கிறார் சன்னி. அதிதியோ மாப்பிளை குள்ளம் என அஜூவை நிராகரித்துவிடுகிறார்.. எதிர்பாரதவிதமாக அதே அதிதி வேலை கிடைத்து பெங்களூருக்கு வருகிறார்., தனது ஊர்காரப்பெண் என்பதால் தனது அம்மா, தங்கை வேண்டுகோளுக்காக அதிதிக்கு தங்குவதற்கு இடம் பார்த்துகொடுத்து உதவி செய்கிறார் சன்னி.


இதன் தொடர்பாக போகப்போக நிகழும் சந்திப்புகளால் இருவருக்குள்ளும் காதல் மலர, இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயம் நடைபெறுகிறது.. இன்னொரு பக்கம் தனது மகளுக்கும் வரன் பார்த்து இரண்டு திருமணங்களையும் ஒன்றாக நடத்தலாம் என ஆறு மாதம் அவகாசம் கேட்கிறார் சன்னியின் தாயார் சீமா நாயர். ஆனால் நாளாக நாளாக சில காரணங்களால் சன்னியின் அம்மாவுக்கு பெண் வீட்டார் மீது சற்றே மனக்கசப்பு ஏற்படுகிறது..


இன்னொரு பக்கம் மணமகனின் தங்கையோ, பேங்க் தேர்வெழுதி வேலை வாங்கியபின் தான், தனது திருமணத்திற்கு சம்மதிப்பேன் என்று கூற, இதிலேயே ஆறுமாத காலம் ஓடிவிடுகிறது..

காதலர்கள் இருவரும் பொறுமையிழந்து ரிஜிஸ்தர் மேரேஜுக்கு தயாராக, பதறிப்போய் அவர்கள் திருமணத்தை முதலில் நடத்தி விடுகின்றனர்.. மணப்பெண்ணுக்கு சீதனமாக மிக பிரமாண்டமான அலமாரி ஒன்றை கொடுக்கிறார் அவரது அப்பா.. மணமகன் சன்னியின் வீட்டில் அதை உள்ளே கொண்டுபோய் வைக்கவே ஒருபக்கம் சிரமமாக இருக்க, இன்னொரு பக்கம் அந்த அலமாரியின் கம்பீரம் கண்டு பொறாமையால் புழுங்குகிறார் மணமகனின் தாயார்.


புதுமண தம்பதி பெங்களூரில் செட்டில் ஆனாலும் கூட, கிராமத்தில் இருக்கும் இந்த அலமாரி தொடர்பான சச்சரவுகள் தொடர்கதையாகின்றது.. ஒரு கட்டத்தில் சன்னியின் தாயார் அலமாரியை பெங்களூருக்கு எடுத்டுச்செல்லும்படி கூற, மணமகள் அதிதியும் அந்த அலமாரியின் பெங்களூர் வரவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறார்.. ஆனால் அந்த அலமாரி வந்தபின் தம்பதியருக்குள் தேவையில்லாமல், காரணமே இல்லாமல் அடுக்கடுக்காக பிரச்சனைகள் வந்து டைவர்ஸ் வரை விவாகரத்தை கொண்டு செல்கிறது.. இறுதியில் மணமக்கள் என்ன முடிவெடுத்தனர், அலமாரியின் கதி என்ன ஆனது என்பதை முழுக்க முழுக்க காமெடியுடன் கொஞ்சம் மெசேஜ் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.


உரலுக்கு இரண்டு பக்கம் இடி என்கிற ரீதியில் ஒருபக்கம் அம்மா, இன்னொரு பக்கம் மனைவி என இருவரையும் சமாளிக்க படும் பாட்டில் சன்னி வெய்னை விட நமக்குத்தான் மூச்சு முட்டுகிறது.. நாயகி அதிதியும் பாத்திரம் அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.. தம்பதியர் இருவருக்குள்ளும் அந்த அலமாரியை முன்வைத்து நிகழும் சச்சரவுகளை இருவருமே ரியலாக பிரதிபலித்திருக்கிறார்கள்.


நாயகன், நாயகி இருவரின் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள் படு யதார்த்தம்.. குறிப்பாக சன்னியின் தாயார் சீமா நாயர் செய்யும் அடாவடிகள் எல்லாம் நம்மை எரிச்சலூட்டினாலும், அவரது கேரக்டரை மெருகேற்றி இருக்கிறது.. சன்னியின் நண்பர்களாக அஜூ வர்கீஸ், ஷைஜு குறூப் படத்தை நகைச்சுவையாக நடத்த உதவுகிறார்கள்.. சன்னியின் தாய்மாமன் கேரக்டரில் நடித்திருக்கும் 'கம்மட்டிப்பாடம்' புகழ் மணிகண்ட ஆச்சாரி இந்தப்படத்திலும் தனது முத்திரையை பதித்துள்ளார்..


சன்னியின் தங்கையாக வரும் சோனு அன்னா ஜேக்கப் இயல்பான அழகால் நம்மை கவர்கிறார். சன்னியின் தந்தையாக மனைவி சொல்லே மந்திரம் என பம்மும் கேரக்டரில் ரெஞ்சி பணிக்கர் கனகச்சிதம். பெங்களூரு ரவுடியாக வரும் காமெடி நடிகர் இந்திரன்ஸ் வரும் காட்சிகள் கலகல.. படத்தில் இடம்பெற்றுள்ள அலமாரியும் அதற்கு குரல் கொடுத்துள்ள நடிகர் சலீம் குமாரின் குரலோடு ஒரு கதாபாத்திரமாகவே படம் முழுக்க வளைய வருகிறது.


தம்பதிகளுக்குள் விட்டுக்கொடுத்து போகவேண்டும் என்பதையும் காதலி கிடைக்க தவமாக தவம் கிடக்கும் இளைஞர்கள் திருமணமானபின் அதே காதலி மனைவியான பின் அவளிடம் காட்டும் அலட்சியத்தையும், குடும்பத்தினரின் ஆசாபாசங்களை ஓரளவுக்கு மேல் தங்களது தலையில் ஏற்றிக்கொண்டால் வாழ்க்கையை தொடரவேண்டிய ஆரம்பகட்டத்திலேயே மணமக்களின் வாழ்வில் சூறாவளியை கொண்டுவந்துவிடும் என்பதையும் கொஞ்சம் திகட்டும்படியாகவே ஓவர்டோஸ் கொடுத்து காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ்.


அந்த ஓவர் டோஸை குறைத்திருந்தால் இன்னும் கச்சிதமான காமெடிப்படமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in