Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

தோப்பில் ஜோப்பன் (மலையாளம்)

தோப்பில் ஜோப்பன் (மலையாளம்),thoppil joppan (malayalam)
12 அக், 2016 - 08:23 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தோப்பில் ஜோப்பன் (மலையாளம்)

நடிகர்கள் : மம்முட்டி, மம்தா மோகன்தாஸ், ஆண்ட்ரியா, சலீம் குமார், ஹரிஸ்ரீ அசோகன், அலான்சியர் லே, ரெஞ்சி பணிக்கர்

டைரக்சன் ; ஜானி ஆண்டன


மம்முட்டியை வைத்து ஏற்கனவே மூன்று படங்களை இயக்கியுள்ள ஜானி ஆண்டனி, நான்காவது முறையாக அவருடன் கூட்டணி சேர்ந்துள்ள படம் தான் இந்த 'தோப்பில் ஜோப்பன்'.


பள்ளியில் படிக்கும் வயதிலேயே தனது ஊரை சேர்ந்த ஆண்ட்ரியாவை காதலிக்கிறார் மம்முட்டி.. ஆனால் கோபக்கார மம்முட்டியின் தந்தை, மகனை கண்டிக்க, பெரிய ஆளாகி பணத்துடன் திரும்பிவந்து ஆண்ட்ரியாவை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஊரைவிட்டு ஓடிப்போகிறார் மம்முட்டி.. காலங்கள் உருண்டோட ஊருக்கு திரும்பும் மம்முட்டி ஆண்ட்ரியாவை தேடிச்செல்ல, அவருக்கோ அன்றுதான் வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது.


காதல் தோல்வியால் குடிக்கு அடிமையாகும் மம்முட்டி வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்ய மறுக்கிறார். நண்பர்களே வாழ்க்கை என நாட்களை ஓட்டுகிறார்.. இந்நிலையில் எதிர்பாராத விதமாக டாக்டரான மம்தா மோகன்தாஸ் மம்முட்டியின் வாழ்வில் குறுக்கிடுகிறார். மம்முட்டியும் அவர்பால் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்க்கப்படுகிறார். தனக்கு ஏற்கனவே காதலன் உண்டு என்றும், அவரை ரிஜிஸ்டர் திருமணம் செய்துகொள்ள மம்முட்டிதான் உதவவேண்டும் என்றும் திடீரென மம்முட்டியின் இதயத்தில் குண்டு போடுகிறார் மம்தா.


இந்த காதலும் கைவிட்டுபோக, விரக்தியாகும் மம்முட்டியை, குடிப்போர் மறுவாழ்வு மையத்திற்கு கட்டாயப்படுத்தி அனுப்பிவைக்கிறார் அவரது அம்மா.. அதன்பின் அவரது வாழ்க்கையில் மீண்டும் இந்த இரண்டு பெண்களும் குறுக்கிடுகிறார்கள். மம்முட்டியின் திருமணம் விஷயத்தில் மீண்டும் ஏதாவது அதிசயம் நடந்ததா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

என்ன.? மம்முட்டிக்கு காதல் ஸ்டோரியா, என ஆச்சர்யப்பட வேண்டாம். மம்முட்டி அந்த கேரக்டரை ஜஸ்ட் லைக் தட் அழகாக செய்துவிட்டு போகிறார்.. ஆண்ட்ரியாவுக்கும் அவருக்குமான காதலை விட, மம்முட்டி-மம்தா எபிசோட் கலகலப்பாக நகர்கிறது. 'தோப்பில் சோபன்' என்கிற அந்த 'அச்சாயன்' கேரக்டரில் கனகச்சிதமாக பொருந்தி காமெடி, சென்டிமென்ட், ஆக்சன் என படத்தை கலகலப்பாக நகர்த்தி செல்கிறார் மம்முட்டி.


இரண்டு கதாநாயகிகளில் ஆண்ட்ரியா வசனங்கள் அதிகம் பேசாமல் பார்வையாலேயே தனது பங்கை சரிவர செய்திருக்கிறார். மம்தா மோகன்தாஸ் வழக்கம்போல துறுதுறு பெண்ணாக ஆண்ட்ரியாவை ஓவர்டேக் பண்ணுகிறார்.. படம் முழுவதும் மம்முட்டியின் நண்பர்களாக வரும் அலான்சியர் லே, சஜு நவோதயா உட்பட அந்த நான்குபேரும் கலகலப்புக்கு உத்தரவாதம் தருகிறார்கள்.. இடைவேளைக்குப்பின் பாதிரியாராக வரும் சலீம்குமாரின் ரீ என்ட்ரி சூப்பர்.. குடிப்பவர்களை திருத்துவதற்காக அவர் போடும் நிபந்தனைகள் பலே ரகம்.


கல்யாண புரோக்கராக ஹரிஸ்ரீ அசோகன், மம்முட்டியின் அம்மாவாக கவியூர் பொன்னம்மா, உள்ளூர் பாதிரியாராக ரெஞ்சி பணிக்கர், மம்முட்டிக்கு வரத்து தோட்டத்திலேயே சொந்தமாக சாராயம் காய்ச்சித்தரும் கோட்டயம் பிரதீப் என பலரும் நிறைவான கதாபாத்திரங்கள்.. கதை என புதிதாக எதுவும் இல்லாவிட்டாலும் சிக்கல் இல்லாத திரைக்கதையால் மொத்தப்படத்தையும் சின்னச்சின்ன ட்விஸ்ட்டுகளுடன் காமெடியாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ஜானி ஆண்டனி.. வித்யாசாகரின் பின்னணி இசையும் அதற்கு துணை நிற்கிறது.

தோப்பில் ஜோப்பன் ; குடும்பத்துடன் சென்று பார்ப்பதற்கு தோதான படம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in