Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

வார்கிராப்ட் (ஆங்கிலம்) 3D

வார்கிராப்ட் (ஆங்கிலம்) 3D,Warcraft 3d
  • வார்கிராப்ட் (ஆங்கிலம்) 3D
  • இயக்குனர்:
13 ஜூன், 2016 - 12:32 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வார்கிராப்ட் (ஆங்கிலம்) 3D

தீய சக்திகளிடமிருந்து மக்களை காப்பாற்றப் போராடும், சூப்பர் ஹீரோக்களின் கதை; ஹாலிவுட் கல்லில் பலமுறை சுடப்பட்ட தோசை தான் என்றாலும், இது கொஞ்சம் ஸ்பெஷல்!


மனிதர்களைக் கொன்று தன் சக்தியை பெருக்கிக் கொள்ளும் வேற்று கிரக அரசன் குல்டன், பெரும் படையோடு பூமிக்குள் நுழைகிறான். அதீத சக்தி கொண்ட பாதுகாவலர்களான மேடிவ், கட்கர் மற்றும் தன் படையோடு தீய சக்திகளை எதிர்க்கப் புறப்படுகிறான், அரசன் லேன் வ்ரின்; இவர்களோடு இணைகிறாள், தீய சக்திகளின் இனத்தில் இருந்து சிறைபிடிக்கப்பட்ட கரோனா! யுத்தத்தில் அரசன் லேன் வ்ரின் கொல்லப்படுகிறான்! படைத்தளபதி லோதர், அரசனின் போர்வாளை கையிலேந்த, அடுத்த பாகத்திற்கு விதை துாவி, வணக்கம் சொல்கிறது கதை!


அரதப்பழசான கதை தான் என்றாலும், கதைக் களத்தையும், கதை மாந்தர்களையும் தேர்ந்தெடுத்த விதத்தில் ஜெயித்திருக்கிறது படம்; இயக்குனர் டங்கன் ஜோன்ஸ் பாராட்டுக்குரியவர்! லோதராக ட்ரேவிஸ் பிமலும், மேடிவாக பென் பாஸ்டரும், கட்கராக பென் ஷெனட்செரும், அசத்தல் நடிப்பால் அசர வைக்கின்றனர்!


பிரம்மாண்ட ஓநாய்களும், ராட்சத பறவையும், ரத்தம் தெறிக்கும் யுத்த களமும் முப்பரிமாணத்தின் உச்சம்! சைமன் டக்கனின் ஒளிப்பதிவும், பால் ஹிர்ஷின் கத்தரிப்பும், ரமின் ஜாவடியின் இசையும் திரைக்கதைக்கு வேகம் தந்திருக்கும் பூஸ்டர்கள்! நிச்சயம் முப்பரிமாண பிரியர்களை சிலிர்க்க வைக்கும், இந்த யுத்தம்!




மொத்தத்தில், ‛வார்கிராப்ட் 3D - அதகளம்!




ரசிகன் குரல் : இந்த, ஹாலிவுட்காரன் மட்டும் காப்பாத்தலேன்னா, நம்ம உலகம் எப்பவோ அழிஞ்சிருக்கும்யா!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in