Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

பைரவா

16 ஜன,2017 - 11:29 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பைரவா

இளைய தளபதி விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பிரபல இயக்குனர் பரதனின் எழுத்து, இயக்கத்தில் பொங்கல் விருந்தாக தைத்திங்களுக்கு, தமிழர் திருநாளுக்கு இரு தினங்கள் முன்னதாகவே திரைக்கு வந்திருக்கும் படம் தான் "பைரவா". பி.நாகி ரெட்டியின் விஜயா புரொடக்ஷன்ஸ் பேனரில் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க பாரதி ரெட்டி தயாரித்திருக்கிறார்.


ஒரு பிரபல தனியார் வங்கியிடம் கடன் வாங்கி விட்டு திருப்பி தராது, தகராறு செய்பவர்களிடமெல்லாம் தன் பாணியில் வசூல் வேட்டை நடத்தும் கலெக்ஷன் ஏஜென்ட் வேலை பார்க்கிறார் பைரவா - விஜய். வங்கி அதிகாரி ஒய்.ஜி.மகேந்திரா வீட்டு கல்யாணத்திற்காக செல்லும் விஜய்க்கும் அத்திருமணத்திற்காக வரும் திருநெல்வேலி மலர் விழி - கீர்த்தி சுரேஷுக்கும், இடையில் நட்பும், காதலும் ஒரு சேர ஏற்படுகிறது. அதே நேரம் மலர் விழி - கீர்த்தியை துரத்தும் ஒரு பெரும் ரவுடி கும்பலையும், மிகப் பெரும்சோகத்தையும், அதற்கு பின்னணியில் இருக்கும் திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ் தாதா ஜெகபதி பாபுவையும் எப்படி நையப்புடைக்கிறார்? எப்படி காதலில் வென்று கீர்த்தியின் சக மெடிக்கல் காலேஜ் நண்பர்களுக்கு நல்லது நடக்க காரணமாகிறார்..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் வழக்கமான விஜய் பட பாணியிலேயே விடை அளிக்க முயன்றிருக்கிறது "பைரவா" படத்தின் கதையும், களமும்.


விஜய், பைரவாவாக வழக்கம் போலவே வெளுத்துகட்டியிருக்கிறார். "இப்ப நிறைய பேருகிட்ட இல்லாத கெட்ட பழக்கம் என்கிட்டே இருக்கு... அது சொன்ன சொல்ல காப்பாத்துறது...." என்ற பன்ச் டயலாக்கை அடிக்கடி உச்சரித்து அதிரடி செய்வதில் தொடங்கி, கபாலியில் ரஜினி மகிழ்ச்சி என்றபடி மகிழ்ச்சியாக உலா வந்தது மாதிரி இதில் சிறப்பு, மிகச்சிறப்பு என்றபடி விஜய், ரஜினி ரூட்டை பின்பற்றுவது வரை சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார். அதே மாதிரி வில்லன் ஜெகபதி பாபுவிடம் சென்னையில் இருந்தபடி போனில்,"கசாப்புக் கடையில ஆடு வெட்ட ஆரம்பிச்சு, காசுக்காக ஆளவெட்டி கல்லூரி ஆரம்பிச்சு, கல்வி தந்தை, கல்வி வள்ளல்லுன்னு உனக்கு நீயே பேரை போட்டுக்கிட்டு..." பண்ற கூத்தெல்லாம் தெரியும். என்ன உனக்கு யாருன்னு தெரியுமா.? எனக் கேட்டு நையாண்டி செய்வது வரை நச் சென்று ரசிகனை டச் செய்திருக்கிறார். யார் ரா யார் ரா.? இவன் ஊரைக் கேட்டா தெரியும்.. என்னும் பின்னணி ரிதம் மிரட்டல்.


திருநெல்வேலி மலர் விழியாக கீர்த்தி சுரேஷ் செம கச்சிதம். விஜய்யை கீர்த்தி சந்திக்கும் முதல் சந்திப்பு செம ரசனை. விஜய்யுடன் கீர்த்தியை பார்க்கும் ரவுடிகள், டிராபிக் போலீஸ்... உள்ளிட்ட எல்லோரும் அண்ணி, அண்ணி... என விஜய்யின் ஜோடியாக அழைக்க, டென்ஷன் ஆகும் கீர்த்தி சுரேஷ் ஒரு பொறுக்கி பூதமும், ஒரு போலீஸ் பூதமும்... சொன்னதால நான் அண்ணியும் கிடையாது, நீ அண்ணனும் கிடையாது... என குதிக்கும் இடங்கள் செம ஹாஸ்யம். கீர்த்தி செம திருப்தியாய் தன் நடிப்பை செய்திருக்கிறார் பூர்த்தி.


"நம்ம அப்பன் ஏழையா இருந்தா அது விதி... மாமனார் ஏழையா இருந்தா அது நமக்கு நாமே பண்ணிக்கிற சதி... அதனால பணக்கார பெண்ணா பார்த்து செட்டில் ஆயிடுணும்... அது தான் மதி..." என்றபடி காமெடி சமரம் வீசும் சதீஷ், முன் பாதி படத்தை தூக்கி நிறுத்துகிறார்.


வில்லன் பெரிய கண்ணு பி.கே எனும் ஜெகபதி பாபு, கசாப்பு கடையிலிருந்து மெடிக்கல் காலேஜ் வரை வளர்கிறார். சரத் லோகித்தாஸ், கோட்டை வீரனாக டேனியல் பாலாஜி ஜெகபதியின் கையாள் ஸ்ரீமன், ‛இன்ஸ் ஹரீஷ் உத்தமன், ஆடுகளம் நரேன், காமெடி - தம்பி ராமைய்யா, பேராசிரியர் மாரிமுத்து, வக்கில் சண்முகராஜன், வைஷாலியாக வரும் புதுமுகம், நீதிபதியாக வரும் அண்ணி மாளவிகா... உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


பிரவின் கே.எல்.லின் கத்திரி விஜய் படம் என பயந்து பயந்து கத்தரித்திருப்பதால் தானோ என்னவோ கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் 50 நிமிட (168.33 நிமிடம்) படமாக நீள்....கிறது. பாவம்!


எம்.சுகுமார் ஒளிப்பதிவில், ஒவ்வொரு காட்சியும் ஒவியப்பதிவு. சந்தோஷ் நாராயணனின் இசையில் "பட்டையைக் கிளப்பு, குட்டையைக் குழப்பு......", "மஞ்சள் மேகம் என் மஞ்சள் மேகம்.." , "அழகிய சூடான பூவே..." உள்ளிட்ட பாடல் காட்சிகளும் பின்னணி இசையும் சிறப்பாய் செவிசாய்க்க வைக்கின்றன.


இயக்குனர் பரதனின் எழுத்து, இயக்கத்தில், கிளாஸ் ரூம்ல வச்சு குழந்தை எப்படி பிறக்கும்னு பச்சை தமிழ்ல சொல்லு என மெடிக்கல் கல்லூரி மாணவி கீர்த்தியிடம் பேராசிரியர் மாரிமுத்து கேட்பதும், அதையே விஜய், புதுக்கல்யாணம் ஆனவர் மகளிடம் கேட்க சொல்லி விஜய் போன் போட்டு கொடுத்து கலங்கடிப்பதும் என்ன தான் ஹீரோயிசத்திற்காக காட்சி படுத்தப்பட்டிருக்கிறது... என்றாலும் படு விரசமாக இருக்கிறது.


அதே மாதிரி கீர்த்தியின் அக்கா புருஷன் ஹரீஷ் உத்தமன், அயோக்கியராகவே இருப்பது... அவரை ஆம்பளையே இல்லை... என அவர் மனைவியே சொல்வது உள்ளிட்ட சீன்களிலும் தம்பி ராமையாவுடனான விஜய்யின் காமெடி சீன்களிலும் ரசிகன் ரொம்பவே நெளிகிறான். அதே மாதிரி இன்கம்டாக்ஸ் ரெய்டு அதிகாரியாக விஜய் அவதாரம் எடுப்பதெல்லாம் ரொம்ப ஓல்டு மாடல் என்பதை இயக்குனர் பரதனிடம் யாராவது சொல்லியிருக்கலாம்.


அவ்வாறு சொல்லாதது உள்ளிட்ட குறைகளை தவிர்த்து விட்டு, "ஒருத்தன் டைமிங்கை மட்டும் சரியா கிப் அப பண்ணிட்டான்னா அவன் தனக்கு டைம் சரியில்லைன்னு சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது", "நேர்மையான அதிகாரிகள் எல்லாம் தற்கொலை பண்ணிட்டு சாகறதும் அதுக்கு காரணமானவங்க சந்தோஷமாதிரியறுதும், இன்னைக்கு சர்வ சாதாரணமா அலைவதும் சகஜமா அயிடுச்சுல்ல...", "இன்னைக்கு யாருகிட்டேயும் இல்லாத கெட்ட பழக்கம் என்கிட்டே இருக்கு... அது சொன்ன சொல்ல காப்பாத்துறது...","சேமிச்ச உணவு பழசு, பிரிட்ஜ்ல வச்சு சாப்பிடற மாதிரி... வேட்டையாடி சாப்பிடுறது தான் பிரஷ்ஷா இருக்கும்..." என்பது உள்ளிட்ட "பன்ச் " டயலாக்குகள் விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தலாம்!


ஆகமொத்தத்தில், "பைரவா - சற்றே குறைவா" தெரியுது!



வாசகர் கருத்து (76)

Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
08 பிப்,2017 - 14:41 Report Abuse
Murugan நானும் 20 யூரோ தண்டம் செய்து இந்த படத்தை பார்த்தேன்.செம மொக்க படம் .நான் யாருடைய ரசிகன் இல்லை ஒரு சினிமா ரசிகன்.ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அஜித்,விஜய் ரசிகர்கள் போட்டியாக ஒருவரை ஒருவர் குறை சொல்வதை நிறுத்தி உண்மையான நல்ல சினிமா ரசிகனாக படத்தை பாருங்கள். எங்களைமாதிரி நடுநிலையாளர்கள் பார்ப்பது இல்லையென்று முடிவுக்கு வந்தால் உங்கள் தலைவனும் இருக்க மாட்டான், நீங்களும் அடித்து கொள்ளமுடியாது. உங்களுக்காக தான் நாங்கள் பேசுகிறோம் எவ்வளவு பணம் செலவு செய்து படம்பார்க்கிறோம் (குடும்பத்துடன் செல்பவர்களுக்கே வலி தெரியும்) ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பேசிய வீர வசனம் எல்லாம் எங்கே
Rate this:
G.Balasubramanian - namakkal,இந்தியா
31 ஜன,2017 - 14:52 Report Abuse
G.Balasubramanian இதில் படம் சரி இல்லைனு சொன்னவங்க அனைவரும் அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள்தான் சாதாரண மற்றும் பேமிலி ஆடியன்ஸ் அனைவரும் படம் நன்றாக உள்ளது என்றுதான் சொல்கின்றனர். அஜித் நடித்த மிக பெரிய வெற்றி படம் மங்காத்தா அந்த படத்தை குடும்பத்தோடு பார்த்து நல்லா இருக்குனு சொல்வார்களா.
Rate this:
PADMANABHAN R - Chennai,இந்தியா
27 ஜன,2017 - 16:06 Report Abuse
PADMANABHAN R நேற்றுதான் ஏன் பையனின் தொந்திரவு தாங்காமல் ரூபாய் ஐநூறு செலவு செய்து தியேட்டரில் சென்று பார்த்தேன். குப்பை படம். இப்பொழுதெல்லாம் ஒரே நேரத்தில் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டு பல நூறுகளை ரசிகர்களிடம் இருந்து பிடுங்கி ஒரு வாரம் ஓடாத படம் எல்லாம் வெற்றி படம் என கும்மாளமிடுகிறார்கள். இந்த இடத்தில நான் குறிப்பிடுவது மக்கள் திருந்த வேண்டும். தியேட்டர்களில் தண்ணீர் பாட்டில் கூட எடுத்துச்செல்ல அனுமதிப்பதில்லை. மூன்று பேர் படம் பார்க்க திரையரங்கம் சென்றால் குறைந்தது ரூபாய் ஆயிரம் செலவாகிறது. ஒரு காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற தரமான படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். இது மக்களை சென்றடையும். திரையரங்குளில் கட்டணம் குறைக்கப்படும். இன்று தமிழில் பெயர் வைத்தாலே வரிவிலக்கு. வரிவிலக்கு பெறுவதற்காக தமிழில் பெயர் வைக்கும் அளவிற்கா தமிழ் தரம் தாழ்ந்துவிட்டது. குப்பை படத்திற்கெல்லாம் மக்களின் வரிப்பணத்தை வீண் செய்கிறார்கள். இதில் CD இல் பார்க்காதீர்கள் என உபதேசம் வேறு. நான் இந்தப்படத்தை மட்டும் சொல்லவில்லை. ஹீரோயிசம் என்ற பெயரில் இப்பொழுது வருகின்ற அனைத்து படங்களுமே இப்படித்தான் இருக்கிறது. அந்த காலத்து நடிகர்கள் போல் இல்லாமல் கஷ்டப்படாமல் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். மக்கள் திருந்தி இதுமாதிரி படங்களை ஒதுக்கவேண்டும்.
Rate this:
Randy - tirupur  ( Posted via: Dinamalar Windows App )
27 ஜன,2017 - 13:03 Report Abuse
Randy அருமை
Rate this:
jageetha - MUNNAR,இந்தியா
24 ஜன,2017 - 12:38 Report Abuse
jageetha விஜய் அண்ணா ஆல்வேஸ் சூப்பர். சூப்பர் ஹிட் மூவி.வாழ்க விஜய் அண்ணா.
Rate this:
மேலும் 71 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
பைரவா தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in