Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

குங்பூ யோகா (ஆங்கிலம்)

குங்பூ யோகா (ஆங்கிலம்),Kung Fu Yoga
  • குங்பூ யோகா (ஆங்கிலம்)
அதிரடி மன்னன் ஜாக்கி சான் நடிப்பில் ஸ்டான்லி டாங் இயக்கியுள்ள படம் இது.
04 பிப், 2017 - 14:28 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » குங்பூ யோகா (ஆங்கிலம்)

நடிகர்கள் : ஜாக்கி சான், சோனு சூட், அமைரா தஸ்தூர், திஷா பதானி

இயக்கம் : ஸ்டான்லி டாங்


ஹாலிவுட்டின் அதிரடி மன்னன் ஜாக்கி சானுடன், சோனு சூட், அமைரா தஸ்தூர், திஷா பதானி உள்ளிட்ட நம்முடைய இந்திய நடிகர்களும் இணைந்து நடித்து வெளியாகியுள்ள காமெடி கலந்த ஆக்ஷ்ன் ஹாலிவுட் படம் தான் ‛குங்பூ யோகா'. குங்பூவும் யோகாவும் இணைந்து ரசிகர்களை மகிழ்வித்ததா என்று இனி பார்ப்போம்...!


கதைப்படி, அகழ்வாராய்ச்சியாளரான ஜாக் எனும் ஜாக்கி சானும், அவரது உதவியாளர்களாவ நோமின் எனும் மியா முகி, ஜூ எனும் ஒய்ஜிங் ஜேங் ஆகியோருடன் ஒரு புதையலை தேடி இந்தியா வருகிறார். ஜாக்கை போலவே இந்திய அகழ்வாராய்ச்சியாளர்களான அஸ்மிதா எனும் திஷா பதானி மற்றும் அவரது சகோதரி கைரா எனும் அமைரா தஸ்தூரும் அந்த புதையலை தேடி வருகின்றனர். இந்த இரண்டு குழுக்களுடன் வில்லன் ரன்தல் எனும் சோனு சூட்டும் அதை புதையலை தேடி அலைகிறான். மூவரும் ஒருக்கட்டத்தில் ஒன்றாக சந்திக்கின்றனர். புதையலை கண்டுபிடித்தார்களா...?, யார் கையில் புதையல் கிடைத்தது...? என்பது குங்குபூ யோகா படத்தின் பரபரப்பான ஆக்ஷ்ன் கலந்த காமெடி கதை!


ஹீரோ ஜாக்கி சான், வழக்கம்போல தன் அதிரடி சாகசங்களால் ரசிகர்களை மகிழ்விக்கிறார். கூடவே தனது காமெடியாலும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். மனிதர் இந்த வயதிலும் ஆக்ஷ்னில் என்னமாய் தூள் கிளப்புகிறார்...!


ஜாக்கை போலவே நம்மூர் நடிகர்களான திஷா பதானி, அமைரா தஸ்தூரும் அழகாய் வந்து செல்கின்றனர்.


வில்லன் சோனு சூட் தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை சரியாக செய்திருந்தாலும் ஜாக்கி சானுக்கு முன்னால் இவரது நடிப்பு எடுபடாமல் போய்விட்டது என்பதே உண்மை.


விங்க்-ஹங்-வோங்கின் ஒளிப்பதிவில் இந்திய மற்றும் சீன இடங்கள் அழகாய் பதிவாய், ஓவிய பதிவாய் தெரிகிறது. இசை இதமாய் இல்லாவிட்டாலும் படுத்தாத அளவுக்கு இல்லை. படத்தொகுப்பு ஓ.கே. வலுவான கதை என்று பெரிதாய் ஒன்றுமில்லை, ஆனால் அதை இயக்குநர் ஸ்டான்லி டாங் எடுத்த விதமும், ரசிகர்களுக்கு கொடுத்த விதமும் சிறப்பு. ஜாக்கி சானின் அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் காமெடிகளுக்காகவே குங்பூ யோகாவை ஒரு முறை பார்க்கலாம்.


மொத்தத்தில் ‛குங்பூ யோகா' - ‛‛நோ யோகா ஒன்லி ஆக்ஷ்ன்''



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in