Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

வஞ்சிக்கோட்டை வாலிபன்

வஞ்சிக்கோட்டை வாலிபன்,
16 ஜூலை, 2009 - 00:00 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » வஞ்சிக்கோட்டை வாலிபன்

கந்தர்வா செலுலாயிட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கிருத்திகா வி.என்.பகவத்சிங் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் வஞ்சிக்கோட்டை வாலிபன். ஷக்தி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ரோமா அறிமுகமாகிறார். மற்றும் நாசர், லால், சரண்யா, தணிகல பரணி, லதா, சத்யன், ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கிறார். இசை: சங்கர், பாடல்கள்: கவிஞர் வாலி, எடிட்டிங்: கிருத்திகா, ஸ்டன்ட்: சூப்பர் சுப்பராயன், நடனம்: தினேஷ், ஷோபி. கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன்: எஸ்.கே.ஜீவா, இவர் புதுமைபித்தன. லவ்லி ஆகிய படங்களை இயக்கியதுடன் விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் படத்துக்கு கதாசிரியர் என்பது கூடுதல் தகவல்.

வஞ்சிகோட்டை வாலிபன் குறித்து இயக்குனர் ஜீவா கூறுகையி்ல், "பொதுவாக பெண்களின் மனதை பூவுக்கு ஒப்பிட்டு சொல்வார்கள். ஆனால் இந்தப் படத்தின் கதாநாயகி ரோமாவோ ஆண்களின் குணாதி சியத்தை பெற்றவர். தனது மனதுக்குள் எவரும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக தனது இதயத்தையே கோட்டையாக்கி வாழ்ந்து வருகிறார். அப்படிப்பட்ட பெண்ணின் இதயத்தில் நுழைந்த ஒரு வாலிபனின் காதல் கதையே இது. காதல், மோதல், ஆக்ஷன், காமெடி கலந்த கதை" என்றார்.

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in