Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » வரவிருக்கும் படங்கள் » எப்படி மனசுக்குள் வந்தாய்

எப்படி மனசுக்குள் வந்தாய்

  • நடிகர் : விஸ்வாஸ்
  • நடிகை : தன்வி
  • இயக்குனர் :பி.வி.பிரசாத்
Share  
Bookmark and Share

தினமலர் விமர்சனம் » எப்படி மனசுக்குள் வந்தாய்

 
தினமலர் விமர்சனம்

"காதலில் விழுந்தேன்" பட இயக்குநர் பி.வி.பிரசாத்தின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‌மற்றுமொரு காதல் சைக்கோ கதை தான் "எப்படி மனசுக்குள் வந்தாய்" மொத்த படமும்!

கதைப்படி, துணி வெளுக்கும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வசதியான வாழ்க்கைக்கும், வசதியான குடும்பத்து பெண்ணுக்கும் ஆசைப்படும் கேரக்டர் ஹீரோ சீனு எனும் விஷ்வாவினுடையது! அவர் எதிர்பார்த்த மாதிரியே அவருக்கு வசதியான மித்ரா எனும் தன்வி வியாஷின் நட்பும், காதலும் கிடைக்க, அதற்கு தடையாக இருக்கும் ஷாம் எனும் இர்பானை தீர்த்துகட்டவும் துணிகிறார் ஷீரோ சீனு அலைஸ் விஷ்வா! அப்புறம்? அப்புறமென்ன... சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து விஷ்வா தப்பித்தாரா...? மித்ரா எனும் தன்வி வியாஸை கைப்பிடித்தாரா...? என்பது தான் இப்படத்தின் கரு, கதை, களம், காட்சிகள்... இத்யாதி, இத்யாதி... எல்லாம்.

கதையின் நாயகராக சீனு எனும் விஷ்வா, கதையின் நாயகியாக மித்ரா எனும் தன்வி வியாஸ், நல்ல நண்பர் நட்புக்காக உயிரையும் கொடுத்திடும் ஷாமாக இர்பான், போலீஸ் அதிகாரி ரவிகாலே, சதீஷ், மகி, மகேந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் அனைவரும் தங்கள் பங்கை சரியா செய்திருக்கின்றனர்.

எஸ்.டி.விஜய் மில்டனின் பிரம்மாண்ட ஒளிப்பதிவு, ஏ.ஜெ.டேனியலின் இனிய இசை எல்லாம் படத்தின் பெரிய பலம் என்றாலும், காதலுக்காக நண்பனையே ‌கொல்வது, அதை நியாயப்படுத்துவது, "ஊராக்காலி, ஊராக்காலி..." பாடல் "நாக்கமூக்க..." (காதலில் விழுந்தேன்) பாடல் சாயலிலேயே பதிவு செய்யப்பட்டிருப்பதும், படம் பிடிக்கப்பட்டிருப்பதும் உள்ளிட்ட பலவீனங்கள், "எப்படி மனசுக்குள் வந்தாய்" படத்தை எப்படி எப்படியோ ரசிகர்களின் மனதிற்குள் வரவிடாமல் தவிர்க்கப் பார்க்கின்றன! ஆனால் அந்த, தடைகளை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டு ஏதோ ஒரு விதத்தில் "எப்படி மனசுக்குள் வந்தாய்" திரைப்படம் ரசிகர்களின் மனதிற்குள்ளும் வந்துவிடுகிறது என்பது தான் இப்படத்தின் வெற்றி!

ஆமாம்., எப்படி மனசுக்குள் வந்தது...?!


வாசகர் கருத்து (11)

செல்வராஜ்.ச - SALEM,இந்தியா
2013-01-09 06:41:32 Report Abuse
 செல்வராஜ்.ச பாட்டுகள் எல்லாம் சூப்பர் ஹிட்ஸ் எனக்கே ரொம்ப பிடிச்சிருக்கு ரொமாண்டிக் சீன்ஸ் எல்லாமே பட்டய கிளப்புதே ஹீரோ ஹெரோஇன் சூப்பர் கம்மினசன் லாட் ஆப் வாழ்த்துக்கள் வித் ஆல் பெஸ்ட் ஆப் லக்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
munish - chennai,இந்தியா
2012-09-09 10:42:26 Report Abuse
 munish not bad
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
shreya - bangalore,இந்தியா
2012-09-06 10:31:21 Report Abuse
 shreya இனிய இசை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சரண் - p.kottai,இந்தியா
2012-09-01 12:56:37 Report Abuse
 சரண் படம் சூப்பர் ஹீரோ நல்ல இல்ல. பட் நல்லா நடிச்சுருந்தர் . பட்டு எல்லாமே சூப்பர் okkk
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பாரதி - trichy,இந்தியா
2012-08-30 14:31:41 Report Abuse
 பாரதி இந்த உலகத்துலேயே இந்த மாதிரி கேவலமான படம் இதுவரை வந்ததே இல்லை இதோட இந்த டைரக்டர் ஒழுங்கு மரியாதையா சினிமாவ விட்டு போய்ரனும் இனிமேல் படம் எடுத்தான் மவனே செத்தடா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in